Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அருணாச்சலத்திடம் நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி எடுக்கப் போகும் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

Moondru Mudichu Serial Promo Update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அர்ச்சனா கோபத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை தூக்கிப்போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து அம்மா அப்பா இருவரும் வருகின்றனர். அர்ச்சனாவை கூப்பிட்டு அம்மா உட்கார வைத்து ஏன் அர்ச்சனா இப்படி எல்லாம் பண்ற என்று பேசிக் கொண்டிருக்கிறார். உடனே மினிஸ்டர் கண்கலங்கி அர்ச்சனாவிடம் பேசுகிறார் நம்மள நம்ப வைத்து கழுத்து அறுத்துட்டாங்க, நீ அந்தப் பையன் மேல ஆசை பட்ட அதனால அந்த குடும்பத்தை பற்றி விசாரிக்காமல் விட்டுட்டமா நான் தப்பு பண்ணிட்டேன் என்னை மன்னித்துவிடுமா என்று கண் கலங்குகிறார். மேலும் நான் ஒரு அரசியல்வாதி நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் ஒரு கல்யாணத்துக்கு போறோம்னா அந்த மணமேடைய பார்க்கும் போது என் பொண்ணுக்கு நடந்தது தான் என் கண்ணு முன்னாடி வந்து நிக்கும். அது மட்டும் இல்லாம நானு வெளியே எங்காவது போய் யாருக்காவது அட்வைஸ் பண்ணா உன் பொண்ணு கல்யாணத்தையே நடத்த தெரியலையே என்று என் மூஞ்சில காரி துப்புவாங்க அந்த அசிங்கத்தை எல்லாம் நான் வாங்கி தான் ஆகணும். ஆனா அந்த குடும்பத்தை நான் சும்மா விடமாட்டேன் என்று பேசுகிறார்.

உடனே அர்ச்சனாவின் அம்மா கெட்டதுலையும் ஒரு நல்லது நடந்திருக்குன்னு நெனச்சுக்கோ அர்ச்சனா அது மாதிரி ஒரு பையனை கட்டிக்கிட்டு நீ என்ன பண்ணி இருப்ப என்று சொல்ல உடனே அர்ச்சனா கோபப்பட்டு உன்னை அம்மானு கூட பார்க்க மாட்டேன் அவ்வளவுதான் எனக்கு அவன் தான் வேணும் எனக்கு சூர்யா முழுசா வேணும் என்று கோபப்படுகிறார். உடனே மினிஸ்டர் அவ கிட்ட என்ன பேசணும்னு உனக்கு தெரியாதா என்று கோபப்பட நீங்க என் மேல கோபப்பட்டாலும் பரவாயில்லை ஆனா ஏற்கனவே தாலி கட்டின ஒருத்தனை எப்படி திருப்பியும் தாலி கட்ட வைக்க முடியும் என்று கேட்க அவளுக்கு எந்த நேரமும் சப்போட்டா இருக்காதீங்க என்று மினிஸ்டரை சொல்கிறார்.

அர்ச்சனா இப்போ நடந்த அசிங்கம் உனக்கு என்னனு தெரியுமா என் உடம்பெல்லாம் அப்படியே நெருப்பில் எரிகிற மாதிரி இருக்கு என்று கோபமாக பேசுகிறார் நான் யாருன்னு நெனச்ச மினிஸ்டர் ஓட பொண்ணு புடிக்கலன்னு சொல்லிட்டு அவமானப்படுத்திட்டு போவ நான் விட்டுடனுமா விடமாட்டேன் யார் முன்னாடி என்ன அசிங்க படுத்தினாலும் அதே ஆளுங்க முன்னாடி என் கால்ல விழுந்து என்ன கல்யாணம் பண்ணிக்கோன்னு கெஞ்ச வைப்பேன் என்று சொல்லுகிறார். உடனே மினிஸ்டரும் அவரது மனைவியை மிரட்டுகிறார் என் பொண்ண அவ்வளவு பேர் முன்னாடி பசிங்கப்படுத்தி இருக்காங்க இனி என்னோட அரசியல் முழுக்க அந்த ஒரு குடும்பத்து மேல தான் என்று வண்ணமாக பேசுகிறார்.

மறுபக்கம் சூர்யா குடித்துக் கொண்டே இப்பதான் நிம்மதியா இருக்க நாங்கள் கழுத்துல தாலி கட்டிட்டேன்னு கவலைப்படாத அது வெறும் மஞ்சள் தடவிய கயிறு மட்டும் தான் உனக்கு கஷ்டமா இருந்தா இங்க இருக்கிற ஏதாவது ஒரு ஹேங்கில்ல மாட்டிடு இது மட்டும் இல்லாம இவ்வளவு பெரிய வீடும் உனக்கு தான் நீ எங்க வேணா போ வா நாலு கார் இருக்கு வெளிய போயிட்டு வா உனக்கு காசு வேணும்னா இந்த டிரால எவ்வளவு இருக்கும் எடுத்துக்கோ அதுவும் பத்தலனா என்னோட டாடி கிட்ட மட்டும் கேளு வேற யார்கிட்டயும் கேட்காத மீதி பேர் எல்லாம் மிருகம் என்று சொல்லுகிறார். அது மட்டுமில்லாமல் இந்த வீட்ல நீ உங்க ஊர்ல எப்படி இருந்தியோ அப்படியே இருக்கலாம் உன் மேல என்னோட சுண்டுவிரல் கூட படாது இந்த ரூமுக்கு வெளிய போனா தான் புருஷன் பொண்டாட்டி ஆனா ரூமுக்குள்ள சூர்யா யாழினி என்று சொல்லுகிறார். நீ பெட்டு மேல படுத்துக்கோ இல்லன்னா கீழ படுத்துக்கோ இல்லன்னா நம்ம இன்னொரு பெரிய பெட் வாங்கிக்கலாம் என்று பேசிக்கொண்டே இருக்கிறார். இன்னைக்கு எங்க அம்மாவோட முகத்தை பார்க்கணுமே ரொம்ப நாளுக்கு அப்புறம் எதையோ சாதிச்ச மாதிரி எனக்கு ஒரு சந்தோஷமா இருந்தது இன்று பேசிவிட்டு சூர்யா எனக்கு தூக்கம் வருது யாழினி என்று தூங்கி விடுகிறார்.

நந்தினி அப்படியே உட்கார்ந்து கொண்டு நடந்ததை நினைத்து கதறி அழுகிறார். வெளியில் சிங்காரம் அழுது கொண்டிருக்க அருணாச்சலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த நேரம் பார்த்து ரூமில் பொருள் உடையும் சத்தம் கேட்டு உள்ளே போனால் அங்கு சுந்தரவல்லி கோபத்தில் ரூமில் இருக்கும் பொருட்களை தூக்கி போட்டு உடைக்கிறார். உடனே அருணாச்சலம் அவரை தடுத்து நிறுத்தி பேசுகிறார். எதுக்கு இப்படி கோவமா நடந்துக்கிற என்று கேட்க அவை யாருங்க அவ வந்து இந்த வீட்டோட மருமகனா அத நான் ஏத்துக்கணுமா? எல்லாருமா சேர்ந்து என்ன பழி வாங்கிட்டீங்க.. எல்லாத்தையும் கரெக்டா பண்ணிட்டீங்களே என்று அருணாச்சலத்திடம் கோபப்பட நீ என்ன பேசிக்கிட்டு இருக்க சூர்யா தாலி கட்டும்போது உனக்கு எவ்ளோ அதிர்ச்சியா இருந்ததோ அதை அதிர்ச்சி தான் எனக்கும் இருந்தது நான் அவன திட்ட தான் செய்தேன் என்று சொல்லுகிறார். ஆமாமா ரொம்ப திட்டுனீங்க நானும் தான் பார்த்தேன் நான் தாலியை கழட்டி போடுன்னு சொன்னப்ப வாய் திறந்தீங்களா எதுவுமே சொல்லலையே எல்லா திட்டம் போட்டு தானே பண்ணீங்க. நீங்க குலதெய்வ கோயிலுக்கு போற அப்பவே முடிவு பண்ணிட்டீங்க இதெல்லாம் பண்ணனும்னு என்று சொல்லுகிறார். அந்தக் கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாரும் என்ன பார்த்து பார்வை இருக்கே என் உடம்பு நடுங்கி போச்சு என்றெல்லாம் கோபமாக பேசுகிறார் அவங்கள இதுக்கு மேல நான் எப்படி ஃபேஸ் பண்ணுவேன் என்ன பாக்குறதுக்காக அப்பாயின்மென்ட் கேட்டு நிக்கிறவங்க எல்லாம் இருக்காங்க ஆனா இந்த கிராமத்தில் இருந்து வந்தவன் என் வீட்டு மருமக அவ கூட நான் உட்கார்ந்து பேசணுமா என்று கேட்க நான் உன்னை பேச எல்லாம் சொல்லல பொறுமையா முடிவு எடுக்கலாம் என்று தான் சொல்ற என்று சொல்லுகிறார்.அதுதான் எல்லாம் பண்ணிட்டீங்களே இதுக்கப்புறம் என்ன முடிவெடுக்கணும் என்று கேட்க இப்போ இந்த பிரச்சனைக்கெல்லாம் நான் தான் காரணம் என்று சொல்றியா என்று கேட்க இதில் என்ன சந்தேகம் நீங்க மட்டும் தான் காரணம் என்று கோபமாக சொல்ல அப்படியே இருக்கட்டும் காலம் வரும்போது உனக்கு எல்லாம் உண்மையை தெரிய வரும் என்று அருணாச்சலம் கோபப்படுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் உங்களுக்கும் உங்க குடும்பத்திற்கும் விசுவாசமாக இருந்ததற்கு உங்க பையன் ரொம்ப நல்ல பரிசு கொடுத்துட்டாரு என்று நந்தினி அழுது கொண்டே அருணாச்சலத்திடம் சொல்லுகிறார்.

மாதவியிடம் கோபமாக பேசிவிட்டு நானே போய் அனுப்புறேன் என்று கோபமாக சுந்தரவல்லி மேலே வருகிறார். அருணாச்சலம் நந்தினி இடம் இன்னைக்கு இப்படி இருக்கிற சூர்யா எதனால இப்படி ஆனான்னு உனக்கு தெரியணும் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update