Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யாவிடம் உண்மைய சொன்னா நந்தினி, கோபத்தில் மாதவி, மூன்று முடிச்சு ப்ரோமோ அப்டேட்

Moondru Mudichu Serial Promo Update 06-09-24

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் அ.அன்பு ராஜா அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் மாதவி புனிதாவை கூப்பிட்டு சுரேகாவிற்கு காலை சுத்தம் பண்ண சொல்லுகிறார். ஆனால் புனிதா காலேஜ்ல இன்னைக்கு எக்ஸாம் இருக்கு என்று சொல்லியும் கிளீன் பண்ண சொல்லுகின்றனர். வேறு வழி இல்லாமல் புனிதா சுரேகாவின் காலை சுத்தம் செய்ய மாதவி என்ன படிக்கிற என்று கேட்கிறார். விஸ்காம் பைனல் இயர் என்று சொல்ல எத்தனை அரியர் வச்சிருக்க என்று கேட்கிறார். எதுவும் இல்லை என்று சொல்ல எவ்வளவு பர்சன்டேஜ் என்று கேட்கிறார் 90%என்று சொல்கிறார் புனிதா.

அந்த நேரம் பார்த்து நந்தினி அங்கே வருகிறார். புனிதா நீ காலேஜுக்கு போ நான் பாத்துக்குறேன் என்று சுரேகாவின் காலை சுத்தம் செய்து விடுகிறார். பிறகு சுந்தரவல்லி பொண்ணுங்க ரெண்டு பேரையும் தோப்பு சுத்தி பார்க்க போக கூப்பிடுகிறார். சூர்யாவின் அப்பா நந்தினியை சுத்தி காட்ட கூப்பிடுகிறார். நீங்க போயிட்டே இருங்க நான் பின்னால ட்ராக்டர்ல வரேன் என்று நந்தினி கிளம்புகிறார். அனைவரும் வீட்டில் இருந்து கிளம்ப சூரியா டிராக்டரை பார்த்து நான் அதில் வருகிறேன் நீங்க போங்க என்று சொல்லிவிடுகிறார். இதனால் சுந்தரவல்லி கடுப்பாக அவரை சமாதானப்படுத்தி கூட்டி செல்கின்றன.

நந்தினியை பத்மினி பத்மினி நான் வரேன் என்று ட்ராக்டர் ஓட்ட செல்லுகிறார் சூர்யா. பிறகு கோணல் கோணலாக ட்ராக்டரை ஓட்ட நந்தினி நீங்க உட்கார்ந்துக்கோங்க நான் ஓட்டுறேன் என்று சொல்லி நந்தினி ஓட்டுகிறார்.

தோப்பில் எல்லோருக்கும் இளநீர் வெட்டி கொடுக்கும் நந்தினி தேங்காய் விபரங்களை சொன்ன அனைவரும் ஆச்சரியப்படுகின்றன. சூர்யா அந்த நேரம் பார்த்து எங்கோ சென்று விட சுந்தரவல்லி எங்க போனா என்று கேட்கிறார். உடனே சுரேகா எங்க போயிருப்பா எங்கயாவது குடிக்க போயிருப்பான் என்று சொல்லுகிறார். உடனே சூர்யாவின் அப்பாவிடம் நீங்க போய் கூட்டிட்டு வாங்க என்று சொல்ல அவர் கிளம்ப நந்தினி நான் போய் கூட்டிட்டு வரேன் ஐயா என்று வருகிறார்.

அந்த நேரத்தில் நந்தினி சுற்றில் நாலு பேர் நிற்கின்றனர். நந்தினி அவர்களை அடிக்க கை ஓங்க சூர்யா தடுத்து நீ போய் நில்லு நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். பிறகு அனைவரையும் அடித்த சூர்யா ஒருவன் தேங்காய் மட்டையில் கையில் அடிக்க சூர்யாவிற்கு காயம் ஏற்படுகிறது.

நந்தினி உடனே அந்த மட்டை வாங்கி அனைவரையும் அடித்து ஓட விடுகிறார். உடனே காயம் இருக்க இருங்க வர என்று சொல்ல வேணாம் என்று தடுத்து நிறுத்துகிறார். ஒரு நல்ல காரியத்துக்கு வந்துட்டு ஏன் இப்படி நடந்துக்கிறீங்க என்று கேட்க நல்ல காரியமா என்ன என்று கேட்கிறார். உங்க கல்யாண விஷயமா சாமி கும்பிட வந்திருக்கும் உண்மையை நந்தினி சூர்யாவிடம் சொல்லி விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் யாரோ ஒருத்தரோட அந்தஸ்துக்காக, கௌரவத்துக்காக என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சூர்யா சொல்லுகிறார்.

சார் கிட்ட இந்த விஷயம் சொல்லி இருக்க கூடாது என்று எனக்கு தெரியாது என்று நந்தினி சொல்ல, உன் லெவலுக்கு நீ அவன் கிட்ட பேசுனது தப்பு என்று மாதவி சொல்லுகிறார். மாதவி ரஞ்சிதாவை முட்டி போட வைத்து இதுக்கு மேல எதுவும் பக்கம் வந்தேனா அவ்வளவுதான் என்று சொல்லிக் கொண்டிருக்க அங்கே நந்தினி வருகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பாட்டு தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 06-09-24