தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வரை சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொக்கேஷன் அமைந்துள்ளனர்.
நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் நந்தினியை தேடிக் கொண்டு வர எதிரில் நந்தினியை கடத்திய திருடர்கள் எதிரில் வர அருணாச்சலம் அவர்களிடம் விசாரிக்கிறார். அவர்கள் எனக்கு தெரியாது என்று சொல்லி அங்கிருந்து கிளம்ப இதை அர்ச்சனா கவனித்து அவர்களிடம் நீங்க என்ன பண்றிங்க உங்களை அப்பவே போக சொன்னல என்று சொல்ல இங்க சாப்பாடு நல்லா இருக்கும்னு சொன்னாங்க என்று சொல்ல நீ இங்க கொஞ்ச நேரம் கூட இங்கே இருக்க கூடாது பாண்டிச்சேரி எங்கனா போங்க என்று சொல்ல காசு மேடம் என்று தயங்க போனில் அனுப்புறேன் போங்க என்று விரட்டி விடுகிறார். உடனே விஜி அர்ச்சனா விவேக் என மூவரும் நந்தினி மயங்கி கிடக்கும் ரூமை திறந்து தண்ணீர் தெளித்து எழுப்பி அழைத்துச் செல்கின்றனர்.
சுந்தரவல்லி மாதவி அருணாச்சலம் மூவரும் உட்கார்ந்து கொண்டிருக்க நந்தினி வந்தவுடன் அருணாச்சலம் ஓடிப்போய் மாதவியை அழைத்து வந்து உட்கார வைக்கிறார். அர்ச்சனா ஒன்றும் தெரியாதது போல் ஒன்றும் பிரச்சனை இல்ல என்று கேட்டு இனிமே உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை நந்தினி என்று சொல்லுகிறார். நல்லவேளை நீ என் கண்ணுல மாட்ன என்று சொல்ல நீங்கதான் கண்டுபிடிச்சீங்களா நன்றிமா என்று சொல்லுகிறார். எல்லாரும் ஒரு ஒரு பக்கம் தேடிக்கிட்டு இருந்தோம் கொஞ்சம் இல்லனா போலீஸ்க்கு போன் பண்ணி இருப்போம் என அர்ச்சனா சொல்லுகிறார். அருணாச்சலம் நந்தினி இடம் எல்லாரும் இங்கே இருக்கும்போது நீ மட்டும் எப்படிமா அந்த ரூமுக்குள்ள போனா என்று சொல்ல நானா போகல என்ன கடத்திட்டு போயிட்டாங்க என்று சொல்லுகிறார். யார் என்று விசாரிக்க ஏசி ரிப்பேர் பண்றேன்னு சொல்லி பணத்தை ஏமாத்திட்டு போனவங்க என்ன கடத்திட்டாங்க என்று சொல்லுகிறார். உடனே அர்ச்சனா என்கிட்ட பேசிட்டு இருந்தானுங்க அவனுங்களா என்று கேட்டு அதிர்ச்சி அடைவது போல் ஆக்டிங் கொடுக்கிறார்.
அந்தத் திருடன் எதுக்கு இங்க வரணும் இதனால என்ன லாபம் என்று அருணாச்சலம் கேட்க உடனே சுந்தரவல்லி அதையேதான் நானும் கேட்கிறேன் இந்த மூஞ்ச கடத்தி என்ன ஆகப்போகுது என்று சொல்லுகிறார். உடனே அர்ச்சனா நம்ம நினைச்ச மாதிரி இப்பதான் நடக்குது நம்ம இங்க இருந்து கிளம்புனா இவங்க இன்னும் நல்லா அடிச்சுப்பாங்க என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து அனைவரிடமும் சொல்லிவிட்டு சென்று விடுகிறார். உடனே சுந்தரவல்லி விவேக் மற்றும் விஜியிடம் நீங்கதான் இவளுக்கு துணை பொண்ணு துணை மாப்பிள்ளையா என்று கேட்கிறார் உடனே அருணாச்சலம் நான்தான் அவங்கள அனுப்பினேன் அவங்களை எதுவும் சொல்லாத என்று சொல்லி சூர்யாவிடம் அவர்களை அனுப்பி வைக்கிறார்.
இங்க என்ன நடக்குது எல்லாத்தையும் மறைத்து செய்யணும் என்று ஏன் நினைக்கிறீங்க இவ நம்ம பையனுக்கு மருந்து கொடுத்துக் கொள்ள பாக்கலையா என்று சொல்ல இப்ப மட்டும் எதுக்கு உங்க எல்லாரையும் ஏமாற்றி அவனை போட்டு தள்ள தான் பார்த்திருப்பா அதுக்காக தான் இவள கடத்திட்டாங்கன்னு டிராமா போடுற என்று சொல்லுகிறார். நந்தினி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று ஆரம்பிக்க நீ என்கிட்ட எதுத்து பேசுற அளவுக்கு வந்துட்டியா என்று மிரட்டுகிறார். யாருக்கும் சொல்லாம இந்த ரெசார்டுக்கு எதுக்கு வரணும் என்று கேள்வி மேல் சுந்தரவல்லி கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க மாதவி இன்னுமா உங்களுக்கு புரியல இவங்கள ரெண்டு பேரையும் அப்பா ஹனிமூன் அனுப்பி வச்சிருக்காரு என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி என்னோட ஸ்டேட்டஸ் கேத்த மாதிரி கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறேன் இவ வயித்துல வளர குழந்தையை மட்டும் ஏத்துப்பனா இந்த ஆசை வேற உங்களுக்கு இருக்கா என்று கேட்கிறார். உடனே மாதவி இங்கிருந்து கிளம்பலாம் என்று அழைத்துச் செல்ல அருணாச்சலம் நந்தினியை கூப்பிட்டுக்கொண்டு வருகிறார். சுந்தரவல்லி கல்யாணத்தில் நடந்ததை எல்லாம் நினைத்து இன்னும் மூணு மாசத்துல இவள வீட்ல இருந்து வெளியே அனுப்பனும் என்று யோசிக்கிறார். மறுபக்கம் நந்தினி சுந்தரவல்லி படுத்திய கொடுமைகளை நினைத்து பார்த்துவிட்டு இன்னும் மூணு மாசத்துல இந்த வீட்ல இருந்து போயிடனும் என்று யோசிக்கிறார். மறுபக்கம் அர்ச்சனா சூர்யாவுடன் நந்தினி இருப்பதை நினைத்து விட்டு இன்னும் மூணு மாசத்துல ஒரு முடிவு கற்றேன் என்று யோசிக்கிறார்.
குடும்பத்தினர் அனைவரும் காரில் வந்து வீட்டில் இறங்க சூர்யா ஃபுல் போதையில் தள்ளாடி கொண்டு போக நந்தினி பின்னால் பிடித்துக் கொண்டே வருகிறார். ரூமுக்குள் வந்த பிறகு சூர்யா நந்தினி இடம் எனக்கு ஒரு டவுட் இருக்கு நம்ம மட்டும்தான் ரெசார்ட் போனோம் இவங்க எல்லாம் எப்படி வந்தாங்க என்று கேட்க அப்போ இவங்க வந்தது என்னையா கடத்துனது உங்களுக்கு எதுவுமே தெரியாதா என்று கேட்க எப்ப நடந்தது என்று கேட்கிறார். யார் உன்னை கடத்துனது யாரு உன்னை காப்பாத்தினது என்று கேட்க, ஏசி ரிப்பேர் பண்ண வந்து நகையை ஏமாத்திட்டு என்ன கார்ல அடைச்சு வச்சிருந்தாங்களே அதே திருடங்க தான் என்ன மயக்க மருந்து கொடுத்து ரூம்ல அடைச்சு வச்சிருந்தாங்க என்று சொல்லுகிறார். உடனே சூர்யா ரெசார்ட் எப்படி திருடங்க வந்தாங்க அவங்க எதுக்கு உன்ன கடத்தனும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்க எனக்கும் ஒன்னும் புரியல நல்ல வேளை அர்ச்சனா அம்மா தான் காப்பாற்றினார்கள் என்று சொல்லுகிறார்.
உடனே சூர்யா நம்ம போன இடத்துக்கு வந்தா கேட்டா தெரிஞ்சவங்க என்று சொன்னா ஆனா அதே திருடன் அங்கு வந்திருக்காங்க ஆனா ஏதோ ஒன்னு தப்பா இருக்கு என்று சொல்ல நந்தினியும் எனக்கும் அப்படித்தான் தோணுது என்று சொல்லுகிறார். சரி அது இருக்கட்டும் எங்க அக்கா அப்பா தாய்க்குலம் எப்படி ரிசார்ட் வந்தாங்க என்று கேட்க எனக்கே தெரியல மயக்கம் தெளிஞ்சு பார்த்தது தான் தெரியும். எல்லாரும் என்ன புடிச்சி திட்டுறாங்க இதுக்கு மேல இது மாதிரி இடத்துக்கு என்ன கூப்பிடாதீங்க நீங்க சந்தோஷமா போயிட்டு வாங்க என்று சொல்லி விடுகிறார்.
டைனிங் டேபிளில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க சுந்தரவல்லி சாப்பிடாமல் அமைதியாக இருக்க அருணாச்சலம் சாப்பிட சொல்ல, எந்த தைரியத்துல சூர்யாவையும் அவளையும் ரெசார்ட் அனுப்புனீங்க வீட்ல இருக்குறவங்க கிட்ட மறச்சு அப்படி அனுப்பனும்னு என்ன இருக்கு என்று கேட்க, மாதவி என்னைக்காவது எங்கள் அப்படி அனுப்பனும்னு உங்களுக்கு தோன்றியிருக்கா. நானும் நீங்க பெத்த பொண்ணு தானே நாங்க ஜாலியா இருக்கணும்னு நினைக்க மாட்டோமா என்று கேட்கிறார். ஆனால் சுந்தரவல்லி மாதவியிடம் உனக்கு எத்தனை நாள் சொல்லி இருக்கேன் டாக்டர் கிட்ட போ என்று சொன்னா கேக்குறியா என் குழந்தை பெத்துக்கிட்டா அழகு போயிடும்னு நினைக்கிறியா என்று திட்டிவிட்டு எனக்கு மட்டும் இந்த வீட்டுக்கு வாரிசு வரணும்னு ஆசை இல்லையா என்ன அது அந்த வேலைக்காரி வயித்துல இருந்து வந்தா என்னால ஏத்துக்க முடியாது என்று சொல்ல உடனே சூர்யா ஏன் முடியாது என் பொண்டாட்டி நந்தினி ஓட குழந்தை தான் முதல் வாரிசு கூடிய சீக்கிரம் இந்த வீட்ல குழந்தை சத்தம் கேட்கப் போவது என்று சொல்லிவிட்டு நீங்க உங்க பேர குழந்தையை தூக்கி கொஞ்ச போறீங்க என்று சொல்லுகிறார்.
உடனே மாதவி பேச வர நீ எதுக்கு பேசுற அத்தையாக போற சந்தோஷத்துல இரு என்று சொல்ல அசோகனிடம் நீ இனிமேல் டபுள் மாமா என்று சொல்லுகிறார். இந்த விஷயம் யாருக்கு புடிக்கலனாலும் பரவால்ல டாடி என்று சொல்ல சுந்தரவல்லி டென்ஷன் ஆகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா ரொம்ப பண்றான் ரூமுக்குள்ள போனதுக்கு அப்புறம் அவ என்னன்ன சொல்லி ஏத்தி விடுறானே தெரியல என்று சுந்தரவல்லி மாதவி மற்றும் சுரேகாவிடம் சொல்லுகிறார்.
மறுபக்கம் அருணாச்சலம் சூர்யாவோட உடம்புல அப்படி ஒரு மருந்து எப்படி போச்சி என்று டாக்டரிடம் விசாரிக்கிறார். நீங்கதான் லூசு மாதிரி இவ்வளவு செலவு பண்ணி அங்க போய் இருக்கீங்கன்னு பார்த்தா உங்கள மாதிரி என ஆரம்பித்து நந்தினி அப்படியே அமைதியாகி விடுகிறார்.என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
