தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா சரக்கு பாட்டிலை குடித்துவிட்டு வாந்தி எடுக்க அவரது நண்பர் குடித்து அவரும் துப்ப போக உடனே சூப்பராக இருக்கிறது என்று சொல்லுகிறார். உடனே மறுபக்கம் திரும்பி என்ன நந்தினி நீ ஏதோ கடுக்காய் கசாயம் கலந்து இருக்கான்னு சொன்ன வாயிலேயே வைக்க முடியல என்று யோசித்துக்கொண்டு சூர்யாவிடம் இதுவரைக்கும் நீ இந்த சரக்கை என் மச்சான் என் கண்ணில் காட்டல என்று சொல்லி போதை ஏறியது போல் நடிக்க சூர்யா அவரை காரில் உட்கார வைக்கிறார். மீண்டும் சூரியா நிஜமாவே இவனுக்கு போதை ஆயிடுச்சா அப்போ எனக்கு மட்டும் ஏன் புடிக்கல என்று மீண்டும் குடிக்க மீண்டும் வாயிலிருந்து துப்பி விடுகிறார் ஒருவேளை உடம்புல ஏதாவது பிரச்சனையா ஆயிட்டு இருக்குமா என்று சூர்யா யோசிக்கிறார்.
மறுபக்கம் நந்தினி நடந்து வந்து கொண்டிருக்க காரில் வந்த சிலர் ஒரு பெண்ணை கீழே தள்ளி விட்டு செல்கின்றனர் உடனே நந்தினி அவரை விசாரிக்க அவர் கிராமத்தில் இருந்து வந்ததாகவும் காதலித்து பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டதாகவும், ஒருத்தனை நம்பி வந்து இப்படி ஏமாந்து நிக்கிறேன் இது எந்த இடம் கூட தெரியல என்று அந்த பெண் சொல்லுகிறார். டெய்லி வேலைக்கு போகாமல் குடிச்சுக்கிட்டே இருந்தா அதைக் கேட்டதுக்கு என்னை இப்படி தள்ளிவிட்டுட்டு போறான் என்று நந்தினி இடம் சொல்லுகிறார்.
உடனே நந்தினி நம்ப வீட்டுக்கு கூட்டிட்டு போனா சுந்தரவல்லி அம்மா ஏதாவது சொல்லுவாங்க இப்போ என்ன பண்றது என்று யோசிக்க, அந்தப் பெண் ரேணுகா நான் வீட்டு வேலை எல்லாம் நல்லா செய்வேன் என்று பேசிக்கொண்டிருக்க சூர்யா வருகிறார். என்ன நந்தினி இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்க யார் இது என்று கேட்க, அந்தப் பெண் என் பெயர் ரேணுகா என்று சொல்ல நந்தினி நடந்த விஷயங்களை சொல்ல சரி வீட்டுக்கு கூட்டிட்டு வா என்று சொல்லுகிறார். உடனே மூவரும் வீட்டிற்கு வந்து இறங்க நந்தினியிடம் ரேணுகா வீடு ரொம்ப பெருசா இருக்குமா நல்லா இருக்கு என்று பேசிவிட்டு கிச்சன் எங்க இருக்குன்னு சொல்லுங்க நான் போய் பாத்திரம் கழுவுறேன் என்று சொல்ல நந்தினி வந்தவுடனே பாத்துக்கலாம் வா காமிக்கிறேன் என்று கூப்பிட்ட அந்தநேரம் பார்த்து சுந்தரவல்லி யார் இவ என்று கேட்கிறார். உடனே ரேணுகா நடந்த விஷயங்களை சொல்ல தோட்டக்காரி கண்டவங்களும் வந்து தங்கத்துக்கு சோறு போடுறதுக்கும் என் வீடு என்ன சத்திரமா சாவடியா என்று திட்ட, சூர்யா சார் தாமா என்று நந்தினி பேச வர நீ பேசாத இவளே வேலைக்காரி தான் என்று சொல்லி அசிங்கப்படுத்தி ரேணுகாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல சூர்யா தடுத்து நிறுத்தி இவங்க இங்கதான் வேலை செய்வாங்க உள்ள போங்க என்று சொல்லுகிறார். உடனே அருணாச்சலம் அங்கு வர, சூர்யா நந்தினி இந்த வீட்ல எல்லா வேலையும் பாக்குறா ஆனா ரேணுகா இதுக்கு மேல நந்தினியோட எல்லா வேலையும் பாத்துப்பா நான் சம்பளம் கொடுத்துவிடுவேன் என்று சொல்லி அனுப்பி வைக்க சுந்தரவல்லி டென்ஷனாக கிளம்பி விடுகிறார்.
மறுபக்கம் அர்ச்சனா ரேணுகாவிற்கு போன் போட்டு விசாரிக்க பிறகு ரேணுகா அர்ச்சனா அனுப்பிய ஆள் என தெரிய வருகிறது.நீங்க சொன்ன மாதிரி நான் பண்ணிட்டேன்மா என்ன பண்ணனும் என்று கேட்க சூர்யா எங்க போறான் எங்க வரான் பண்றான்னு எல்லாத்தையும் நீ கவனிக்கணும் நீ க்ளோசா பழகு அப்புறம் நான் உனக்கு என்ன பண்ணனும்னு சொல்றேன் என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார். சூர்யா ரூமில் சரக்கு பாட்டில்களுடன் தனித்தனியாக பேசிக் கொண்டிருக்கிறார் அந்த நேரம் பார்த்து நந்தினி வந்து சூர்யா பேசுவதை பார்த்து சிரித்துக் கொண்டு நிற்கிறார். சூர்யா சரக்கு பாட்டில் பார்த்து உங்களுக்கெல்லாம் என்னடா ஆச்சு ஏன்டா போதையக மாற்றிங்க ஏன்டா தம்பி இப்படி பண்றீங்க முதல்ல நீங்க எல்லாரும் வரிசையா வாங்க என்று சொல்லி கையில் அனைத்து பாட்டில்களையும் எடுத்துக் கொள்கிறார்.
பிறகு பாட்டில்கள் அனைத்தையும் பெட்டில் வரிசையாக படுக்க வைத்து விட்டு இன்னைக்கு உங்கள டெஸ்ட் பண்ணி விடுறேன் என்று பேசிக் கொண்டிருக்க நந்தினி ஒன்றும் தெரியாதது போல் வந்து என்னாச்சு சார் இந்த நேரம் நல்லா குடிச்சிட்டு ஜாலியா இருப்பீங்க இப்ப என்னன்னா தனியா பேசிகிட்டு இருக்கீங்க என்று சொல்ல அதெல்லாம் விடு நந்தினி நான் காபி எப்படி குடிப்பேன் என்று கேட்க பாதி காபி கீழே ஊத்திட்டு மீதி சரக்கு கலந்து குடிப்பீங்க என்று சொல்ல குடிப்பேன்ல போதை அப்படி ஏறும் ஆனால் இப்போ அப்படி எதுவுமே இல்ல இவங்களுக்கெல்லாம் என்ன ஆச்சுன்னு தெரியல என்று சொல்லி குழம்புகிறார்.
கொஞ்ச நேரம் கழித்து நீ போய் கல்யாணத்தை கூட்டிட்டு வா இதுக்கு இப்பவே ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சொல்லி நந்தினியை போக சொல்ல நந்தினி கிச்சனை வந்து கல்யாணத்தை கூப்பிடுகிறார். சூர்யா சார் உங்களை கூப்பிடுகிறார் என்று சொல்ல சின்னையாதான சரி உடனே போறேன் என்று சொல்ல கல்யாணத்தை நந்தினி இழுத்து நிற்க வைக்கிறார். இப்ப அவரு உங்களை எதுக்கு வர சொல்றாரு தெரியுமா அவரு குடிக்க கூப்பிடுகிறார் என்று சொல்ல அவர் முன்னாடி எப்படி குடிக்க முடியும் நான் மாட்டேன் என்று சொல்லுகிறார் நீங்க மாட்டேன்னு சொன்னாலும் அவரு கண்டிப்பா குடிக்க சொல்லுவாரு என்று சொல்லுகிறார்.
நான் சொல்ற மாதிரி நீங்க அங்க பண்ணா போதும் நீங்க குடிச்சா தான் சூர்யா சர குடியிலிருந்து மீட்க முடியும் என்று சொல்லி நந்தினி காதில் ஐடியா சொல்லுகிறார். ரூமுக்கு வந்த கல்யாணம் சூர்யா கூப்பிட்டு சரக்கு பாட்டில் எடுத்து கிளாசில் ஊத்த சொல்கிறார். ஊத்திவிட்டு கல்யாணம் சூர்யாவிடம் கொடுக்க சூர்யா நீ குடி என்று சொல்லுகிறார் நானா உங்க முன்னாடி எப்படி ஐயா குடிக்கிறது என்று சொல்ல நாம் என பின்னாடி காமிக்கிறேன் குடிக்கிறியா என்று கேட்டு இப்ப எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் நீ குடி என்று வற்புறுத்த நந்தினி சிரிக்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் நந்தினி இடம் அவன கண்காணிச்சிக்கிட்டே இருக்கணும் இல்லன்னா திருப்பியும் குடிச்சிடுவான் என்று சொல்ல, உடனே நந்தினி சரிங்கய்யா இப்ப என்ன பண்ணனும் என்று கேட்கிறார். நந்தினி இடம் அருணாச்சலம் எதையோ சொல்லுகிறார்.
வீடியோ கால் மூலம் ரேணுகா நந்தினி ரூம் காட்ட ஒரே ரூம்ல பாய் தலையனை இருக்குன்னா இருக்கு அப்போ தனித்தனியா தான் தூங்குறீங்களா என்று அர்ச்சனா தெரிந்து கொள்கிறார். கல்யாணம் குடிபோதையில் இருப்பது போல் நடிக்க சுந்தரவல்லி எதிரில் வந்து நிற்க,அதிர்ச்சியாகி நிற்கிறார்.இதனை சூரியா பார்த்து விட என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 05-02-25