தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாக்கியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் சிங்காரம் வயல் வேலைகளை செய்து கொண்டிருக்க நந்தினி போன் போட்டு வீட்டுக்கு போக சொல்லுகிறார் ஏதாவது பிரச்சனையா அம்மா என்று சிங்காரம் கேட்க மறுப்பக்கம் சுந்தரவல்லி சுதாகருக்கு ஃபோன் போட்டு நீ கொடுக்கிற அடியில மொத்த குடும்பமும் பதறி அடிச்சுக்கிட்டு அவளைத் தேடி ஓடி வரணும் என்று சொல்லுகிறார்.
அந்த வேலையை நீங்க சொல்லல நானும் நானே செஞ்சிருப்பேன் அண்ணியாரே என்று சுதாகர் சொல்லுகிறார். பிறகு அருணாச்சலம் சூர்யாவிடம் எந்த சூழ்நிலையிலும் நந்தினியையும் அவ குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்ம கையில இருக்கு என்று சொன்ன சூர்யா அத நீங்க சொல்லவே வேணாம் டாடி என்ன தாண்டி தான் எந்த சக்தியா இருந்தாலும் நந்தினியை தொட முடியும் என்று சூர்யா சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
