Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, நந்தினிக்கு ஆதரவாக நிற்கும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

Moondru Mudichu Serial Promo Update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் , அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் மண்டபத்திலிருந்து அனைவரும் கிளம்பி வீட்டுக்கு வர வரும் வழியில் மாதவி வேலை செய்யும் பெண்ணிடம் ஆரத்தி தட்டு கரைச்சுவை என்று சொல்லுகிறார் அம்மா ஹால்ல தான் அம்மா இருக்காங்க பார்த்தா பிரச்சனையாகும் என்று சொல்ல பிரச்சனை இல்ல பெரிய கலவரமே வெடிக்கும் அவங்களுக்கு தெரியாம பண்ணு என்று சொல்ல,சரி என அவர் சொல்லிவிட்டு போனை வைக்கிறார். சுரேகா எதுக்கு ஆரத்தி எடுக்க சொல்ற என்று கேட்க கலகம் பொறுக்காமல் வழி பொறக்காது என்று தத்துவம் சொல்லுகிறார்.

பிறகு வீட்டுக்கு வந்து இறங்க நந்தினி நடந்ததையே நினைத்துக் கொண்டு கண்களில் கண்ணீருடன் அப்படியே அமைதியாக நிற்கிறார். நான் பாத்துக்கிற மாலினி நீ வா என்று சூர்யா கூப்பிடுகிறார். ஆரத்தி தட்டுடன் வேலை செய்யும் பெண் வர ஆரத்தியா எடுங்க எடுங்க என்று சூர்யா சொல்லுகிறார்.

உடனே மாதவியை கூப்பிட்டு அக்கா நீங்க எடுங்க என்று சொல்ல சுரேகா போய் எடுக்க என்று அனுப்ப, இதை எல்லாம் அம்மா பாத்துக்கிட்டு இருப்பாங்க எனக்கு எதுக்கு என்று சொல்லிவிட்டு நீயே எடுமா ஒன்னும் பிரச்சனை இல்ல என்று சொல்ல வேலை செய்யும் பெண் ஆரத்தி எடுக்க சுந்தரவல்லி அதனை வேகமாக தட்டி விடுகிறார். உடனே கோபத்துடன் உங்க எல்லாருக்கும் கொஞ்சம் கூட அறிவே இல்லையா இந்த வீட்டு வாசப்படி கூட மிதிக்க தகுதி இல்லாதவள இங்க கூட்டிட்டு வந்து நிறுத்தி இருக்கீங்க, உங்க எல்லாருக்கும் என்ன ஆச்சு என்று கோபமாக கத்த சூர்யாவிடம் நீ என்ன மட்டும் அசிங்கப்படுத்த உங்க அப்பா இந்த குடும்பத்தை அசிங்கப்படுத்துற எல்லாரும் எவ்ளோ அசிங்கப்படுத்தி பேசுறவங்க உனக்கு தெரியுமா? என் பின்னாடி நின்னு பேசறதுக்கே தகுதி வேணும்னு நினைக்கிறவங்க இந்த சுந்தரவல்லி ஆனால் என் முன்னாடி பேசுற தகுதி இவளுக்கு கிடையாது என்று சொல்லுகிறார். அருணாச்சலம் நடந்தது நடந்து போச்சு இதுக்கப்புறம் நடக்க வேண்டியது பார்க்கலாம் என்று சுந்தரவல்லி இடம் சொல்ல போதும் நிறுத்துங்க இதுக்கு காரணம் எல்லாமே நீங்கதான் அவங்கள அங்கு கூட்டிட்டு போனது அவளை இங்க வேலைக்காக வரவச்சது எல்லாமே போதும் இது எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான் என்று கத்துகிறார்.

இது மட்டும் இல்லாமல் நந்தினி அவரது குடும்பத்தையும் அவமானப்படுத்தும் படி பேச சிங்காரத்திடம் உங்கள நம்பி வர வச்சதுக்கு நல்லா செஞ்சிட்டீங்களேடா என்று மரியாதை இல்லாமல் பேசுகிறார் என் பொண்ணுக்கு எதுவும் தெரியாது மா என்று அவர் சொல்ல வாயை மூடு என்று அதட்டுகிறார். ஒன்னும் தெரியாம தான் உன் பொண்ணு மணமேடை மேல ஏறி நின்னாலா? அவளுக்கு அங்கு என்ன வேலை எதுக்கு அவ மேல இருந்தா என்று சிங்காரத்திடம் கோபமாக பேசுகிறார். பிளான் பண்ணி நீயும் உன் பொண்ணு இப்படி பண்ணிட்டீங்கன்னா என்று சொல்ல என்ன நடந்ததுன்னு தெரியாம நாங்க நில கொளஞ்சி நிற்கிறோமா என்று சொல்ல எதுக்கு நிக்கிறீங்க, எதுக்கு நிக்கணும் தாலிய கழட்டி கொடுத்துட்டு போயிட்டே இருங்க என்று சுந்தரவல்லி சொல்லுகிறார்.

அருணாச்சலம் எதுக்கு இப்படி பேசிகிட்டு இருக்கேன் என்று கேட்க ஆமா எனக்கு பைத்தியம் புடிச்சிருக்கா அதனால தான் இப்படி பேசிகிட்டு இருக்கேன் என்ன நீங்க தானே இப்படி பேச வச்சிருக்கீங்க என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்க சூர்யா என்னோட பொண்டாட்டி நான் உங்ககிட்ட பர்மிஷன் கேட்டு தான் அவளை வீட்டுக்குள்ள கூட்டிட்டு போனேன் கிடையாது என்று சொல்லிவிட்டு நான் உள்ள போக போறேன் என்று நந்தினியில் கையைப் பிடித்துக் கொள்கிறார் உடனே ஒன்னு மட்டும் மிஸ் ஆகுது என்று சொல்லிவிட்டு கீழே விழுந்து ஆரத்தி தட்டை எடுத்து நந்தினிக்கு ஆரத்தி எடுத்து போட்டு வைக்கிறார். நந்தினி கூட்டிக்கொண்டு சூர்யா உள்ளே செல்ல அருணாச்சலம் சிங்காரத்தை உள்ளே கூப்பிடுகிறார் இவர் உள்ள வந்தான்னா அவ்வளவுதான் என்று சுந்தரவல்லி மிரட்டி விட்டு போக சிங்காரம் வெளியில் அழுது கொண்டே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

பிறகு நந்தினி என் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்ற சூர்யா மாலினி இது உன்னோட வீடு வா இது பெட்ரூம் போகலாம் என்று அவருடன் ரூமுக்கு அழைத்து சென்று விட்டு மாலையை கழட்டிவிட்டு பெட் மேல் வீசுகிறார். ஒரே டென்ஷன் மண்டபத்துல ஒரே கூட்டமா இருந்தது எனக்கு பிடிக்கவே இல்லை என்று சொல்லிவிட்டு இப்பதான் ரிலீஃப் இருக்கு என்று சரக்கை எடுத்து குடிக்கிறார். எதுவும் பேசாமல் நந்தினி அமைதியாகவே நின்று கொண்டிருக்கிறார்.

மறுபக்கம் ரூமில் சுரேகா மாதவி மாதவியின் கணவர் என மூவரும் சந்தோஷமாக சிரித்து பேசுகின்றனர். நல்லவேளை அந்த அர்ச்சனாவை மருமகளா கொண்டு வரல அவ வந்திருந்தானா நம்மள வீட்டை விட்டு அனுப்பிட்டு இருப்பா, என்று பிளான் போடுகின்றனர். இப்பயும் இவள வீட்ட விட்டு நம்ப அனுப்பக்கூடாது அம்மா கண்டிப்பா பிரச்சனை பண்ணுவாங்க ஆனா நம்ம இவளுக்கு சப்போர்ட் பண்றது அம்மாவுக்கு தெரியக்கூடாது என்று சொல்ல, சுரேகா ஆயிரம் இருந்தாலும் அவ எல்லாரும் முன்னாடியும் இப்ப இந்த வீட்டோட மருமகளா ஆயிட்டாலே என்ன பண்றது என்று கேட்க அதுவும் கரெக்ட் தான் ஆனால் அவளை இந்த வீட்டு மருமகளால் நம்ம என்னைக்குமே நினைக்க விடக்கூடாது அங்க எப்படி தோட்டக்காரியா இருந்தாலோ அதே மாதிரி இந்த வீட்ல வேலைக்காரியை மட்டும் தான் இருக்கணும் அதை மட்டும் தான் நம்ம அவர்கிட்ட சொல்லி சொல்லி கொட்டி வைக்கணும் என்று திட்டமெல்லாம் தீட்டுகின்றன. இப்போ இன்னைக்கு நைட்டு இல்ல நாளைக்கு காலையிலேயே அம்மா ஏதாவது ஒரு கலவரத்தை உண்டு பண்ணுவாங்க அதுக்கு ஏத்த மாதிரி ஏதாவது திட்டம் போட்டு அவளை இந்த வீட்டில நிறுத்தி வைக்கணும் என்று மாதவி பிளான் போடுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் ரூமில் இருக்கும் பொருட்களை தூக்கிப்போட்டு உடைத்து சுந்தரவல்லி யார் அவ எனக்கு சமமா மருமகளா வந்து நிற்கிறா என்று அழுது கொண்டே பேசுகிறார்.

சூர்யா நந்தினி இடம் நீ கவலைப்படாத உனக்காக நான் இருக்கேன் உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் உனக்காக நான் நிப்பேன் என்று சொல்கிறார். மாதவி சுந்தரவல்லி இடம் அவள வீட்டை விட்டு அனுப்ப வேண்டியது எங்க பொறுப்பு நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update
Moondru Mudichu Serial Promo Update