Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரேணுகா சொன்ன வார்த்தை, அர்ச்சனா போடும் திட்டம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Moondru Mudichu Serial Promo Update 24-05-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினியும் விஜியும் வட்டி கட்ட டெல்லி வீட்டுக்கு வருகின்றனர். அந்த நேரம் பார்த்து ஏற்கனவே கடன் வாங்கிய நபர் கொடுக்காததால் அவர் பொண்டாட்டியை அழைத்து வந்து இங்கு வச்சிருக்க திருப்பி கொடுத்த உடன் அனுப்பி இருக்கிறார். நீ மட்டும் பணம் கொடுக்கலைன்னா உன் பொண்டாட்டி முழுசா கிடைத்திருக்கமாட்டா என்றும் மிரட்டி அனுப்ப, இவர்களைப் பார்த்தவுடன் டெல்லி கூப்பிடுகிறார். வடிகட்ட தான் இன்னும் நாள் இருக்கே என்று கேட்க இருக்குதா ரெண்டு நாள் முன்னாடி கொடுக்கணும்னு தான் வந்தோம் என்று சொல்ல இப்படி எல்லாரும் இருந்தா எங்களுக்கு சந்தோஷம்தான் என்று சொல்லுகிறார். அந்த சுந்தரம் பையன் கிட்ட தான் இட்லி இடியாப்பம் செய்து கொடுக்குறீங்கன்னு கேள்விப்பட்டேன் அவன் ஒரு காலத்துல என் கிட்ட தான் பணம் வாங்கி கடை ஆரம்பிச்சா நீங்களும் நல்லா வருவீங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

வெளியில் வந்தவுடன் விஜி நீ எவ்வளவு பெரிய விஷயம் பண்ணி இருக்க தெரியுமா நந்தினி முதல் தவணை கரெக்டா கட்டி இருக்க என்று பாராட்டி பேச நந்தினி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அர்ச்சனா காரில் வந்து நிற்கிறார். நந்தினி இதுவரைக்கும் இரண்டு வாட்டி அந்த இடத்துக்கு போயிருப்போம் ஏதோ தப்பான இடத்துல போய் மாட்டிட்டோமோன்னு தோணுது எனக்கு எதுவுமே சரியா தோணல என்று சொல்ல விஜி அதெல்லாம் நீ எதுவும் பெருசா எடுத்துக்காத வட்டிக்கு விடுறவங்கள அப்படித்தான் இருப்பாங்க என்று சொல்லுகிறார். இதை கவனித்த அர்ச்சனா இவன் எவ்வளவு பெரிய தில்லாலங்கடின்னு தெரியாம இவன் கிட்ட வந்து சிக்கி இருக்கீங்களே இவனை தூண்டிவிட்டாலே பிரச்சனை முடிஞ்சிடும் என்று சொல்லி வட்டி கட்ட விடாம ஏதாவது பண்ணனும் என்று முடிவு எடுக்கிறார்.

மறுபக்கம் மாதவி அசோகன் மற்றும் சுரேகா மூவரும் சாப்பிட உட்கார மாதவி நந்தினி அப்பா வேலைக்கு சேர்ந்தது உனக்கு தெரியுமா என்று கேட்க எனக்கு தெரியாது என்று சொல்லுகிறார். சுரேகா இவர் எப்படி உண்மையை சொல்லுவாரு அப்பா பெரிய ஜால்ரானா இவன் சின்ன ஜால்ரா என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் சாப்பிட வர அனைவரும் அமைதியாகி விடுகின்றனர். சுந்தரவல்லி எங்கே என்று கேட்க மாதவி அவங்க பசி இல்லைன்னு சொல்றாங்க என்று சொல்ல அருணாச்சலம் ரூமுக்கு சென்று சுந்தரவல்லியை கூப்பிடுகிறார். பசிக்கல என்று சொல்ல உங்க பையன் பண்ணது மனசும் வயிறும் நிறைஞ்சு போச்சு அவ பேசின வார்த்தை ஒன்னு ஒன்னும் காதுல கேட்கும்போது ஈயத்தை காட்சி காதுல ஊத்துன மாதிரி இருந்தது. அவன் என்னோட சம்மந்தி என நான் சொல்லனுமா ஏற்கனவே 120 செக்யூரிட்டி வேலை செய்றாங்க இந்த ஆளு 121 வது ஆளா சேர்ந்து இருக்கான் அதுக்கு இவன் இவ்வளவு பில்டப் பண்ணிக்கிட்டு இருக்கான் என்ற கோபப்பட, நீ கவுன்சிலிங் தான் போகணும் என்று சொல்ல, எனக்கு அவளையும் அவ குடும்பத்தையும் என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் நீங்க போங்க என்று சொல்ல, இந்தப் பிரச்சனை வந்ததுக்கு நீதான காரணம் சிங்காரத்தை அப்படி நிக்க வைக்கலனா இந்த பிரச்சனையே வந்திருக்காது என்று சொல்லுகிறார்.

நீ செஞ்சது எல்லாமே தப்பு அதுக்கு அப்புறம் சூர்யா செஞ்சது எல்லாமே அதற்கான எதிர்வினை தான் என்று சொல்லுகிறார். இப்போ நீங்க என்ன சொல்ல வரீங்க என்று கேட்க, சூர்யாவை புரிஞ்சுக்கோ நீ சிங்காரத்தை அப்படி நிக்க வெச்சதனாலதான் அவன் அப்படி பண்ணி இருக்கான் என்று சொல்லி சாப்பிட கூப்பிட சுந்தரவல்லி வேண்டாம் என சொல்ல நீ சாப்பிட வரலைன்னா அவன் தான் ஜெயிச்சதா அர்த்தம் என்று சொன்னவுடன் சுந்தரவல்லி சாப்பிட வருகிறார். மறுபக்கம் விவேக் மற்றும் சூர்யா இருவரும் குடித்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து விஜி போன் போட என்னங்க லேட் ஆச்சு இன்னும் வரல என்று கேட்க இரண்டாவது ரவுண்டு அடிச்சுட்டு வரவேண்டியதுதான் என்று சொல்லி உளற பிறகு சமாளிக்கிறார். சரி நான் போனை வைக்கிறேன் என்று சொல்ல ஏதோ கேட்க வந்துட்டு அமைதியா இருக்க என்று சொல்ல நான் சொன்னதை வாங்கிட்டு வாங்க என்று சொல்ல விவேக் உடனே வெக்கப்பட்டு அதெல்லாம் வாங்கி வச்சிட்டேன் என சொல்லி போனை வைக்கிறார். என்ன வாங்கி இருக்க என்று சூர்யா கேட்க மல்லிகைப்பூ அல்வாவையும் காட்ட, இது அவங்களே வாங்க மாட்டாங்களா என்று சூர்யா கேட்க, அவங்க வாங்குறதுக்கு நீ வாங்கி கொடுத்து வைக்கறதுக்கோ வித்தியாசம் இருக்கு என்று சொல்லுகிறார்.

இந்த மல்லிப்பூ அல்வாவை பொண்டாட்டிக்கு வாங்கி கொடுத்தா எந்த ஒரு அம்மாவுக்கும் கோவம் வரும் என்று சொன்னவுடன் சூர்யா விவேக் கையில் இருந்து அல்வாவையும் மல்லிப்பூவையும் வாங்கி விடுகிறார்.மாதவி சுந்தரவல்லி இடம் நான் கூப்பிட்டா மட்டும் வரலன்னு சொல்லிட்டு அப்பா கூப்பிட்ட உடனே வந்துட்டீங்க என்று சொல்ல, அதுதான் பவர் ஆஃப் ஹஸ்பண்ட் என்று சொல்றது என்று சுரேகா சொல்ல,உடனே அருணாச்சலம் நானே கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கேன் கிண்டல் பண்றன்னு சொல்லி அவளை கிளப்பி விட்டுறாதீங்க என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சூர்யா குடித்துவிட்டு கையில் மல்லிகை பூ மற்றும் அல்வா எடுத்துக் கொண்டு வந்து மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே என்ற பாட்டு பாடிக்கொண்டே வருகிறார். கிச்சனில் இருக்கும் நந்தினியை சூர்யா கூப்பிட்ட மதுரை மல்லி திருநெல்வேலி அல்வா உனக்காக தான் பேபி என்று சொல்லி கொடுக்க சுந்தரவல்லி கடுப்பாகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினி இடம் நானே பூ வெச்சி விடுகிறேன் என்று சொல்ல வேண்டாம் என்று சொல்லுகிறார் சுந்தரவல்லி கடுப்பாகி சென்றுவிட ரூமில் சூர்யாவிடம் உங்க அம்மாவுக்காக என்னை இஷ்டத்துக்கும் பயன்படுத்துறது என்னைக்கு நிறுத்த போறீங்க என்று கேட்க நான் அதைப்பற்றி யோசிக்கிறேன் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் விஜி வீட்டிற்கு நந்தினி ஆட்டோவில் போக அர்ச்சனாவுக்கு போன் போட்டு ரேணுகா சொல்லுகிறார் அர்ச்சனா என்ன பண்ணலாம் என்று யோசிக்கிறார் என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 24-05-25
Moondru Mudichu Serial Promo Update 24-05-25