Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரவல்லி வீட்டுக்கு வந்த அர்ச்சனா, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Moondru Mudichu Serial Promo Update 10-06-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் விஜி அருணாச்சலத்திடம் இந்த பிரச்சனைக்கெல்லாம் நான் தான் காரணம் என்று வருத்தப்படுகிறார். நான் தேங்க்ஸ் சொல்ல வந்த, நீ செஞ்ச இந்த விஷயம் சூர்யா வாழ்க்கையில முக்கியமான விஷயம். சூர்யா வாழ்க்கை எப்படி இருக்கணும்னு அக்கா தங்கச்சியா அவங்க சொல்லலாம் ஆனா அவங்க நந்தினி எப்படி டார்ச்சர் பண்றாங்கன்றதை மட்டும் தான் யோசிக்கிறாங்க நீ பேசுனதுல எந்த தப்பும் இல்லை இந்த விஷயத்தை யாராவது ஒடச்சு பேசிதான் ஆகணும். நீ பேசுன விஷயம் எல்லாம் சூர்யா மனசுல பதிஞ்சிருக்கு கண்டிப்பா நந்தினியை புரிஞ்சுப்பான் என்று சொல்லுகிறார். மறுபக்கம் சுந்தரவல்லி மாதவி இடம் கோபமாக பேசுகிறார். அவ தாலிய போட்டுட்டு போனா என்ன நீ எதுக்கு கேட்ட உன்னால தான் இப்படி எல்லாம் நடந்துச்சு என்று சொல்லுகிறார். நான் வேணும்னு செய்யல என்று சொல்ல நீ வேணும்னே பிளான் பண்ணி தான் செஞ்சேன் என்று சுந்தரவல்லி உறுதியாக சொல்லுகிறார்.

அவ கழுத்துல ஒன்பது பவுன் செயின் உனக்கு தேவையா அதுக்குதான் இப்படி பண்ணியா கொஞ்ச நேரம் அமைதியா இருந்தா அவ போயிருப்பா இப்போ அவனுக்கு கட்டு போடுவாங்க அதை பாத்துக்க ஒரு ஆள் வேணும்னு சொல்லுவாங்க அவன் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிட்டு வந்துருவா இதுதான் நடக்கும் என்று சொல்லிவிட்டு என் கண்ணுல படாம இங்க இருந்து போயிடுங்க என்று கோபப்பட்டு அனைவரையும் அனுப்பி விடுகிறார். சூர்யா ஹாஸ்பிடல் இருக்க டாக்டர் செக் பண்ணி பார்த்துவிட்டு, கையை தேவையில்லாமல் அசைக்க கூடாது, காயம் ஆழமா இருக்கு 24 மணி நேரமும் யாராவது கூடவே இருக்கணும், இன்னும் மூணு மாசத்துக்கு இப்படித்தான் இருக்க வேண்டியதா இருக்கும் நான் சொல்றத ஃபாலோ பண்ணீங்கன்னா நான் அடுத்து எப்ப வரணும்னு சொல்றேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மூவரும் காரில் வர இனிமே முட்டாள்தனமான வேலையை செய்யாத சூர்யா என்று சொல்ல புரிஞ்சுதா என நந்தினியை கேட்கிறார்.

டாடி சொன்னத கேட்ட இல்ல இனிமேல் இருந்து வீட்டை விட்டு எல்லாம் போகக்கூடாது என்று சூர்யா சொல்ல அது எப்படி சார் நேத்து நைட்டு வீட்டை விட்டு போக சொன்னீங்க காலைல எழுந்து விளையாட்டுக்கு சொன்னேன்னு சொல்றீங்க போலாம்னு கிளம்பினா கையை கிழிச்சிக்கிறீங்க எனக்கு ஒன்னும் புரியல என்று சொல்ல, நான் அவ்வளவு டப்பான ஆளா டாடி என்று கேட்க டஃபான ஆளு தான் ஆனா தப்பான ஆள் கிடையாது என்று சொல்லுகிறார். நீங்கதான் இப்படி சொல்றீங்க ஆனா நந்தினி என்ன செல்ஃபிஷ்னு சொல்லி அவ்ளோ பேசினா என்று சொல்ல கிளம்புறதுனால தான் சார் கம்மியா பேசுன, இப்ப விட்டு இருந்தா கூட மனசுல இருக்குறதெல்லாம் கொட்டிடுவேன் என்று சொல்ல ஐயோ வேணாமா திருப்பி கொட்டிடாத நீயே வச்சுக்கோ என்று சொல்லுகிறார். கை வலிக்குது டாடி என்று சொல்ல சூர்யாவின் கைக்கு தலையணை வைத்து அதன் மீது கையை வைங்க இல்லனா வீங்கிடும் ரத்தம் வரும் என்று சொல்ல, அருணாச்சலம் நந்தினியின் அக்கறையை பார்த்து ரசிக்கிறார். விட்டிருந்தா இந்நேரம் வீட்டுக்கு போயிட்டு இருப்ப என்று சொல்ல அதான் நீங்க விடலையே என்று சொல்ல போயிருந்தாலும் உங்க வீட்டுக்கே வந்து இருப்பேன் முன்னால ஊர்ல இருந்தீங்க இப்ப பக்கத்திலேயே இருக்கீங்க கண்டிப்பா வந்திருப்பேன் புரியுதா என்று கேட்கிறார். கல்யாணம் சுந்தரவல்லிக்கு ஜூஸ் கொடுத்து விட்டு நிற்க எதுக்கு நிக்கிற என்று கேட்கிறார் நல்லா இருக்கா இல்லையான்னு சொன்னீங்கன்னா என்று கேட்க அதெல்லாம் நல்லாத்தான் இருக்கும் போ என்று சொல்ல, நந்தினி கல்யாணத்துக்கு போன் போட்டு ஆலங்கரைத்து வைக்கச் சொல்லுகிறார்.

ஆரத்தி தட்டுடன் கல்யாணம் போக சுந்தரவல்லி கூப்பிடுகிறார். எதுக்கு ஆரத்தி என்று கேட்க கல்யாணம் நந்தினி சொன்ன விஷயத்தை சொல்ல அவன் பெரிய போருக்கு போயிட்டு வரான் அதுக்கு ஆரத்தி வரியா உள்ள எடுத்துட்டுபோ என்று சொல்லி விடுகிறார். பிறகு மூவரும் வீட்டுக்கு வர சுந்தரவல்லி 10 பக்கம் டயலாக் பேசிட்டு எதுக்குடி திருப்பியும் வர, உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு யார் கிட்ட எப்படி பேசணும் என்று எல்லாத்துக்கும் ஒரு கால்குலேஷன் வச்சிருக்கல்ல என்று கோபப்பட,அருணாச்சலம் சுந்தரவல்லி மீது கோபப்படுகிறார். விடுங்கடா டேய் புது செருப்பு கடிச்சிருக்கோம் அதுக்குதான் கத்திக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல புது செருப்பா இருந்தாலும் பழைய செருப்பாய் இருந்தாலும் வாசல்ல விடனும், பூஜை ரூமுக்குள் எடுத்துட்டு வரக்கூடாது என்று சொல்ல வெளியில இருக்கிற செருப்பு பூஜை ரூமுக்கு வரணும்னா அது சாமி செருப்பா தான் இருக்கணும் நீங்க இவள வெறும் செருப்பா நினைக்கிறீங்க அவளை நான் சாமி செருப்பா மாத்துறேன் என்று சவால் விட்டு நந்தினியை அழைத்துச் சென்று வருகிறார்.

இருவரும் ரூமுக்கு வர நந்தினி சூர்யாவை படுக்கச் சொல்ல வேண்டாம் ஒக்காந்துகிறேன் என்று சொல்லுகிறார். என் தாய்க்குலம் பேசுனத கண்டுக்காத என்று சொல்ல, அவங்க ஏற்கனவே அப்படி தான் பேசுவாங்க என்று சொல்லுகிறார். என் தாய் குலத்த மட்டும் இல்ல என்ன பத்தியும் நல்லா புரிஞ்சு வச்சிருக்க என்று சொல்ல, நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் சார் எல்லாரும் முன்னாடியும் நான் உங்கள கேள்வி கேட்டுட்டேன் என்று சொல்ல, சூர்யா சிரித்து விட்டு வீட்டை விட்டு போக போற தைரியத்துல மனசுல இருப்பதெல்லாம் பேசிட்ட அப்படித்தானே என்று சொல்ல இருந்தாலும் இவ்வளவு பேசியிருக்கக் கூடாதுன்னு இப்ப தோணுது என்று நந்தினி சொல்ல அப்படி எல்லாம் இல்லை நந்தினி நீ பேசினத நான் ரசிச்சு கேட்ட எப்பவுமே மனசுல இருக்குறத பேசுறவங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் என்று சொல்ல இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினி இடம் இந்த வீட்டில நீ இருக்கும் போது உன் நல்லதுக்கும் கெட்டதுக்கும் நான் பொறுப்பாக இருந்திருக்கணும் என்று சொல்ல, அர்ச்சனா சுந்தரவல்லி வீட்டுக்கு வந்து சூர்யா எங்கே என்று கேட்க கல்யாணம் மேலே இருக்கிறாரு என்று சொல்ல அர்ச்சனா மேலே வருகிறார்.

நந்தினி சூர்யாவிற்கு சட்டை கழட்டி கொண்டு இருக்க அர்ச்சனா வந்து நின்றவுடன் வாங்கம்மா என்று கூப்பிடுகிறார். மறுபக்கம் மாதவி நந்தினி இடம் தாலிய கழட்டுன்னு சொல்லும் போது நீ எதுக்கு கழட்டவில்லை என்று கேட்க உங்கள் கழுத்தில் இருக்கிற தாலி யாராவது கழட்டி குடு சொன்னா கொடுப்பீங்களா என்று பதில் சொல் என்னோட தாலியும் உன்னோட தாலியும் ஒன்னா என்று சொல்ல என்னால தாலிய கழட்டி கொடுக்க முடியாது என்று நந்தினி சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 10-06-25
Moondru Mudichu Serial Promo Update 10-06-25