Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, சூர்யாவிடம் நந்தினி கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Moondru Mudichu Serial Promo Update 07-06-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நான் தான் சம்பந்தம் இல்லாம இந்த கூட்டுக்குள்ள வந்து உங்களுடைய சந்தோஷத்தை கெடுத்துட்டேன் நான் கிளம்புறேன் என்று சொல்ல, மாதவி நிற்க வைத்து சூர்யா கட்டின தாலியை கழட்டி கொடுத்துட்டு போக சொல்லுங்க என்று சொல்ல, இப்ப அத பத்தி பேச வேண்டாம் போக சொல்லு என்று சொல்ல நந்தினியும் வெளியில் வருகிறார். மீண்டும் மாதவி வந்து நந்தினியை கூப்பிட குடும்பத்தினரும் வெளியில் வருகின்றனர். மீண்டும் மாதவி தாலியை கேட்க சுந்தரவல்லி வேண்டாம் என சொல்லுகிறார். உனக்கும் சூர்யாவுக்கு நான் ஒன்னும் இல்லன்னு சொல்லிட்ட இல்ல அப்புறம் எதுக்கு தாலிய போட்டு இருக்க கழட்டி கொடு என்று சொல்ல மாதவி மனதிற்குள் கழட்டாத என்று சொல்லுகிறார். ஆனால் அதையும் மீறி நந்தினி தாலியை எடுத்து நீங்களே கழட்டிக்கோங்க என்று நீட்ட மாதவி கையில் தொட போகிறார்.

தாளில கை வச்சா கை இருக்காது, அது நான் கட்டின தாலி என்ன தவிர வேற யாருக்கும் தொட உரிமை கிடையாது தூரப்போ என்று சொல்லிவிட்டு நந்தினி கையில் பேக் இருப்பதை பார்த்து இது என்ன பேக் ஏதாவது ஊருக்கு போறியா என்று கேட்கிறார். நீங்க தன சார் எங்க வீட்டுக்கு போக சொன்னீங்க என்று சொல்ல நான் சொன்னனா நான் ஏதாவது குடிச்சுட்டு சொல்லி இருப்பேன் நீ உள்ள போ என்று சொல்ல என்ன சார் இது அத்தனை வாட்டி கேட்டேன் அப்போ எல்லாம் தெளிவா உங்க வீட்டுக்கு போய் நீ சந்தோஷமா இருன்னு சொல்லிட்டு இப்ப இப்படி சொல்றீங்க என்று கேட்கிறார். விளையாட்டா சொன்னதெல்லாம் எதுக்கு சீரியஸா எடுத்துக்கிறேன் என்று சொல்ல நந்தினி அழுது கொண்டே எது சார் விளையாட்டு உங்களுக்கு யார் பத்தியும் கவலை இல்லை, எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை உங்களுக்கு நீங்க நினைச்சது நடக்கணும் அதுக்கு நீங்க யாரை எப்படி வேணாலும் பயன்படுத்துவீங்க அப்படித்தானே, அது எப்படி சார் ஒருத்தரால இவ்வளவு சுயநலமா இருக்க முடியாது நான் பேசுனது மட்டும் தான் கரெக்ட்டு என்று எப்படி நினைக்க முடியுது என்று கேட்கிறார்.

என் கனவுல இப்படி மண்ணள்ளி போட்டுட்டீங்களே நான் உங்கள கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க உங்க தங்கச்சி சுரேகா இருக்காங்களே அவங்க கழுத்துல திடீர்னு கல்யாணத்துல அவங்க காலத்துல தாலி கட்டிட்டாங்கன்னா நீங்க என்ன பண்ணுவீங்க பதில் சொல்லுங்க, உங்க வீட்டு பொண்ணுனா ஒரு நியாயம் மத்தவங்க வீட்டு பொண்ணுனா ஒரு நியாயமா உங்க அம்மாவை வெறுப்பேத்தணும்னா நீங்க வேற யார் கழுத்துலயாவது தாலி கட்டிருக்க வேண்டியது தான என் கழுத்துல எதுக்கு கட்டினீங்க என்று அழுது கொண்டே கேட்கிறார். உங்க விளையாட்டுக்கு நீங்க எத்தனை பேரை பலி கொடுத்து இருக்கீங்க தெரியுமா? நீங்க செய்ற வேலையால இந்த குடும்பத்துல எவ்வளவு பிரச்சனை உங்க அப்பா எவ்வளவு பாவம் இன்னைக்கு அவர ஒட்டுமொத்த குடும்பமும் வெறுக்குது அது கூட உங்க கண்ணுக்கு தெரியலையா இது கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா உங்க குடும்ப பிரச்சினையில் என்னமோ பண்ணிட்டு போங்க என் வாழ்க்கையில புகுந்து நீங்க பிரச்சனை பண்ண உங்களுக்கு என்ன உரிமை இருக்கு , அத்து மீறி தாலிய கட்டிட்டு ஒவ்வொரு நாளும் விளையாடிகிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார்.தரிசா இருந்த நிலத்தை எங்க குடும்பமா சேர்ந்து தென்னந்தோப்பா உருவாக்கி இருக்கோம். அங்கு விழும் ஒரு தென்னை மட்டைக்கு கூட நான் ஆசைப்பட்டது இல்ல ஆனா இன்னைக்கு ஊரே சேர்ந்து பணத்துக்காக உங்களை வளைச்சு போட்டு தான் பேசுறாங்க என்று கோபப்படுகிறார்.

என்ன பேசினா கூட பரவால்ல எங்க அப்பாவ எவ்வளவு காயப்படுத்துறாங்க தெரியுமா? இந்த வயசுல அவருக்கு தேவையா என்று கதறி அழுகிறார். என் தங்கச்சிங்களுக்கு கெடச்ச பட்டம் என்ன தெரியுமா? உங்க அக்காவும் பணத்துக்காக போயிட்டா உங்களுக்கு மட்டும் என்ன என்று கேட்கிறார்கள் ஆனால் உங்களுக்கு எந்த கவலையும் இல்லல்ல உங்களுக்கு குடிதான் முக்கியம். நான் இதுவரைக்கும் இவ்வளவு பேசல நீங்க என்ன பேச வச்சுட்டீங்க எதனா தப்பா பேசினா என்ன மன்னிச்சிடுங்க என்று சொல்ல, சூர்யா எதுவும் பேசாமல் சரி நீ கெளம்பு என்று சொல்லிவிட்டு மேலே செல்ல நந்தினியும் பேக்கை எடுத்துக் கொண்டு செல்கிறார். மறுபக்கம் சூர்யா மேலே வந்து கை மேலே பாட்டிலை ஓங்கி அடித்துக் கொள்ள கையில் ரத்தம் வழிகிறது நீ போ நான் செத்தா கூட வராத என்று சொல்லிவிட்டு மயங்கி விழ குடும்பத்தினர் அனைவரும் பதறிப் போய் மேலே வந்து சூர்யாவை எழுப்ப மயங்கி கிடக்கிறார்.

குடும்பத்தினர் அனைவரும் அவரை மருத்துவமனையில் அழைத்து வந்து சேர்க்க டாக்டர் ட்ரீட்மெண்ட் செய்கிறார். வீட்டை விட்டு போகணும்னு முடிவெடுத்தவ போகாம பக்கம் பக்கமா வசனம் பேசிக்கிட்டு இருக்கா என்று சுரேகா சொல்லுகிறார். எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் சூர்யா தைரியமா இருப்பான் ஆனால் இவ போறத்துக்காக அவன் சூசைட் பண்ணிக்க போறான் என்று சொல்லுகிறார். இதெல்லாம் சரி இல்லம்மா என்ற மாதவி சொல்ல என்கிட்ட எதுக்கு சொல்ற உங்க அப்பா கிட்ட சொல்லு அவன் கொலையே செஞ்சாலும் கரெக்ட்னு சொல்லுவாரு என்று சுந்தரவல்லி சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் சூர்யாவை பார்க்க சுந்தரவல்லி உள்ளே கூப்பிட நான் வரல அவன் என்ன எனக்காகவா கையை கிழிச்சுக்கிட்டான் இவ போக கூடாதுன்னு கைய கிழிச்சுக்கிட்டான் என்று கேட்கிறார். நந்தினி சூர்யாவிடம் வந்து ஏன் சார் இப்படி பண்ணீங்க என்று கேள்வி கேட்கிறார்.

எனக்கு என்னோட டாடி ஓட வார்த்தை மீறி என்னிக்குமே பழக்கம் இல்லை அவர் என்ன சொன்னாலும் பண்ணிடுவேன் என சொல்லுகிறார். நான் மடி பிச்சை கேக்குற மாதிரி வழக்கம் போல கேட்கிறேன் நீயும் என் பையனும் சேர்ந்து வாழணும்னு சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 07-06-25
Moondru Mudichu Serial Promo Update 07-06-25