தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி அர்ச்சனா உடன் விஜி வீட்டுக்கு வர விஜி நந்தினி இடம் நம்ம வேலை ஆரம்பிக்கலாமா கடைக்காரர் போன் பண்ணிக்கிட்டே இருக்காரு என்று சொல்ல அர்ச்சனா ஒரு பக்கம் உட்கார்ந்து கொண்டிருக்க இவர்கள் இருவரும் வேலையை செய்கின்றனர்.
நந்தினி மற்றும் விஜி இல்லாத நேரம் பார்த்து அர்ச்சனா மருந்து ஒன்றை இட்லி இடியாப்பத்தில் கலந்து விடுகிறார். எனக்கு நியூஸ் பார்த்ததிலிருந்து பயமா இருக்கு நந்தினி என்று சொல்ல கண்டிப்பா நம்ம செஞ்சு கொடுத்த இட்லி இடியாப்பத்தில் இருந்து எந்த பிரச்சனையும் இருக்காது என்று நந்தினி சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.