தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்றைய ப்ரோமோவில் சுந்தரவல்லி இந்த வீட்டு வாசப்படி கூட மிதிக்க தகுதி இல்லாதவ என்னோட மருமகளா, உன்ன கூப்பிட்டதுக்கு நீயும் பொண்ணும் சரியா செஞ்சிட்டீங்களே டா என்று சிங்காரத்தை பார்த்து கோபமாக பேசுகிறார்.
பிறகு சூர்யா என் பொண்டாட்டிய என் வீட்டுக்குள்ள கூட்டிட்டு போறதுக்கு நான் யாரோட பர்மிஷனும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி என்ன செய்யப் போகிறார்? என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.