தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி சாமி போட்டோ முன் நின்று இந்த வீட்ல இருக்குற வரைக்கும் என் மேல திருட்டு பழி போட்டுக்கிட்டே தான் இருப்பாங்க தயவுசெஞ்சு எங்க வீட்டுக்கு நான் போகணும் நான் சந்தோஷமா இருக்கணும் இது ஒன்று மட்டும் எனக்கு செஞ்சிடு நான் உன்கிட்ட வேற எதுவும் கேட்க மாட்டேன் என்று சொல்லி அழுகிறார். இவர் ஒரு பக்கம் நான் இருக்கேன் நான் இருக்கேன்னு சொல்றாரு அதெல்லாம் இங்கேயே இருக்கிறவங்களுக்கு ஆனா நான் தான் இங்க இருந்து போகணும்னு நினைக்கிறேன் என்று சொல்லி அழுகிறார். அமைதியா பேசும்போதே இவ்வளவு கஷ்டம் எதிர்த்து சண்ட போட்டா அவ்வளவு தான் எனக்கு எதுவுமே வேணாம் இங்கிருந்து போனா மட்டும் போதும் என்று சொல்லி அழுது கொண்டே சென்று விடுகிறார். மறுபக்கம் ரூமில் மாதவி சுரேகாவிடம் இவை இப்படி பண்ணுவா என்று நினைக்கவே இல்லை என்று சொல்லுகிறார். ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் ஒரு பக்கம் இதெல்லாம் எப்படி நடந்துச்சுன்னு யோசிக்க வேண்டியதா இருந்தது உடனே சுரேகா கொஞ்ச நேரம் சூர்யா லேட்டா வந்து இருந்தா இந்நேரம் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கலாம் என்று சொல்ல அசோகன் சூர்யாக்கு நம்ம மேல இருக்கிற சந்தேகம் இன்னும் போகல என்று சொல்லுகிறார்.
உடனே மாதவியும் அதுவும் சரிதான் என்று சொல்ல சுரேகா நந்தினியை காப்பாத்த அவன் ஏதாவது பேசிகிட்டு இருப்பான் என்று சொல்ல அதை எல்லாம் விட சூர்யாவோட சந்தேகத்தை தீர்க்கணும் அதுக்கு ஏதாவது ஐடியா கொடுங்க என்ற மாதவி சொல்ல இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் ஒதுங்கி நிற்கிறது தான் புத்திசாலித்தனம் என்று சொல்லுகிறார். அர்ச்சனா அம்மாவிடம் ஜாலியா இருக்கேன் என்று சொல்ல அப்போ எவன் குடிய கெடுத்துகிட்டு வந்து இருக்க என்று கேட்க மினிஸ்டர் என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் நீங்க ஐ டி ரைட் அனுப்புனீங்க இல்ல எல்லாமே பக்காவா முடிஞ்சதுபா ஏற்கனவே திருடன நகைக்கு அவதான் காரணம்னு பழிய போட்டதுக்கு அப்புறம் நகை ஒளிச்சு வச்சு இன்னும் அவ மேல பழிய அதிகமாக்கி சுந்தரவல்லிக்கு அவ மேல இன்னும் கோவத்த அதிகமாக்கியாச்சு.
இப்போ அந்த வீட்டில எல்லாரையும் நந்தினிக்கு எதிரா திருப்பி ஆச்சு இன்னும் ரெண்டு பேர்தான் அதுல ஒன்னு சூர்யா ஒன்னு அவரோட அப்பா அதையும் சீக்கிரமா மாத்திடுவேன் என்று சொல்லுகிறார். உடனே அர்ச்சனாவின் அம்மா ஒரு அப்பாவி பொண்ணு இப்படி போட்டு பாடா படுத்துறீங்களே அந்த பாவம் சும்மா விடாது என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மீண்டும் சாமி போட்டோ முன் வந்து நின்ற நந்தினி எந்தப் பழி என் மேல விழக்கூடாதுன்னு நினைச்சேனோ அந்த பழி விழுந்துடுச்சு சின்ன வயசுல இருந்து அடுத்தவங்களோட ஒருபா கூட ஆசைப்படாத நான் என் மேல இந்த பழைய தாங்கிக்க முடியல தயவு செஞ்சு என் குடும்பத்துல கூட என்னை சேர்த்து விடு நான் படுற கஷ்டம் உனக்கு தெரியலையா எனக்கு நல்லது பண்ணனும்னு உனக்கு தோணலையா என்று அழுகிறார்.
கல்யாணம் பதற்றமாக ஓடிவந்து கார் டிரைவர் பாலா வந்திருக்கான் என்று சொல்ல அவன் எதுக்கு வந்திருக்கான் அவன அப்படியே போக சொல்ல வேண்டியது தானே என்று சொல்ல,அவன் குடும்பத்துல ஏதோ பிரச்சனையா உங்கள பாக்கணும்னு என்ற சொல்லி அழுகிறான் என்று சொல்ல சரி வர சொல்லு என்று சொல்லுகிறார். வீட்ல ஒரே பிரச்சனையா இருக்கு சண்டையா இருக்கு எந்த சண்டை வந்தாலும் அம்மா வீட்டுக்கு போயிடுறா என்று சொல்ல அப்போ மாமியார் வீடு எங்க இருக்கு என்று கேட்க பக்கத்துலையே தான் என்று சொன்னால் பக்கத்தில் இருந்தாலே பிரச்சினைதான் ஒன்னு நீ தூரப்போ இல்ல உன் மாமியார் விட்ட தூரம் அனுப்பிடு இதுக்கு மேல ஒழுங்கா வேலை செய் என்று சொல்லி அனுப்புகிறார்.
மறுநாள் காலையில் நந்தினி விளக்கேற்றி பூஜை செய்துவிட்ட பிறகு கப்போர்ட் திறந்து காலண்டரை எடுத்துப் பார்த்து யோசித்துக் கொண்டு நிற்க இதனை சூர்யா கவனித்து உள்ளே வருகிறார். அந்த சுதாகர் ஒரு நாள் போன் பண்ணி 90 வது நாள் வெளிய வந்துருவேன்னு சொன்னா அவன் இன்னைக்கு வெளிய வந்துடவா அவன் எனக்கு போன் பண்ணி வெளிய வந்து உன் குடும்பத்தை சிதைச்சு சின்னா பின்னம் ஆக்கிடுவேன் என்று சொல்லி இருக்கான்.அவன் ஏற்கனவே மோசமான ஆளு என் குடும்பத்தை ஏதாவது பண்ணிட்டா என்ன பண்றதுன்னு பயமா இருக்கு என்று சொல்ல அவ ஒரு செத்த பாம்பு அவனுக்காக நீ பயப்படாதே என்று சொல்லுகிறார். அவன் என்னவெல்லாம் பண்ணுவான் பாட்டி தங்கச்சி எல்லாம் தனியா இருக்காங்க என்று சொல்ல,அவன் எதுவுமே பண்ண மாட்டேன் அவன் அப்படியே பட்ட ஆள் எல்லாம் கிடையாது, அப்படியே வந்தாலும் நான் விட்டுவிடுவேனா என்ன தாண்டி தான் அவன் உன்கிட்ட வரணும் அதெல்லாம் தூக்கி போட்டு நீ தைரியமா இரு என்று சொல்லுகிறார். அருணாச்சலம் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் நந்தினி காபி வேண்டுமா ஐயா என்று கேட்டா அதெல்லாம் வேண்டாமா? என்ன முகம் ஒரு மாதிரி இருக்கு என்று கேட்க நந்தினி கண்கலங்குகிறார்.
என்னாச்சுன்னு சொல்லுமா என்று கேட்க நந்தினி கேலண்டர் பேப்பரை காட்டுகிறார். என்னதுமா இது என்று கேட்க இந்நேரம் சுதாகர் வெளியே வந்திருப்பாரு என்று சொல்ல அவன் வந்தா வந்துட்டு போட்டோம். நீ எதுக்குமா வருத்தபடுற என்று கேட்க, ஏற்கனவே அவன் ஜெயில்ல இருக்கும்போது 90 நாள்ல வெளிய வந்து உன் குடும்பத்தை என்ன பண்றேன்னு பாரு என்று சொல்லி சவால் விட்டு இருக்கான் அதனால எனக்கு பயமா இருக்கு என்று சொல்ல, இதையெல்லாம் சுந்தரவல்லி கேட்டுக்கொண்டு நின்றிருக்கிறார். அருணாச்சலம் அப்படியெல்லாம் அவனை செய்ய விடமாட்டோம் நீ கவலைப்படாத என்று சொல்லுகிறார். அந்த ஊர்ல எங்களுக்கு யாரையுமே தெரியாது எங்க அப்பா உடம்பு முடியாம இருக்காரு என்னால ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்கான் அதனால மனசு ஃபுல்லா வன்மம் இருக்கும் என்று சொல்ல, அருணாச்சலம் அவன் பண்ண கிரிமினல் வேலை அப்படி என்று சொல்லுகிறார். முதல்ல நீ மட்டும் தனியா இருக்க இப்போ நானும் சூர்யாவும் உனக்கு சப்போர்ட்டா இருக்கோம் கவலைப்படாத என்று சொல்ல அதற்கு நந்தினி அவன் ஏதாவது பண்றதுக்குள்ள என் குடும்பத்தை காப்பாத்திக்கணும்னு நினைக்கிறேன் என்று சொல்ல அவனால் எதுவும் செய்ய முடியாது நீ தைரியமா இருமா என்று சொல்ல சுந்தரவல்லி இதனை பார்த்து சிரிக்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நான் இவ்வளவு நாளா எதுக்கு பயந்தனோ அது தொடங்கிடுச்சு என்று நந்தினி நினைத்து, அருணாச்சலத்திடன் சென்று தயவு செய்து என்னை ஊர்க்கு அனுப்புங்க அங்க என்ன நடக்குமோ ஏது நடக்குமோன்னு என்னால பயந்துட்டு இருக்க முடியாது என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் சுதாகர் நந்தினியின் குடும்பத்தை கட்டி போடுகிறார். சூர்யா நந்தினி உடன் காரில் வர உன் ஒருத்தரால அவனை சமாளிக்க முடியாது அவனை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும்.நான் பாத்துக்குறேன் நீ கவலைப்படாத என்று சொல்லுகிறார். பிறகு சூர்யா நந்தினி வீட்டுக்கு வந்து விட சுதாகர் அதிர்ச்சி அடைகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
