Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா கொடுத்த ஷாக்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Moondru Mudichu Serial Promo Update 13-06-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி கையில் சிகரெட் இருப்பதை பார்த்து மாதவி அதிர்ச்சியாகி நம்ப முடியாமல் பார்க்க கொஞ்ச நேரத்தில் சூர்யா வந்தவுடன், மாதவி கடுப்பாகி அசோகனை திட்டுகிறார். மறுபக்கம் அர்ச்சனா அழுது கொண்டே இருக்க சுந்தரவல்லி ஆறுதல் சொல்லுகிறார். சூர்யா என்ன பார்க்கிறது ஒரு கேவலமா நினைக்கிறான் எப்ப பாத்தாலும் அவளைப் பற்றி பேசிக்கிட்டு இருக்கான் என்று சொல்ல, எல்லாமே ஒரு நாள் மாறும் என்று சுந்தரவல்லி சொல்ல, நான் தான் சூர்யா கூட வாழ்வேன்னு கற்பனை பண்ணிக்கிட்டு இருக்கேன் உண்மையை சொல்லப்போனால் அந்த நந்தினி கிட்ட எல்லாரும் தோத்து போயிட்டோம். நான் அவன் மேல வச்சிருந்த காதல் நிஜம் என்று அழுது கொண்டு சொல்ல, நான் அவன மாத்திடுவேன் என்று சொல்லுகிறார்.

அப்போ சூர்யா எனக்கு தானே என்று சொல்ல, நீ என்ன அர்ச்சனா பேசுற 90% நீ தான் சூர்யாவோட பொண்டாட்டி சூர்யா பற்ற தாலி கண்டிப்பா உன் கழுத்துல ஏறும். நீ எப்படி எந்த அளவுக்கு அவ வீட்டை விட்டு வெளியே போனோம்னு யோசிக்கிறாயோ அந்த அளவுக்கு நானும் யோசிச்சுக்கிட்டு இருக்கேன் நிச்சயமா நடக்கும் நீ கெளம்பு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். பிறகு அனைவரும் டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டு இருக்க டெய்லி எதுக்கு தக்காளி சட்னி என்று சுரேகா கேட்க, நந்தினி தான் தக்காளி விலை கம்மியா இருக்கிறதுனால வாங்குனாங்க அது கெட்டுப் போயிடுங்கறதுக்காக தான் தக்காளி சட்னி வைக்கிறோம் என்று ரேணுகா சொல்லுகிறார்.

உடனே அருணாச்சலம் வந்து உட்கார்ந்து தக்காளி சட்னி சூப்பரா இருக்கு என்று சொல்லிவிட்டு சூர்யாவை கேட்க சூர்யாவும் நந்தினியும் கீழே இறங்கி வருகின்றனர். சூர்யா சாப்பிட உட்கார கல்யாணம் இட்லியை ஊற வைத்து கிண்ணத்தில் எடுத்த கொடுக்க, நந்தினி உட்கார்ந்து ஊட்டி விடச் சொல்லுகிறார். ஆனால் நந்தினி தயங்க சூர்யா வலுக்கட்டாயமாக இழுக்க சுந்தரவல்லி எழுந்திரித்து விடுகிறார். ஆனா என்ன வேணா பண்ணுவா நான் அதை வேடிக்கை பார்க்கணுமா இப்ப எதுக்கு அவளை உட்கார வைக்கிற அவளுக்கு மரியாதையை உருவாக்கி தர பாக்கறியா என்று சொல்ல, அந்தஸ்து கௌரவம் மரியாதை எதுவுமே உருவாக்கி தர முடியாது தானா உருவாக்கிக்கணும் என்று சூர்யா சொல்லுகிறார். நீ அவளை லவ் பண்ணியா கல்யாணம் பண்ண முதல்ல அவ உன் பொண்டாட்டியா என்று கேட்க, அருணாச்சலம் பொண்டாட்டி இல்லாம வேற என்ன என்று கேட்க மஞ்ச தாலி கட்டிட்டான்னா அவ பொண்டாட்டி ஆயிடுவாளா என்று கேட்டா சூர்யா அப்ப என்ன ரோஸ் தாலி கட்டணுமா டாடி என்று சொல்ல, இன்னொரு கலாச்சாரம் இருக்கு அதை சொல்லட்டுமா கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை வாழை மரத்துக்கு தாலி கட்டி வெட்டி வீசுவாங்க அது மாதிரி வெட்டி வீச வேண்டியவை இவ என்று சொல்ல சூர்யா கோபப்பட்டு எழுந்து நிற்கிறார்.

வாழையடி வாழையாய் தலைச்சு வாழறதுக்காக கட்டின தாலி என்று சூர்யா சொல்லுகிறார். அது தாலி இல்லன்னு இவங்க எப்படி சொல்ல முடியும். நந்தினி கழுத்துல இந்த தாலி இருக்கிற வரைக்கும் அவ என் பொண்டாட்டி தான் என்று சொல்ல, நீ எப்படி வேணா எடுத்துக்கோ ஆனா அவளை எதுக்கு என் தகுதிக்கு ஈக்குவலா உட்கார வைக்கிற என்று கேட்கிறார்.ஏன் இவங்க பக்கத்துல யாரும் உட்கார கூடாதா பொறக்கும் போது எல்லாரும் ஒண்ணுதான் பணம் காசு வந்தா எல்லாம் மாறிடுமா என்று கேட்க, கௌரவம் என்பது பணம் சம்பந்தப்பட்டது மட்டுமில்லை பாரம்பரியம்,படிப்பு,நாகரிகம் என்று எல்லாமே இருக்கு நீ பச்ச குழந்தை உனக்கு தெரியாது என்று சொல்லுகிறார் எல்லாமே அவ கத்துப்பா, எத்தனை வருஷமா ஃபாலோ பண்ற இந்த ஜென்மத்துங்களுக்கு புரியல என்று மற்றவர்களை கை காட்டி சொல்லிவிட்டு நந்தினியை டைனிங் டேபிளில் உட்கார வைத்து ஊட்டி விடச் சொல்ல, நந்தினியும் ஊட்டி விட அனைவரும் சென்று விடுகின்றனர். ரூமில் அருணாச்சலம் எதுக்கு சுந்தரவல்லி நீ இப்படி பண்ற அவன் ஏதாவது பண்ணிட்டு போறான் எதுவும் கேட்காத என்று சொல்ல, அவ எனக்கு முன்னாடி எனக்கு ஈக்வலா உட்கார்ந்து சாப்பிடுவா அதை நான் ஏத்துக்கணுமா என்னால முடியாது என்று சொல்லுகிறார்.

நீ டென்ஷனான அவன் சந்தோஷப்படுறான் அவன் கிட்ட எதுக்கு நீ மல்லுக்கு நிக்கிற, இந்த வீட்டுக்குள்ள நான் நிம்மதி இல்லாம இருக்க வேண்டும் என்று சுந்தரவல்லி சொல்ல, நந்தினியும் சூர்யாவும் இவ்வளவு நெருக்கமா இருக்காங்கன்னா அதுக்கு காரணம் நீதான். நீ நந்தினி மேல காட்டுற வெறுப்பு தான் அவன் அப்படி நடந்துக்கிறான் என்று சொல்ல அதற்கு சுந்தரவல்லி உங்களுக்கு அப்படி இருந்தா சந்தோஷம் தானே என்று சொல்லுகிறார். எனக்கு சந்தோசம் தான் அது கூட உன்னோட ஹெல்த்தும் எனக்கு முக்கியம் நீ பிரச்சனையை உருவாக்கிட்டனா அது சூர்யா பத்து மடங்காக மாத்திடுறான் நீ குறி மட்டும்தான் வைக்கிற அவன் கோடு போட்டு போயிடுறான். அவன் என் பையனா இருந்தாலும் நான் தான் ஜெயிப்பேன் என்று சொன்ன அவன் உன் பையன் சுந்தரவல்லி நீ எட்டடி பாய்ந்தால் அவன் 16 32 னு போய்க்கிட்டே இருப்பான் என்று சொல்ல சுந்தரவல்லி டென்ஷன் ஆகி கீழே வந்து டைனிங் டேபிளில் உட்கார நந்தினி வந்தவுடன் நிற்கச் சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நான் சூர்யா சாருக்கு கை நல்லா ஆன உடனே போயிடுவேன் என்று சொல்ல போகணும் பொய்தான் ஆகணும் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார்.

மறுபக்கம் சூர்யா அடுத்து வரும் மூணு மாசத்துக்கு என்னோட சைனிங் அத்தாரிட்டிய நந்தினிக்கு கொடுக்கிறேன் என்று சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 13-06-25