Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தப்பித்து ஓடிவரும் நந்தினி, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Moondru Mudichu Serial Promo Update 05-07-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி எங்கு போய் இருப்பா என்று குடும்பத்தினர் பேசிக் கொண்டிருக்க சுந்தரவல்லி இப்ப எதுக்கு தேவையில்லாம அவளை பத்தி பில்டப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். கொஞ்ச நேரத்தில் இன்ஸ்பெக்டர் வர அருணாச்சலம் சூர்யா அவரை உள்ளே வரவேற்று பேசுகின்றனர். போலீஸ் அருணாச்சலத்திடம் எந்த பிரச்சனையும் இல்லாம எப்படி காணாம போயிருக்க முடியும் என்று கேட்க சூர்யா யாராவது கடத்திருக்கலாமே என்று சொல்லுகிறார். நாங்க சிசிடிவி செக் பண்ணனும் உங்க வீட்டுக்கு வர வழியில கொஞ்சம் தூரத்திலிருந்து தான் அவங்க காணாமல் போய் இருக்காங்க ஒரு போன் கிடைச்சிருக்கு என்று சொல்லிக் கொடுக்க சூர்யா வாங்கி இது நந்தினி ஓட போன் தான் என்ன சொல்ல சரி நாங்க விசாரிக்கிறோம் என்று கிளம்புகின்றனர்.

பிறகு சூர்யா நந்தினிக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா நான் உங்களுக்கு சும்மா விடமாட்டேன் சொல்லிவிட்டு நான் நந்தினியோட தான் வருவேன் என சொல்லிவிட்டு கிளம்பி போக மறுபக்கம் நந்தினிக்கு சாப்பாடு மட்டும் வர கதவை தட்டிப் பார்த்தும் திறக்காமல் இருக்கின்றனர். மறுபக்கம் சுந்தரவல்லி வட்டிக்காரனுக்கு போன் போட்டு எதுக்கு திரும்பத் திரும்ப பண்ணிக்கிட்டு இருக்க நானே பண்ண மாட்டேன்னா என்று சொல்ல இப்போ அந்த வேலைக்காரி எப்படி இருக்கா என்று கேட்க, டெல்லி அதுக்காக தான் நான் உங்களுக்கு போன் பண்ணேன் நாங்க அவளை கடத்துறத்துக்கு ப்ளான் போட்டோ ஆனா நடக்கல என்று சொல்ல சுந்தரவல்லி என்ன சொல்ற என்று அதிர்ச்சியாகி கேட்கிறார். பிறகு டெல்லி நந்தினியை கடத்த ஆள் அனுப்பியதை சொல்லுகிறார்.

அவர்களும் நந்தினியை பின்னாலேயே ஃபாலோ பண்ணி வருகின்றனர். நந்தினி அவர்களிடம் எதுக்கு என் பின்னாடி வரீங்க என்று கேட்க அவர்கள் வம்பாக பேச நந்தினி சென்று விடுகிறார். பிறகு போலீஸ் வண்டி வருவதை பார்த்து அவர்கள் சென்று ஒளிந்து கொள்கின்றனர். பிறகு மீண்டும் நந்தினியை பாலோ பண்ணி வர போலீஸ் அவர்களின் நிறுத்தி விசாரித்து துரத்தி விடுகின்றனர்.இந்த விஷயத்தை சுந்தரவல்லி இடம் சொல்ல அப்போ நீ இல்லனா நான் வேற யார் கடத்திருப்பாங்க என்று சொல்ல எனக்கே இதை ட்விஸ்டா இருக்கு எத்தனை பேர் தான் நந்தினி கடத்துவாங்க என்று டெல்லி கேட்கிறார். என் புருஷனும் பையனும் பேய் புடிச்ச மாதிரி சுத்திக்கிட்டு இருக்காங்க, அவ்வளவு வேற யாரும் கடத்திருக்கிறார்கள் என்று எப்படி கண்டுபிடிக்கிறது என்று கேட்கிறார்.

என் பையன் வெறி புடிச்ச மாதிரி இருக்கான். உன் மேல கண்டிப்பா உனக்கு சந்தேகம் இருக்கும் நீ உஷாரா இருந்துக்கோ என்று சொல்லுகிறார். உடனே டெல்லி இந்த வேலையை கரெக்டா முடிச்சிருந்தா லம்பா பணத்தை அடிச்சி இருக்கலாம் தயவுசெய்து என் கண்ணு முன்னாடி இருக்காத போ என்று துரத்தி விடுகிறார். சுந்தரவல்லி யார் இத செஞ்சி இருப்பா என்று யோசிக்க பிறகு சுதாகருக்கு ஃபோன் போட ஸ்விட்ச் ஆஃப் என வருகிறது. உடனே அவருக்கு வாய்ஸ் நோட்டில் நந்தினிய தோப்பில் போய் பார்த்துட்டு அங்கே இருக்காளான்னு எனக்கு இன்பார்ம் பண்ணுங்க என சொல்லி அனுப்புகிறார்.

மறுபக்கம் டெல்லி ஏற்பாடு செய்த பெண் தான் அவளை கடத்தி வைத்து இருப்பது தெரிய வருகிறது. நந்தினியை கடத்தி வைத்திருக்கும் ரவுடி இடம் அந்தப் பெண்மணி எத்தனை நாளைக்கு தான் டெல்லி அவர் சொல்ற பேச்சை கேட்க முடியும் இந்த வாட்டி லம்பா பணத்தை அடிச்சிடுவோம் என முடிவெடுக்கின்றனர். நீ அவளை பத்திரமா பாத்துக்கோ என்று சொல்லி ஃபோனை வைக்கிறார். பிறகு அந்த ரவுடி நந்தினி இடம் வந்து பேச, தயவுசெய்து என்னை விட்டுடுங்க என்று சொல்லுகிறார். நந்தினியை சாப்பிடச் சொல்லி ரவுடி வற்புறுத்த அமைதியாக இருப்பதால் உனக்கு வேற ஏதாவது சாப்பிட வேண்டுமா என்று கேட்க பிரியாணி வேண்டுமென்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி கடத்தி வைத்திருக்கும் இடத்தில் இருந்து தப்பித்து ஓடி வர சூர்யாவின் கார் ரிப்பேர் ஆகி நிற்க சரி செய்து கொண்டிருக்கிறார்.

விவேக்கிற்கு போன் போட்டு நந்தினி இங்கதான் எங்கேயோ இருக்கா என்று சொல்லி பேச நந்தினி தப்பித்து வெளியில் ஓடி வருகிறார் மறுபக்கம் போலீஸ்காரப் பெண் ஒருவர் வட்டிக்கார பெண்ணிடம் நீ கடத்தி வைத்திருந்த பொண்ணு தப்பிச்சிடா என்று சொல்லுகிறார். நந்தினி ஓடிவர சூர்யா நந்தினியை காப்பாற்றுவாரா?என்ன நடக்கப்போகிறது? என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 05-07-25
Moondru Mudichu Serial Promo Update 05-07-25