தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் அசோகன் இந்த வீட்டுக்கு வாரிசு வேணும்மா என்று கெஞ்சி கேட்க மாதவி சம்மதிக்காததால் ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பான மாதவி தலையணையை எடுத்து அசோகனை அடித்து விரட்டுகிறார். நந்தினி அருணாச்சலத்திடம் வந்து சூர்யா சாருக்கு அதை பால்ல கலந்து கொடுத்தேன் குடிச்சுட்டாரு என்று சொல்ல அருணாச்சலம் அவனுக்கு குடிக்க வைக்க என்ன பொய் வேண்டுமென்றாலும் சொல்லு தப்பே இல்லம்மா என்று சொல்லுகிறார். ஒரு நாள் மட்டும் இல்லை ஐயா இன்னும் 48 நாள் கொடுக்கணும் என்று பேசிக் கொண்டிருக்க மாதவி மேலே இருந்து பார்க்கிறார். இன்னைக்கு குடிச்ச மாதிரி இதே மாதிரி குடிக்க வச்சுரணும் என்று சொல்ல நந்தினி நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார்.
ரெண்டு பேரும் சேர்ந்து இவ்ளோ ரகசியமா வேலை பாக்குறீங்களா இருக்கட்டும் இதற்கு நான் என்ன பண்றேன் பாருங்க என்று சொல்லிவிட்டு மாதவி மேலே சென்று விடுகிறார் மறுபக்கம் ரேணுகா அர்ச்சனாவிற்கு ஃபோன் போட்டு நீங்க கொடுத்த மருந்த சூர்யாவுக்கு கொடுத்துட்டேன் என்று சொல்ல சூர்யாவா சூர்யா சார்ன்னு சொல்லு என்று சொல்லுகிறார். அந்த மருந்த நந்தினி கிட்ட கொடுத்து சூர்யா சார்கிட்ட கொடுத்து குடிச்சிட்டாரு இப்பதான் நந்தினி அருணாச்சலம் ஐயா கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தா என்று சொல்ல சூப்பர் அங்க என்ன நடக்குதோ பார்த்துக்கிட்டே இரு எதுவா இருந்தாலும் எனக்கு போன் பண்ணு என்று சொல்லி போனை வைக்கிறார். சூர்யாவின் டென்ஷன் ஆக இருக்க நந்தினி பாயை எடுத்து படுக்க எடுக்க ஒரு மனுசன குடிக்க விடாமல் தடுத்தால் இவ்வளவு டென்ஷன் ஆவாங்களா என்று யோசித்துக் கொண்டே சூர்யாவை பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
தூங்குங்க சார் என்று சொல்ல உனக்கு தூக்கம் வந்தா தூங்கு நீ என்று சொல்லிவிட்டு மீண்டும் டென்ஷன் ஆக நடக்கிறார். பிறகு நந்தினி நம்ம தூங்குற கூடாது இவரே நம்மளுக்கு தெரியாம கூட எங்கனா போய் குடிப்பாரு என்று சொல்லி முழித்துக் கொண்டு இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் நந்தினி தூங்கி விடுகிறார். உடனே சூர்யா கார் எடுத்துக்கொண்டு வேகமாக வெளியில் கிளம்பி விடுகிறார்.
கொஞ்ச நேரத்தில் விஜி நந்தினிக்கு போன் போட இந்த நேரத்தில் யார் என்று யோசித்துக் கொண்டே இருக்க விஜி அழுது கொண்டே பேசுவதை பார்த்து நந்தினி பதட்டம் அடைகிறார். என்னாச்சுகா கேட்க கொஞ்ச நேரம் வேலை இருக்கு என்று வெளியே போய் பத்து நிமிஷத்துலையே ஆக்சிடென்ட் ஆயிடுச்சு நந்தினி. மண் லாரியில் ஆக்சிடென்ட் ஆகி தலையில் அதிகமா அடிபட்டு இருக்கு பொழைக்கிறதே கஷ்டம்னு சொல்றாங்க என்று சொல்லி அழ நீங்க கஷ்டப்படாதீங்க நான் உடனே வந்துருறேன் என்று சொல்லுகிறார். உடனே அருணாச்சலத்திற்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல இருவரும் காரில் கிளம்புகின்றனர்.
கவலைப்படாதம்மா எனக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்காங்க பேசிக்கலாம் என்று சொல்ல நந்தினி விஜிக்கா ரொம்ப உடைஞ்சு பேசுறாங்க என்று சொல்ல நம்ம போய் பேசிக்கலாம் அவ வேற எங்க போனாலும் தெரியல என்று சூர்யாவை பற்றி கேட்கிறார். நான் தூங்குற வரைக்கும் ரூம்ல தான் இருந்தார் அதுக்கப்புறம் எங்க போனாருன்னே தெரியல என்று சொல்லுகிறார். மறுபக்கம் விவேக்கிற்கு ட்ரீட்மெண்ட் நடக்கிறது.
மறுபக்கம் காரில் சூர்யா இன்னைக்கு என்ன ஆனாலும் சரி குடிச்சே ஆகணும் என்று முடிவோடு கார் ஒட்டிக் கொண்டு வர அங்கு சிலர் குடித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் வந்து ஃபாரின் சரக்கு கிடைக்குமா என்று கேட்க அதெல்லாம் இந்த டைம்ல கிடைக்காது என்று சொல்ல, அப்போ என்ன சரக்கு கிடைக்குமோ அதை கொடுங்க என்று சொல்ல ஆனால் ரேட் ஜாஸ்தியாகும் பரவால்லையா என்று கேட்கிறார்கள் பிறகு 10 ஆயிரத்திற்கு இரண்டு பாட்டில் கொடுப்பதாக சொல்ல சரி என்று அவர்களுடன் சூர்யா சென்று விடுகிறார். அருணாச்சலமும் நந்தினியும் ஹாஸ்பிடலுக்கு வந்தவுடன் விஜி நந்தினியை கட்டிப்பிடித்து அழுகிறார். என்னாச்சமா என்று விஜியிடம் கேட்க நிறைய பிளட் அதிகமா போயிடுச்சு சொல்றாங்க தலையில ரொம்ப பெருசா அடிபட்டு இருக்கு எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று சொல்ல டாக்டர் வருகிறார். அருணாச்சலம் அவரிடம் விசாரிக்க அவருக்கு நிறைய பிளட் லாஸ் அதிகமா இருக்கு அவரோட பிளட் குரூப் ரொம்ப ரேர். இங்கே கிடைக்கல நாங்களும் எல்லா இடத்திலும் சொல்லி வச்சிருக்கோம் இன்னும் ஒரு மணி நேரத்துல பிளட் கிடைச்சா சேபா காப்பாத்திடலாம் ஆனா எந்த இடத்திலும் பிளட் கிடைக்க மாட்டேங்குது என்று சொல்ல அதற்கு அருணாச்சலம் சூர்யாவிற்கு இந்த பிளட் குரூப் தான் அவன் கொடுக்கலாம்ல என்று சொல்ல தாராளமா கொடுக்கலாம் கூட்டிட்டு வாங்க என்று டாக்டர் சொல்லிவிட்டு சென்று விடுகிறார் உடனே விஜி அப்போ சூர்யா அண்ணா வந்தா காப்பாத்திடலாம் என்று சொல்ல நந்தினி ஆனால் அவர் நான் வரும்போது வீட்டுல காணும் என்று சொல்லுகிறார்.
அருணாச்சலம் அவன் எங்க போயிருப்பான் குடிக்க தான் போய் இருப்பான் என்று சொல்ல உடனே விஜி பதறிப் போய் அண்ணன் ஒரு சொட்டு குடிச்சாலும் பிளட் கொடுக்க முடியாது அவர் வந்து பிரயோஜனம் இருக்காது என்று சொல்ல அவன எங்க போய் தேடுறதுன்னு தெரியல என்று அருணாச்சலம் குழப்பத்தில் இருக்கிறார். முதலில் ஒரு இடத்தில் வந்து சரக்கை விசாரிக்க அவர்கள் காலி ஆகிவிட்டது என்று சொல்லிவிடுகின்றனர். அருணாச்சலம் சிலரிடம் போன் போட்டு பார் ஒயின் ஷாப் என்று எல்லா இடத்திலும் தேடுங்க சூர்யா குடிக்க மட்டும் கூடாது அதுக்குள்ள சீக்கிரம் கண்டுபிடிங்க என்று சொல்ல விஜி அழுது கொண்டே இருக்க நந்தினி ஆறுதல் சொல்லுகிறார். மறுபக்கம் சூர்யா சரக்கு கிளாஸில் ஊற்றி கையில் வாங்குகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி அருணாச்சலத்திடம் சூர்யா சார் கிடைச்சிருவாரா என்று கேட்க எல்லா பக்கமும் தேட ஆள் அனுப்பி இருக்கேன். இன்னும் எந்த தகவலும் இல்லை என்று சொல்லுகிறார்.
போலீஸ் ஒருவர் சூர்யா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறார் மறுபக்கம் அருணாச்சலம் நந்தினியிடம் நேத்து நைட் நடந்தது இந்த வீட்டில் இருக்கிற யாருக்கும் தெரியாதுல்ல என்று கேட்க தெரியாது ஐயா என்று சொல்லுகிறார் தெரிஞ்சா மட்டும் என்ன பண்ணிட போறாங்க என்று சொல்லுகிறார்.என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.