தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பிரபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்துக் கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா சார் குடியிலிருந்து நிப்பாட்டுனா தான் நான் ஊருக்கு போக முடியும் என்று நந்தினி நினைக்கிறார். நான் எடுத்த முதல் முயற்சியே எனக்கு சாதகமா தான் அமைஞ்சிருக்கு என்று சொல்லுகிறார்.
சூர்யாவிற்கு வந்த சரக்கு பாட்டில்களில் நந்தினி எதையோ கலந்துவிட சூர்யா குடிக்க முடியாமல் வாந்தி எடுக்க சூர்யாவின் நண்பர் சூப்பராக இருக்கிறது என்று குடிக்கிறார். உடனே சூர்யா நிஜமாவே இது நல்லா இருக்கா மச்சான் என்று கேட்க இதுதான் சரக்கு என்று ரசிச்சு குடிக்கிறார். நந்தினி இதையெல்லாம் பார்த்துவிட்டு சீக்கிரமே இவரை குடியிலிருந்து நிறுத்திடறேன் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
