Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Moondru Mudichu Serial Promo Update 14-06-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வெளியில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி நந்தினி கூப்பிட்டு நிற்க வைத்து எதுக்காக இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார். இந்த வீட்டோட கூட்டி பெருக்கற தகுதி மட்டும் தான் உனக்கு இருக்கு, இந்த வீட்டை விட்டு போறேன்னு சொன்னேன் போனியா ஒரே நாள்தான் நான் சந்தோஷமா இருந்தேன், நீ ஏன் போகல பதில் சொல்லு என்று கோபப்படுகிறார். சூர்யா சாருக்கு கை நல்லான உடனே கண்டிப்பான போகிறேன் என்று சொல்ல நீ போய் தான் ஆகணும், ஐயா சொன்னாரு சூர்யா சார் சொன்னார் என்று திரும்பத் திரும்ப இந்த வீட்ல இருந்த நான் மனுஷியா இருக்க மாட்டேன் என்று சொல்லுகிறார். யார்கிட்டயும் எதுவும் சொல்லாமல் கிளம்பி விடனும் என்று சொல்லிக் கொண்டிருக்க அசோகன் செக்குடன் வந்து சுந்தரவல்லி இடம் 15000 என்று செக்கில் கையெழுத்து வாங்கி அதில் இன்னொரு ஜீரோவை சேர்த்துக்க வேண்டியது தான் என்று சந்தோஷமாக செல்கிறார் .

நந்தினி கிச்சனுக்கு சென்று சுடு தண்ணீர் எடுத்துக் கொண்டு மேலே சென்று வருகிறார். சுரேகா சோகமாக இருக்க மாதவி அசோகன் இருவரும் வந்து கேட்கின்றனர். நடக்கிறது எல்லாம் பார்த்தா இந்த நந்தினியை வெளியே துரத்தவே முடியாது போல என்று பேசிக்கொண்டு இருக்கா அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லியும் அருணாச்சலமும் வந்துவிடும் அமைதியாகி விடுகின்றனர். கொஞ்ச நேரத்தில் லாயர் வந்து விட என்ன விஷயம் என்று அருணாச்சலம் கேட்க, சூர்யா தான் முக்கியமான விஷயமா வர சொல்லு இருந்தாரு என்று சொல்ல சுரேகாவிடம் சொல்லி அழைத்து வர சொல்லுகின்றனர். மறுபக்கம் நந்தினி சூர்யாவிற்கு சட்டையை பட்டனை போட்டுவிட்டு, ஷூ போட்டு விட சுரேகா வந்து லாயர் வந்திருக்கும் விஷயத்தை சொல்லுகிறார். உடனே சுரேகாவிடம் அண்ணி அண்ணன ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க வந்துருவாங்கன்னு போய் சொல்லு என்று அனுப்ப, சுரேகாவும் சுந்தரவள்ளியிடம் சைலன்டாக சூர்யா சொன்னதை சொல்லாம என்னமோ உங்கள அசிங்கப்படுத்த தான் இவங்களை வர வச்சு இருப்பாங்களோ என்று தோணுது என்று சொன்னவுடன், சுந்தரவல்லி நீங்கள் வேணா கிளம்புங்க நான் சூர்யாவை உங்களை வந்து பார்க்க சொல்றேன் என்று சொல்லி அவங்கள அனுப்ப போக சூர்யா வந்து அவர்களை உட்கார வைக்கிறார்.

எதுக்கு சூர்யா இவர்களை வரவச்சுருக்க என்று கேட்க, சொல்றேன் டாடி அதுக்கு முன்னாடி லாயர் சாருக்கு சில விஷயங்களை சொல்லணும் என்று நந்தினியை அறிமுகப்படுத்தி என் கையில அடிபட்டு இருக்கு ரெண்டு மூணு மாசத்துக்கு கையில் அசைக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க, அடிபட்டதிலிருந்து என் ஒய்ஃப் தான் என்ன பாத்துக்கிறாங்க என்ற பெருமையாக பேச சுந்தரவல்லி கடுப்பாகிறார். எனக்கு கையில் அடிபட்டு இருக்கிறதுனால என்னால சைன் பண்ண முடியாது என்னோட கையெழுத்து இல்லாம எதுவும் பண்ண முடியாது அதனால நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன். அடுத்த மூணு மாசத்துக்கு என்னோட சைனிங் அத்தாரிட்டிய நந்தினிக்கு மாத்தி கொடுக்கிறேன் என்று சூர்யா சொல்ல சுந்தரவல்லி அதிர்ச்சி அடைகிறார்.

இனிமே எனக்கு பதிலா என் பொண்டாட்டி நந்தினி தான் கையெழுத்து போடுவா என்று சொல்ல நந்தினி பேச வர சூர்யா நான் பேசி முடிக்கிற வரைக்கும் அமைதியா இரு என்று சொல்லிவிடுகிறார். உடனே சுந்தரவல்லி நான் இதுக்கு கண்டிப்பா மாட்டேன் எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு, யாரு இவன் உனக்கு என்ன ஆச்சு, கம்பெனியில் சைன் போடுவதற்கு ஒரு தகுதி தகாதாரம் வேண்டாமா இந்த மூஞ்சி எல்லாம் ஃபைன் போடுறத நான் வேடிக்கை பார்க்கணுமா? நான் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன் என்று சொல்லுகிறார். நான் யாரோ ஒரு பொண்ணுக்கு சைனிங் அத்தாரிட்டி கொடுக்கல என் பொண்டாட்டிக்கு தான் கொடுத்து இருக்கேன் என்று சொல்ல பிறகு அருணாச்சலத்திடம் உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனைனா நீங்க யார்கிட்ட கையெழுத்து போடற உரிமையை கொடுப்பீங்க என்று கேட்க சுந்தரவல்லி இதுல என்ன டவுட் எனக்கு தான் கொடுப்பார் என்று சொல்ல,அப்போ எனக்கு கையில் அடிபட்டதனால என் பொண்டாட்டி கிட்ட கொடுத்து இருக்கேன் லாஜிக்கலி கரெக்ட் தானே என்று கேட்கிறார். இவங்களுக்கு ஏன் அப்ப ரத்தம் கொதிக்குதுன்னு எனக்கு தெரியல என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் இவன் என்ன அடுத்த லெவலுக்கு கொண்டு போறான் என்று மாதவி சொல்ல சுரேகா நான் தான் சொன்னேனேகா இவளை வீட்டை விட்டு அனுப்புவது ரொம்ப கஷ்டம் என்று சொல்லுகிறார். சார் எல்லார்கிட்டயும் கேட்டீங்க என்கிட்ட கேட்கலையே எனக்கு இதுல விருப்பம் இல்லை என்று நந்தினி சொல்லுகிறார்.

என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா என்று சூர்யா கேட்க இருக்கு என்று நந்தினி சொல்ல, சுந்தரவல்லி என்ன அசிங்கப்படுத்து தான இதெல்லாம் செய்ற ஆனா யாரு சிங்க போட போறாங்கன்னு பாரு என்று மனதுக்குள் நினைக்கிறார். எனக்கு போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 14-06-25