தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி நாட்டு மருந்து வாங்க வெளியில் கிளம்ப மாதவி மற்றும் அசோகன் இருவரும் எங்க போய்கிட்டு இருக்க எதுக்கு நாட்டு மருந்து யாருக்கு நாட்டு மருந்து எங்கே போய் வாங்க போற என்ற கேள்வி மேல் கேள்வி கேட்க நந்தினி தயங்கி நிற்க, இவ்வளவு நேரம் நீயும் அப்பாவும் இத பத்தி தான பேசிகிட்டு இருந்தீங்க அப்ப எதுக்கு தயங்குற சொல்லு என்று சொல்லுகிறார். அது எதுக்குனா என்று ஆரம்பிக்க அந்த நேரம் பார்த்த அருணாச்சலம் வந்து நீ போமா நான் சொல்லிக்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். உடனே மாதவி அருணாச்சலத்திடம் கேட்க அதெல்லாம் நல்ல விஷயம் தான் அப்புறம் சொல்றேன் என்று சொல்லுகிறார்.
அவ்வளவு ஒரு முக்கியமான விஷயமா என்று கேட்க ஆமா இந்த விஷயம் நடந்தா வீடு சந்தோஷமாயிடும் சூர்யாவும் பழையபடி மாறிடுவான் என்றெல்லாம் பேசிவிட்டு கிளம்ப, மாதவி அவ புள்ள பெத்துக்கறதுக்காக நாட்டு மருந்து வாங்க போய் இருக்கா என்று முடிவெடுக்கிறார். இதை எப்படியாவது நம்ம தடுக்கணும் என்று யோசிக்கிறார். விஜியுடன் நந்தினி ஆட்டோவில் வரும்போது டாக்டர் கிட்ட கூட போன் பண்ணி படபடப்பா பேசிகிட்டு இருந்தாரு என்று சொல்லுகிறார். இந்த வைத்தியரை பார்த்து மருந்து வாங்கி கொடுத்து இவரை சரி பண்ணிட்டு நான் எங்க ஊருக்கு போய்டணும் என்று சொல்லுகிறார்.எங்க பேசினாலும் இதல வந்து நிக்காத நந்தினி என்ற சொல்லுகிறார் விஜி.
நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல அக்கா அந்த சுதாகர் மிரட்டிக்கொண்டு இருக்கிறான் என்று சொல்ல ஏன் அங்க விடனும் இங்க கூட தான் கூட்டிட்டு வந்து வெச்சி இருக்கலாம் ஆனா நீதான் ஒத்துக்க மாட்டேங்குற. உனக்காக நீ வாழ் குடும்ப குடும்பம் என்று யோசித்துக்கொண்டே இருக்காத கடைசியா அடுத்தவங்களை பற்றியும் நினைச்சுக்கிட்டு இருந்தன்னா நம்மள பத்தி யோசிக்க யாரும் இருக்க மாட்டாங்க என்று சொல்லுகிறார்.
பிறகு நாட்டு மருந்து கடையில் வந்து விசாரிக்க, அவர் என்ன விஷயம் என்று கேட்க, என் முதலாளியோட பையன் எப்ப பாத்தாலும் குடிச்சுக்கிட்டே இருக்காரு, அவர இதுல இருந்து நிறுத்தணும் என்று கேட்க சரி நான் கொடுக்கிற மருந்த சொல்ற நேரத்துல கொடுங்க அவரே தானா குடிய விட்டுடுவார். அந்த மருந்த தொடர்ந்து 48 நாள் சாப்பிட்டு வந்தால் குடிப்பழக்கம் சுத்தமாக இருக்காது குடிக்கணும்னு நினைச்சா கூட கொமட்டிக்கிட்டு வரும் என்று சொல்ல நந்தினி இது தான்யா வேண்டும் என்று சொல்லி அந்த மருந்தை இருவரும் வாங்கி செல்கின்றனர்.
மறுபக்கம் அர்ச்சனா ரேணுகாவிடம் ஒரு மருந்தை கொடுக்க எதுக்குமா இது என்று கேட்கிறார்.அதற்கு அர்ச்சனா நந்தினி சூர்யாவை குடிக்காம இருக்குறதுக்கு நாட்டு மருந்து கொடுக்கப் போறல்ல ஆனால் சூர்யா அந்த மருந்த குடிக்க கூடாது அது கூட இதை நீ கலந்துவிடு எனக்கு நல்ல புள்ளையா இருக்கிற சூர்யா தேவையில்லை குடிச்சிட்டு ரகளை பண்ற சூர்யா தான் தேவை என்று சொல்லுகிறார் இதை கலந்தா என்ன ஆகும் என்று கேட்க அந்த மருந்து வேல செய்யாம போயிடும் அதுவே இல்லாம வாமிட் தலை சுத்தல் வரும் அந்த பழியை நந்தினிமேல விழும் அதுக்கப்புறம் என்ன பண்ணனும்னு நான் பாத்துக்குறேன் நீ கெளம்பு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
நந்தினிக்காக மாதவியும் அசோகனும் காத்துக்கொண்டிருக்க, வந்தவுடன் எங்க போயிருந்தா என்று மாதவி கேட்க ஒரு வேலையா போயிருந்தேன் என்று சொல்லுகிறார்.இது என்னமா பதில் என்று கேட்க விஜி அக்கா கூட வெளியே போயிருந்தேன் என்று சொல்லுகிறார் ஆனால் மாதவி கையில் இருக்கும் பையை பார்த்து கொடு என்று கேட்க நந்தினி கொடுக்க மறுக்கிறார். கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆகி குழந்தை நிக்காம இருக்கே அதுக்காகவா என்று கேட்ட அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லி கொண்டே இருக்க மாதவி பையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து புடுங்க அருணாச்சலம் வந்து வாங்கி வருகிறார். அவர் வந்தவுடன் உங்களுக்கு கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆகியும் குழந்தை நிக்கிற மாதிரி தெரியல அதனாலதான் நந்தினியை நாட்டு மருத்துவர் கிட்ட அனுப்பி குழந்தை நிக்க மருந்து வாங்கிட்டு வர சொன்னேன் என்று சொல்ல மாதவி அதிர்ச்சி அடைகிறார்.
அருணாச்சலம் கிளம்பியவுடன் இதை இப்பவே சும்மா விடமாட்டேன் என்று சொல்லி சுரேகாவுடன் மூவரும் சுந்தரவல்லி வந்து பார்க்கின்றனர். அசோகன் சுந்தரவல்லி பார்த்து நீங்கள் கூடிய சீக்கிரம் பாட்டியாகப் போறீங்க கங்கிராஜுலேசன் என்று சொல்ல அதற்கு சுந்தரவல்லி என்ன சொல்றாரு உன் புருஷன் நீ பிரக்னண்டா இருக்கியா என்று கேட்க அப்படியெல்லாம் இல்லம்மா என்று சொல்லுகிறார் அப்புறம் என்ன என்று கேட்க, நந்தினி வேற வேலை ஒன்னு பார்த்துக்கிட்டு இருக்கா என்று சொல்லி, நந்தினி நாட்டு மருந்து டாக்டரை பார்த்து மருந்து வாங்கிட்டு வந்து இருக்கா எதுக்காக தெரியுமா அதுவும் சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக என்று சொல்ல சுந்தரவல்லி கோபப்படுகிறார். இந்த விஷயம் அப்பாவுக்கும் தெரியும் அவளுக்கு குழந்தை பிறந்துச்சுன்னா ஜென்மத்து வீட்டை விட்டு துரத்த முடியாது என்று சொல்லுகிறார். இதனால் வேற மாதிரி டீல் பண்ற மருந்து அவ வேணா குடிக்கட்டும் எக்காரணத்தைக் கொண்டு என் பையன் குடிக்கக்கூடாது என்று முடிவெடுக்கிறார் சுந்தரவல்லி. இத்துடன் எபிசோடு முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் குழந்தை பெத்துக்க வேண்டும் என்றால் புருஷனும் பொண்டாட்டியா முதல்ல சேர்ந்து வழனும் என்று அர்ச்சனா சொல்லுகிறார்.மறுபக்கம் நந்தினி சூர்யாவிற்கு வைத்திருந்த பாலில் ரேணுகா அர்ச்சனா கொடுத்த மருந்தை கலந்து விடுகிறார்.
சூர்யா பேசிக் கொண்டிருக்க நந்தினி ஐயா குடிக்க சொன்னாரு என்று சொல்ல சூர்யா பாலை குடிக்கிறார். என்ன நடக்க போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
