Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபத்தில் சுந்தரவல்லி, சந்தோஷப்பட்ட சூர்யா, வெளியான மூன்று முடிச்சு சீரியல் ப்ரோமோ

Moondru Mudichu Serial Promo Update 25-08-24

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி மகனிடம் கோபமாக சண்டை போட்டுக் கொள்ள எவ்வளவு லாஸ்சாகும் என்று கேட்க 5 கோடி அதிகமாக சம்பளம் கொடுக்க வரும் என்று சொல்கின்றனர். இதுதான் எனக்கு வேணும் என்று சூர்யா சொல்ல சுந்தரவல்லி இன்னும் கோபம் அடைகிறார். உங்களுக்கு கோவம் வருதா அதுதான் எனக்கு ரொம்ப முக்கியம். உங்களுக்குப் பிடிக்காத விஷயம் எனக்கு ரொம்ப புடிக்கும். உங்களுக்கு ரொம்ப புடிச்ச விஷயம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது இதுதான் சூர்யா என்று சொல்லுகிறார். இப்போ என் கழுத்தை நெரிக்கணும் போல உங்களுக்கு தோணுமே என்று சொல்லிவிட்டு சூர்யா கிளம்ப கடுப்பாகி நிற்கிறார் சுந்தரவல்லி.

பிறகு இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாளாவது திருந்துவான்னு பார்த்தா பொண்ணும் கிடைக்க மாட்டேங்குது நான் நினைக்கிறது எதுவும் நடக்க மாட்டேங்குது என்று புலம்புகிறார். என் மருமகளுக்குனு ஒரு தகுதி இருக்கணும் அப்படிப்பட்ட பொண்ணு தான் கட்டி வைப்பேன் என்று சொல்லுகிறார்.

பிறகு நந்தினியின் தாய்மாமன் அவரோட தந்தையுடன் நந்தினியின் வீட்டுக்கு வருகிறார். அவருடைய அப்பா அம்மா உனக்கு அங்க மாடி வீடு கட்டி வச்சிருக்கேன் நீ வராமல் இங்கேயே இருக்க என்று சொல்ல இது உன்னோட தங்கச்சி வீடு தானே மூணு போட்ட பசங்கள வச்சு ஒரு ஆளா என்ன பண்ணுவான் அதனாலதான் இருக்கேன் என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து நந்தினியும் அவர்களது தங்கையும் வந்து சிங்கப்பூர் தீபனிடம் மாமா இந்த கூலிங் கிளாஸ் சூப்பரா இருக்கு என்று பேசிக் கொண்டிருக்கின்றன.

நான் சுத்தி வளச்சு பேச விரும்பல அவன் நந்தினி பின்னால சுத்திட்டு இருக்கிறது எனக்கு உங்களுக்கு மட்டும் இல்ல இந்த ஊருக்கே தெரியும். முதல்ல சிங்கப்பூர் போயிட்டு வரட்டும் துபாய் போய் வரட்டும் பாத்துக்கலாம் என்று சொல்லி தட்டி கழிச்சீங்க இப்போ ரெண்டுல ஒரு முடிவு சொல்லுங்க என்று சொல்ல நந்தினியின் அப்பா கல்யாணத்தை பத்தி பேசணும் நந்தினி இப்போதைக்கு வேண்டாம் என்ற முடிவுல இருக்கும்போது நம்ம என்ன பேசுறது என்று சொல்லுகிறார். என் மகனை கட்டிக்கிறியா இல்லையா என்று பளிச்சுனு சொல்லிவிடு என்று சொல்லுகிறார். ஆனால் நந்தினி எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்ல மாமாவுக்கு வேற இடத்துல பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடுங்க என்று சொல்லுகிறார்.

கோபத்தில் என் தகுதியை மீறி உங்க வீட்டு வாசப்படி ஏறி வந்து பொண்ணு கேட்டதுக்கு அசிங்க படுத்துறீங்களா. இது மட்டும் இல்லாமல் நந்தினியின் குடும்பத்தை தரக்குறைவாக பேசுகிறார். இனி செத்தாலும் இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

மறுபக்கம் நந்தினியின் அப்பா அவர் பேசியதை நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க அம்மாச்சி அந்த நேரம் வந்து ஏன் இன்னும் தூங்கலையா தம்பி என்று கேட்க அவர் பேசினதெல்லாம் சரியா அத்தை பொட்ட புள்ள வருமானத்துலயா நான் ஒக்காந்து சாப்பிட்டுட்டு இருக்கேன் என்று கண் கலங்குகிறார்.

அதற்கு அம்மாச்சி அவன் கிடக்கிறான் மூணு பொட்ட புள்ள பொறந்ததுக்கு அப்புறம் அவங்கள வளர்த்து ஆளாக்கி காப்பாத்துனது நீ அதை நினைத்து நீ கவலைப்படாதே என்று ஆறுதல் கூறுகிறார். நந்தினியின் தங்கைகள் இருவரும் அக்கா நீ மாமாவையே கல்யாணம் பண்ணிக்கோ ஏன் அவரு நல்லவர் தான் எங்கள பத்தி யோசிக்காத என்று சொல்ல நந்தினி பெரிய மனுஷிங்களா அதப்பத்தி நீங்க யோசிக்காதீங்க நீங்க படிங்க நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லுகிறார்.

இந்த பிரச்சனை எல்லாம் முடிய மறுநாள் காலையில் நந்தினிக்கு டீ கடைக்காரர் போன் போன் போட்டு நகை கடைக்காரர் ஏமாற்றியதை பற்றி சொல்கிறார். அதிர்ச்சியான நந்தினி சைக்கிள் எடுத்துக்கொண்டு உடனே போய் அங்கு பார்க்க என் தங்கச்சி இங்க தங்க நகை போடணும் என்று ஆசையா சேர்த்து வச்சது எல்லாம் இப்படி போயிடுச்சே, நான் என்ன பண்ணுவேன் என்று அதிர்ச்சையாகி நிற்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

நாளைய ப்ரோமோவில் நந்தினியின் தங்கை ரஞ்சிதாவிற்கு சடங்கு செய்ய மாமாவை எப்படி கூப்பிடுறது என்று குழப்பத்தில் நந்தினி. மறுபக்கம் சுந்தரவல்லி பெண் பார்ப்பது குறித்து பேசிக் கொண்டிருக்க அங்கு கெடுக்கும் விதமாக சூர்யா பெண்களுடன் வந்து அராஜகம் செய்கிறார். பரபரப்பான திருப்பங்களுடன் நடக்கப்போவது என்ன?என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Moondru Mudichu Serial Promo Update 25-08-24