Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வம்பிழுக்கும் சுதாகர், பதற்றத்தில் குடும்பத்தினர்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Moondru Mudichu Serial Promo Update 16-04-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி அருணாச்சலத்திடம் சுதாகர் வந்து ஏதாவது பண்றதுக்குள்ள என் குடும்பத்தை காப்பாத்திக்கணும்னு நினைக்கிறேன் என்று சொல்ல, அவன் ஒரு பல்ல புடுங்குன பாம்பு அவன நெனச்சு பயப்படாத மனச குழப்பிக்காத போய் வேலையை பாரு என்று அனுப்பி விட இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரவல்லி வெளியில் வந்து சுதாகருக்கு ஃபோன் போட்டு நல்லா சாப்பிடுங்க நல்லா தூங்குங்க ரெஸ்ட் எடுங்க நிறைய வேலை இருக்கு என்று சொல்ல அதற்கு சுதாகர் எனக்கு இதுக்கப்புறம் தான் நிறைய வேலை இருக்கு என் பெயரை கெடுத்து என்ன அசிங்கப்படுத்தி ஜெயிலுக்கு அனுப்புனவல்ல எப்படி மறக்க முடியும் என்று சொல்ல, அதற்கு சுந்தரவல்லி அந்த குடும்பத்தை அடிக்கிற அடியில குடும்பமே இங்க வந்து நிக்கணும் என்று சொல்ல, மெட்ராசுக்கு எதுக்கு என்று கேட்கிறார் அவங்க இங்க வந்து பக்கத்துல இருந்தா ஏதாவது பிரச்சனை வந்தா அவங்க அம்மாச்சியை தேடி ஓடுவால்ல அதுக்கு தான் என்று சொல்லுகிறார்.

சரிங்க அண்ணியாரே நீங்க சொன்ன மாதிரியே பண்ணிடுவேன் என சொல்லி ஃபோனை வைக்கிறார். பிறகு அருணாச்சலம் சூர்யாவிடம் நந்தினி குடும்பம் விஷயத்தைப் பற்றி பேசுகிறார். ஊர்ல தனியா வயசுக்கு வந்த ரெண்டு தங்கச்சி ஒரு அம்மாச்சி, உடம்புக்கு முடியாத அப்பா அப்படி இருக்கும்போது அந்த சுதாகர் வந்து ஏதாவது பண்ணாடுவானோன்னு அவ மனசு கிடந்து அடிச்சுக்கிறது. அதுவும் இல்லாம சுதாகர் வெளியே வந்ததுக்கு அப்புறம் நந்தினி குடும்பத்தை ஏதாவது பண்ணனும்னு நினைப்பா என்று சொல்ல சூர்யா அப்படியே ஏதாவது நடந்தா அவன் ஆயுஸுக்கும் ஜெயிலுக்கு போக வேண்டியதா இருக்கும் என்று சூர்யா சொல்லுகிறார்.

சுதாகர் அடிப்பட்ட பாம்பு அவன் கண்டிப்பா நந்தினி குடும்பத்தை ஏதாவது பண்ண நினைப்பான் அவன் ரொம்ப மோசமானவன் ஒன்னு நந்தினியை தேடி இங்கே வருவான் இல்ல அங்க வர வைப்பான். எப்படி இருந்தாலும் நந்தினிக்கு ஒரு கவசமா இருந்து நம்ப பாதுகாக்கணும் என்று சொல்ல அதெல்லாம் பாத்துக்கலாம் டாடி என்ன தாண்டி தான் எந்த ஒரு சக்தியா இருந்தாலும் நந்தினியை நெருங்க முடியும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். உடனே நந்தினி சிங்காரத்திற்கு போன் போட்டு சுதாகர் வெளியில் வந்த விஷயத்தை சொல்ல சிங்காரம் பதறிப் போகிறார். அவனை எப்படி வெளியே விட்டாங்க வரட்டுமா பாத்துக்கலாம் என்று சொல்ல, அப்படியெல்லாம் இல்லப்பா நடுவுல ஒரு வாட்டி எனக்கு போன் போட்டு மிரட்டுனா என்று சொல்ல, அதெல்லாம் விடுமா நம்ப முன்ன மாதிரி இப்ப தனியா எல்லாம் கிடையாது அருணாச்சலம் ஐயாவும் சின்னவரும் இருக்காரு என்று சொல்ல உங்களுக்கு எதுவும் ஆனதுக்கப்புறம் யார்கிட்டயும் போய் எதுவும் கேட்க முடியாது நீங்க தனியா இருக்க வேணாம் வீட்டுக்கு போப்பா என்று சொல்ல சரி நான் போறேன்மா என்று போனை வைக்கிறார்.

அம்மாச்சி ரஞ்சிதா மற்றும் புனிதாவை அழைத்துக் கொண்டு சாப்பிட கூட்டி வர கதவு திறந்து இருக்கிறது போறப்ப பூட்டிட்டுதான போனேன் என்று சொல்லி வீட்டுக்குள் வர சுதாகர் மீன் குழம்பு தட்டில் போட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு சுதாகர் ஆட்கள் மிரட்ட புனிதா கோபப்படுகிறார். உடனே அம்மாச்சி நீ தப்பு பண்ண ஜெயிலுக்கு போன இப்படி பண்றது எல்லாம் நியாயம் இல்ல வயசு பொண்ணுங்க இருக்குற இடத்துல இப்படி எல்லாம் பண்றது சரி இல்ல வெளியே போங்க என்று சொல்லுகிறார். நான் அப்படிதான் பண்ணுவேன் என்ன பண்ணுவீங்க ஜெயிலுக்கு அனுப்புவீங்களா அப்படி நான் போனும்னா அதுதான் கடைசி தடவையாக இருக்கும் நான் போகும்போது அனுப்பி வைக்கவும் வெளியே வரும்போது பார்க்கவும் நீங்க இருக்க மாட்டீங்க என்று மிரட்டுகிறார்.

இனிமேல் மூணு வேளை சாப்பாடும் உன் வீட்டில் தான் உன் கையால தான் சாப்பிடுவேன் இங்கேயே தான் தூங்குவேன் என்று சொல்ல அம்மாச்சி நீ பேசறது எதுவும் சரி இல்லை என்று கோபப்பட, சுதாகர் அடிக்கப் போக அவரது அடியாள் தடுத்து நிறுத்துகிறார். ஜெயில்ல எல்லார்கூடயும் ஒண்ணா படுத்து தூங்கி பழகிட்டேன் இப்ப எப்படி தனியா தூங்க முடியும் என்று சொல்லிவிட்டு ஆட்டுக்கறியை கொடுத்து அனுப்புகிறேன் சமைத்துவை என்று சொல்லிவிட்டு போகும்போது கையை புனிதாவின் ஷாலில் துடைத்துவிட்டு போக பயப்படாதீங்கம்மா உங்க அப்பா வரட்டும் பேசிக்கலாம் என்று சொல்லுகிறார். மறுபக்கம் நந்தினி அப்பா வீட்டுக்கு போச்சா இல்லையானு தெரியலையே போன் போட்டாலும் எடுக்கல என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அம்மாச்சி இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு என்ன பண்றது தம்பி என்று கேட்க நந்தினி ஏற்கனவே போன் பண்ணி சொன்ன விஷயத்தை குடும்பத்தினரிடம் சொல்லுகிறார். நந்தினியின் போன் வர சிங்காரம் நந்தினிக்கு எதுவும் தெரியக்கூடாது என்று சொல்லுகிறார் ரஞ்சிதா தெரிஞ்சா தானே அக்கா ஹெல்ப் பண்ணும் என்று சொல்ல, சுதாகரால நந்தினிக்கும் பிரச்சனை வரும் யாரும் எதுவும் சொல்லக்கூடாது சத்தியம் பண்ணுங்க என்று கேட்கிறார்.

நந்தினி சிங்காரத்திற்கு போன் போட அவர் எடுத்தவுடன் எதுக்குப்பா போன் பண்ணா எடுக்கல அங்கே ஏதாவது பிரச்சனையா சுதாகர் வந்தானா என்று கேட்க நீ பதறாதமா நீ சொல்ற மாதிரியெல்லாம் எதுவும் நடக்காது, அப்பா வயலுக்கு போயிட்டு வந்தேன் வீட்டுக்கு வந்து பேசலாம்னு நெனச்சேன் என்று சொல்ல நிஜமாவா நம்பலாமா என்று நந்தினி கேட்க சிங்காரம் தயங்கிக்கொண்டே உண்மைதான் அம்மா சொல்றேன் என்று சொல்ல இல்ல அந்த சுதாகர் அப்படி விட்ற ஆள் இல்லை நீ பொய் சொல்றியாப்பா என்று கேட்க நான் ஏம்மா பொய் சொல்லணும் என்று கேட்க நான் கஷ்டப்படுவேன் வருத்தப்படுவாங்க வந்துருவேன் என்று தானே இப்படி சொல்றீங்க என்று நந்தினி கேட்கிறார் உடனே நீ வேணும்னா அம்மாச்சி கிட்ட பேசு என்று சொல்லி கொடுக்கிறார்.

அம்மாச்சியும் எதுவும் நடக்காதது போல் நலம் விசாரிக்க எனக்கு நினைப்பு அங்கே இருக்க அம்மாச்சி அந்த சுதாகர் வேற வெளியே வந்துட்டான் ஏதாவது பிரச்சனை பண்ணுவானோன்னு பயமா இருக்கு என்று சொல்ல அவன் வந்தா நாங்க விட்டுருவோமா அவன் மூஞ்சில வெந்நீர் ஊத்திடுவேன் நீ பயப்படாத நந்தினி இன்னைக்கு மீன் குழம்பு வச்ச உன்னுடன் ஞாபகமா தான் இருந்தது என்று பேச, அம்மாச்சி புனிதாவிடம் போனை கொடுக்கிறார். உடனே சிங்காரம் எதையும் சொல்லக்கூடாது என்று செய்கை காட்ட புனிதா நந்தினியிடம் நலம் விசாரிக்க நந்தினி நீங்கதான் தைரியமா இருக்கணும், அம்மாச்சியையும், அப்பாவையும் பாத்துக்கணும் என்று சொல்ல, உடனே ரஞ்சிதா இவங்க சொல்றது எல்லாம் பொய் என்று போனை வாங்கி சுதாகர் வந்ததாக சொல்லிவிடுகிறார். இதனால் நந்தினி அதிர்ச்சி அடைகிறார்.இத்துடன் எபிசோடு முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் நான் சுதாகர் கிட்ட பேசுறேன் என்று சொல்ல நீங்க பேசினால் மட்டும் தான் கேட்டுருவான ஐயா என்று கேட்கிறார். உன்னால தனியா போய் சுதாகர் சமாளிக்க முடியாது அவனை என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் யூ டோன்ட் வரி என்று சொல்லுகிறார்.

சிங்காரம் கத்தியுடன் நிற்க சுதாகர் உன் வீட்டுக்குள்ள போய் பாய விரிச்சு படுக்கப் போற நீ என்ன பண்றியோ பண்ணிக்கோ என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 16-04-25
Moondru Mudichu Serial Promo Update 16-04-25