Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரவல்லி கொடுத்த ஷாக், சூர்யா சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

Moondru Mudichu Serial Promo Update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் மன்னாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி நீங்க கிளம்புங்க என்று குடும்பத்தினரிடம் சொல்ல சரிமா நாங்க கிளம்பிடுறோம். சின்னையாவையும் பெரிய யாவையும் பார்த்துவிட்டு நாங்க கிளம்புகிறோம் என்று சொன்னவுடன் மாதவி அவங்க வர லேட் ஆகும் எதுக்கு நின்னுட்டு இருக்கீங்க உட்காருங்க என்று சொல்ல அம்மாச்சி பரவால்ல என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சூர்யாவும் அருணாச்சலமும் வருகின்றனர். சிங்காரத்தைப் பார்த்து இருவரும் நலம் விசாரிக்க சூர்யா அம்மாச்சியிடம் பேசி எப்படி வந்தீங்க சொல்லிருந்தாய் நான் கூட்டிட்டு வந்திருப்பேன்ல என்று சொல்ல ஆட்டோ ஏறி வந்துட்டேன் தம்பி என்று சொல்லுகிறார் சிங்காரம்.

பிறகு சிங்காரம் குடும்பத்தினரிடம் அருணாச்சலம் உங்ககிட்ட கைகட்டி கூனி குறுகி நிக்கிறது தவிர வேற வழி எனக்கு கிடையாது.இவன் மாத்தி தாலி கட்டியதால தான் எவ்வளவு பிரச்சனை உங்க குடும்பத்தில் நந்தினி எவ்வளவு முக்கியமோ எனக்கு தெரியும் அவ ஒரு அம்மாவா இருந்து இந்த குடும்பத்தை பார்த்துக்கிட்டா, இருந்தாலும் இந்த ஊர் பேசுறதெல்லாம் தாங்கிகிட்டு எப்படி இருக்க முடியும் என்று பேசுகிறார். அதுக்கு தான் ஐயா மனசு வருத்தமா இருக்கு என்று அம்மாச்சி சொல்லுகிறார்.

பிறகு சிங்காரம் இதையெல்லாம் எதுக்கு ஐயா கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கனும் விடுங்க அத்தை என்று சொல்லுகிறார் பிறகு சிங்காரம் அருணாச்சலத்திடம் ஆயிரம் தான் இருந்தாலும் என் பொண்ணு இந்த வீட்ல வாழ்ந்துகிட்டு இருக்கா எங்களால முடிஞ்ச தல தீபாவளி துணி மற்றும் நகையை வாங்கி வந்திருக்கோம் என்று சொல்லி கொடுக்க சூர்யா எனக்கா என்று சந்தோஷப்படுகிறார். உடனே நந்தினி எங்கிருந்துபா காசு ரெடி பண்ண என்று கேட்க உனக்கு ஞாபகம் இல்லையாமா நீ வாங்கின மோதிரம் தான் இது என்று சிங்காரம் சொல்லுகிறார். உடனே தட்டை எடுத்து நந்தினி மற்றும் சூர்யாவிடம் கொடுக்க அவர்கள் இருவரும் வாங்கிக் கொள்கின்றனர் அருணாச்சலம் சூர்யா தீபாவளிக்கு நீ இந்த டிரஸ் தான் போட்டுக்கணும் என்று சொல்ல கண்டிப்பாக டாடி என்று சொல்லுகிறார்.

சிங்காரம் கையில் மோதிரம் போட அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லி கோபமாக வருகிறார் உடனே மாதவியும் சுரேகாவும் இப்ப இங்க ஒரு சம்பவம் நடக்கப்போகிறது என்று சொல்லுகின்றனர். வேகமாக வந்த சுந்தரவல்லி தட்டை எடுத்து வீசி சிங்காரம் குடும்பத்தினை அசிங்கப்படுத்தி பேசுகிறார். உடனே சூர்யா தாய் கிழவி பாட்டு பாடி, அருணாச்சலத்திடம் இவங்க எல்லாம் யாரு என்னோட மாமனாரு மச்சினிச்சி பாட்டி என்று சொல்லி அவங்க என்ன பார்க்க இங்க வந்து இருக்காங்க, தல தீபாவளி கொண்டாட வந்திருக்காங்க என்று சொல்ல சுந்தரவல்லி கடுப்பாகிறார். அது மட்டும் இல்லாம அவங்க கொஞ்ச நாள் இருந்துட்டு தான் போவாங்க என்று சொல்ல சுந்தரவல்லி கோபமாகி ரூமுக்கு சென்று விடுகிறார். நாங்க கிளம்பறோம் என்று சிங்காரம் சொல்ல சூர்யா கண்டிப்பா ரெண்டு நாள் கழிச்சு தான் நீங்க போகணும் என்று சொல்லிவிட அனைவரும் சம்மதிக்கின்றனர். மறுபக்கம் சூர்யா உட்கார்ந்து கொண்டிருக்க நந்தினி என் தங்கைகள் இருவரும் வந்து எங்க அக்கா வாழ்க்கையை இப்படி பண்ணீங்க, உங்க வீட்டிலேயே நீங்கதான் நல்லவங்கன்னு நினைச்சேன் ஆனா இருக்கிறவர்களை விட நீங்க தான் ரொம்ப கெட்டவங்க, நாங்க சந்தோஷமா இருந்தோம் ஆனா இப்படி தாலி கட்டி எங்க அக்காவோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டீங்களே என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அம்மாச்சி வந்து அவர்களை அழைத்துச் சென்று விடுகிறார். நந்தினி மாடியில் கண் கலங்கி அழுது கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து கல்யாணம் அங்கே வருகிறார். அப்பாக்கு தங்கச்சி உங்களுக்கெல்லாம் டீ போட்டு இருக்க கொடுத்திடுமா என்று சொல்லுகிறார்.

நந்தினி குடும்பத்தினர் அனைவரும் சாமான் தேய்த்துக் கொண்டிருக்க நீங்க எதுக்கு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க நான் பாத்துக்குறேன் என்று நந்தினி சொல்லுகிறார் இதுல போய் என்ன இருக்கு இது என்று அம்மாச்சி சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் வந்து நீங்க எதுக்கு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார் உடனே சிங்காரம் இதுல என்னய்யா இருக்கு நம்ம வீட்டுக்கு போயி என்று சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து மாதவியும் அவரது கணவரும் வந்து எந்த கடையில் ஸ்வீட் வாங்கலாம் என்று பேசிக் கொண்டிருக்க உடனே சிங்காரம் ஸ்வீட் எல்லாம் இருக்கு கடையில வாங்கணும் வீட்டிலேயே விதமா செஞ்சுக்கலாம் என்று சொல்ல நந்தினி அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்லுகிறார். உடனே அருணாச்சலம் சிங்காரம் சொல்றதுதான் சரி வீட்டிலேயே செய்யலாம் என்று சொல்லி முடிவெடுக்க நந்தினியும் அவர்களது குடும்பத்தினரும் வெளியில் அடுப்பு பத்த வைத்து பலகாரங்களை சுட்டு அடுக்குகின்றனர் இதனை சுந்தரவல்லி பார்க்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது

இன்றைய ப்ரோமோவில் இந்த வீட்டில ஏத்துக்க எனக்கு யாரும் இல்ல, தீபாவளி சீர் எடுத்துட்டு வந்த அப்பாவுக்கு மிஞ்சினது அவமானம் மட்டும்தான்.

என்ன அடியோடு வெறுக்கும் சுந்தரவல்லி அம்மா, அவங்களுக்கு எதிரான நிற்கிற சூர்யா சார் இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல நான் எப்படி வாழ போறேன் என்று நந்தினி யோசிக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update
Moondru Mudichu Serial Promo Update