Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நந்தினி பழிவாங்கிய போலீஸ்காரன், அதிர்ச்சியில் குடும்பத்தினர், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ

Moondru Mudichu Serial Promo Update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் மினிஸ்டர் சுந்தரவல்லி வீட்டிற்கு வருகிறார். சுந்தரவல்லி என்ன விஷயம் என்று கேட்க நேற்று கொடுத்த பத்திரிக்கையை திருப்பி கேட்கிறார். எதற்கு என எல்லோரும் புரியாமல் இருக்க இனிமே இந்த பத்திரிக்கைக்கு வேலை இல்ல, என்று சொல்லுகிறார் என்ன ஆச்சு என்று கேட்க என் பொண்ணு ஒருத்தர லவ் பண்ற அந்தப் பையனை தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று சொல்லுகிறார். அது வேறு யாருமில்லை உங்க பையன் சூர்யா தான் என்று மினிஸ்டர் சொன்னவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ஆனால் சுந்தரவல்லி சந்தோஷப்பட்டு சரி என சொல்லி விடுகிறார். நான் உங்ககிட்ட நேத்து என்ன சொன்ன இது மாதிரி ஒரு பொண்ணு இருக்கிற விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா என்ன பையனுக்கே கல்யாணம் பண்ணி இருப்போம் என்று சொன்னேன் தானே பண்ணிடலாம் என்று ஒத்துக் கொள்கிறார். மேலும் மினிஸ்டர் சுந்தரவல்லிக்கு ஒரு கோரிக்கை வைக்கிறார். ஏற்கனவே கல்யாண தேதி பார்த்து விட்ட நிலையில் அதே தேதியில் இந்த கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல சுந்தரவல்லி சம்மதிக்கிறார்.

மேலும் நாளைக்கு நல்ல நாளா இருக்கு சாங்கியத்திற்கு பூ வச்சு பொட்டு வச்சுட்டு வந்துடுங்க என்று கூப்பிட அதற்கும் சுந்தரவல்லி சம்மதிக்கிறார். அவர்கள் சொல்லிவிட்டு கிளம்பியவுடன் சூர்யாவின் அப்பா சூர்யா கிட்ட இத பத்தி சொல்லாமலேயே எல்லாம் முடிவும் நீயே எடுத்துட்டியா என்று கேட்கிறார். அந்த சாமியார் என்ன சொன்னாரு நீங்க குலதெய்வம் கோயிலுக்கு போயிட்டு வந்தா தானா பொண்ணு கிடைக்கும்னு சொன்னாரு ஆனா முதல்ல நம்பல, ஆனா இப்ப நடக்கும்போது நம்புற என்று சொல்லுகிறார்.

மாதவி,சுரேகா என எல்லோரும் சூர்யா இதுக்கு ஒத்துக்க மாட்டார் என்று சொல்லுகின்றனர், சூர்யாவின் அப்பா அவன்கிட்ட அவனோட சம்மதத்தை வாங்காமல் எப்படி பண்ண முடியும் என்று கேட்க அதற்கு சுந்தரவல்லி மினிஸ்டர் ஓட பொண்ணு கழுத்துல சூர்யா தாலி கட்டுவான் என்று உறுதியாக சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறதோ என்று அருணாச்சலம் சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

உடனே மாதவி அவர் சாதாரண வீட்டுப் பொண்ணு இல்ல எக்ஸ் மினிஸ்டர் ஓட பொண்ணு ஏற்கனவே நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்திட்டு இவனை தான் கல்யாணம் பண்ணனும்னு முடிவு எடுத்து இருக்கானா அவன் எப்படி பட்டவன்னு தெரிஞ்சுக்கோ அவ நம்ம வீட்டுக்கு வந்தா நம்ம எல்லாம் க்ளோஸ் என வில்லத்தனமாக பேசுகிறார்.

மறுபக்கம் காரில் சிலர் ஒருவரை மூட்டையில் அடைத்துக் கொண்டு அவர் மீது என்னை ஊற்றி கொலுத்த முயற்சி செய்கின்றனர். ஆனால் நந்தினி யார்ரா நீங்க? என்ன பண்றீங்க? துரத்திக் கொண்டு வர அவர்கள் காரில் ஏறி ஓடி விடுகின்றனர். மூட்டையில் கட்டி வைத்திருந்த நபரும் தப்பித்து ஓடி விடுகிறார். இதனால் நந்தினி ஒன்றும் புரியாமல் நிற்கிறார். முட்டையில் இருந்த நபர் நந்தினியை மறைந்து நின்று பார்த்துவிட்டு சென்று விடுகிறார்.

நந்தினியின் மாமா பேக் உடன் வீட்டுக்கு வருகிறார். நந்தினி அப்பா மற்றும் தங்கைகள் இருவரும் உள்ளே கூப்பிட இந்த குலவி மாதிரி ஒரு கிழவி இருக்குமே எங்க என்று கேட்கிறார். அம்மாச்சி வீட்டில் இருந்து வெளியே வர என்னடா எங்க கிளம்பிட்ட திரும்பவும் துபாய்கா சொல்ல இனிமே துபாய்க்கு திரும்பவே மாட்டேன் என்று சொல்லுகிறார். நந்தினி வந்தவுடன் மீண்டும் திருமணம் குறித்து பேச உன் முடிவை மாத்திக்கோ மாமா என்று சொல்லுகிறார். நீ உன் முடிவை மாத்த மாட்டியா என்று சொல்லிவிட்டு துபாய்க்கு எல்லாம் போல சென்னைக்கு தான் போற நந்தினி ஓட மனசு மாறின உடனே திரும்பி வரணும்ல அதுக்காக தான் பக்கத்திலேயே போற என் பிரண்டு ஒரு வேலை இருக்குன்னு வரச் சொல்லி இருக்கான் அதுக்காக போறேன் என்று சொல்லுகிறார். அம்மாச்சி நல்ல நேரம் முடியறதுக்குள்ள போயிட்டு வாடா என்று சொல்ல அடுத்த முறை வரும்போது நல்ல முடிவா சொல்லு தாலியோட வரேன் என்று சொல்ல, இல்லைனா என்று அம்மாச்சி கேட்க உனக்கு மாலையோட வருவேன் என்று கிண்டல் அடித்து விட்டு கிளம்புகிறார்.

பிறகு நந்தினி டவுனுக்கு கிளம்புவதாக சொல்லி இரண்டு தங்கைகளையும் கூட்டிக்கொண்டு பஸ்ஸில் ஏறி செல்கிறார். அங்கு இருக்கும் ஒரு லேடி நந்தினி உத்து பார்த்தேன் என்று கொண்டிருக்க இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் நந்தினியை போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்திருக்க அம்மாச்சி உங்களை கைஎடுத்து கும்பிடுற அவளை விட்டுடுங்க என்று கெஞ்சுகிறார். பிறகுதான் அந்த போலீஸ்காரன் மற்றும் சுதாகரன் திட்டம் என தெரிய வருகிறது.

இன்ஸ்பெக்டர் எந்த கேஸ் எல்லாம் பெண்டிங்ல இருக்கோ எல்லாத்தையும் இந்த பொண்ணு மேல எடுத்துபோடு என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update