Tamilstar
English News News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரவல்லி வீட்டுக்கு வந்த போலீஸ், நந்தினியை நினைத்து அழும் சிங்காரம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

Moondru Mudichu Serial Promo Update 27-11-24

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி காரில் வந்து இறங்க கல்யாணத்தை கூப்பிட்டு டிக்கில பாக்ஸ் இருக்கு தொறந்து எடுத்துட்டு வா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார் கல்யாணம் பொருளை எடுத்துவிட்டு டிக்கியை சரியாக மூடாமல் வந்துவிடுகிறார்.மேலே வந்த சுந்தரவல்லி என்ன எல்லாரும் இப்படி உட்கார்ந்து கிட்டு இருக்கீங்க என்று கேள்வி கேட்கிறார் அது ஒன்னும் இல்லம்மா சும்மா தான் இருக்கும் என்று சொல்ல இல்லையே உங்க முகத்தைப் பார்த்தா அப்படி தெரியல என்று சொல்லி எனக்கு தெரியும் நேத்து ஃபுல்லா ஆண்பாவம் படத்தை பார்த்துட்டு தூக்கம் இல்லாம இருந்தா எப்படி இருக்கும் அப்படித்தானே இருக்கும் என்று சொல்லுகிறார் மாதவி ஆமாம் அந்த டயர்டு தான் என்று சொல்லி சமாளிக்க அப்ப எதுக்கு இன்னைக்கும் இவ்ளோ நேரம் முழிச்சிக்கிட்டு இருக்கீங்க போய் படுங்க என்று சொல்லி அருணாச்சலத்தையும் கூட்டிச் செல்கிறார்.

மறுபக்கம் மினிஸ்டர் அனுப்பிய ஆட்கள் நந்தினி உடன் சுந்தரவல்லி வீட்டிற்கு காரில் வருகின்றனர். சரக்கு பாட்டலுடன் கீழே இறங்கி கேட்டின் முன் சரக்கு அடிக்க உட்கார வாட்ச்மேன் இங்கெல்லாம் உட்கார கூடாது என்று சொல்லுகிறார் ஃபாரின் சரக்கு அண்ணா வீட்டுக்கு போனா பொண்டாட்டி குடிக்க விடமாட்டான அதனால குடிச்சிட்டு போயிடும் என்று சொல்லி வாட்ச்மேனுக்கு ஆசையை காட்டி அவருக்கு சரக்கு ஊற்றி கொடுக்கின்றனர் ஒரு ரவுண்டுக்கு மேல் வாட்ச்மேன் உள்ள வாங்கப்பா குடிக்கலாம் என்று சொல்ல அவர்கள் அவருக்கு புல்லாக ஊத்தி கொடுக்கின்றனர்.

வாட்ச்மேன் குடித்துவிட்டு படுத்து விட நந்தினி உள்ளே தூக்கி வந்த இருவரும் சுந்தரவல்லி கார் டிக்கி துறக்க சாவியை எடுக்கின்றனர் ஆனால் ஏற்கனவே டிக்கி துறந்திருப்பதால் அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. அவர்கள் தூக்கி போட நினைக்கும்போது அருணாச்சலம் வெளியே வர இவர்கள் இருவரும் நந்தினியை கீழே வைத்துவிட்டு காரில் பின்னால் ஒளிந்திருக்கின்றனர். நந்தினியின் பக்கத்தில் வரை வந்து நின்ற அருணாச்சலம் உடனே திரும்பி சென்று விடுகிறார். உடனே அந்த இருவரும் நந்தினியை டிக்கியில் அடைத்து விட்டு வந்து விடுகின்றனர். மினிஸ்டர் அந்த ஆட்களில் ஒருவரை சிங்காரத்திற்கு போன் போட சொல்லி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா என்ன நடக்குதுன்னு விசாரிக்க மாட்டியா அந்த பொண்ணு அந்த வீட்ல படுற கஷ்டத்தை பாக்கவே கஷ்டமா இருக்கு நாங்க அந்த தெருவுலதான் இருக்கோம் அந்த பொண்ணை காணோம் எங்கே போயிடுச்சே தெரியல உயிரோடு இருக்கா இல்லையா என்று கூட தெரியல என்று சொல்ல சிங்காரம் பதறி கொண்டு நந்தினிக்கு போன் போட நந்தினியின் போன் ஆப் ஆகி இருக்கிறது. உடனே அருணாச்சலத்திற்கு போட அவரும் போனை வெளியே வைத்திருப்பதால் சத்தம் கேட்காமல் தூங்காமல் படுத்துக் கொண்டிருக்கிறார்.

மறுநாள் காலையில் அசோகன் மாதவி சுரேகா என மூவரும் காபி குடித்துக் கொண்டிருக்க இந்த நந்தினி காணாமல் போய் இரண்டு நாள் ஆகுது நந்தினி இந்த வீட்ல இல்லாததை பத்தி அம்மா எதுவுமே கேட்கல என்று சுரேகா சொல்ல அவங்க எப்படி கேப்பாங்க அவங்க இருந்து போனா போதும் தானே இருந்தாங்க என்று சொல்லுகிறார் மாதவி. உடனே அருணாச்சலம் இன்னைக்கு நியூஸ் பேப்பர் வந்துடுச்சா என்று கேட்க தெரியலப்பா என்று சொல்லுகின்றன சரி நானே போய் பார்க்கிறேன் என்று வெளியே வர நந்தினிக்கு மயக்கம் தெளிகிறது.

நியூஸ் பேப்பரை வாங்கிக்கொண்டு அருணாச்சலம் சென்றுவிட காரை கவனிக்காமல் விடுகிறார். மாதவி அப்பா எதுக்கு நியூஸ் பேப்பரை கேட்டாரு என்று கேட்க நந்தினி பற்றி ஏதாவது ஆக்சிடென்ட் நியூஸ் வந்திருக்குமான்னு தேடிட்டு இருப்பார் என்று சொல்ல நம்பளும் போய் அந்த நியூஸ பாக்கலாம் என்று மூவரும் கிளம்பி அங்கு வருகின்றனர். என்னப்பா தேடிக்கிட்டு இருக்கீங்க என்று பேசிக்கொண்டிருக்க உடனே சுந்தரவல்லி ஸ்வீட்டுடன் வருகிறார். எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்து இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்று சொல்ல என்ன விஷயம் என்று தெரியாமல் அனைவரும் நிற்க நான் எதுக்காக சந்தோஷப்படுறேன்னு உங்க எல்லாருக்குமே தெரியும் ஆனா எனக்கு தெரிய கூடாதுன்னு நீங்க பண்றது தான் எனக்கு ஒன்னும் புரியல நம்ம வீட்டு வேலைக்காரி ஓடிப்போய்விட்டாலாமே என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். அவ இந்த வீட்டில இத்தனை நாளா சுத்திட்டு இருக்கும்போது என் உடம்புல கம்பளிப்பூச்சி ஊறுற மாதிரி இருந்தது ஆனா இப்பதான் எல்லாத்தையும் உதறிட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தீபாவளி பொங்கல் கொண்டாடணும் போல இருக்கு என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். இது மட்டும் இல்லாமல் இந்த சுந்தரவல்லிக்கு தெரியாம இந்த வீட்ல அனுவும் ஆசையாது ஆனா நீங்க என்கிட்டயே ஆண்பாவம் படம் பார்த்தேன் என்று பொய் சொல்றீங்க என்று சொல்லி பேசுகிறார். எனக்கு ஒன்னும் புரியல இவர்தான் ஏதாவது பண்ணிக்கிட்டு இருப்பாரு திருந்த மாட்டார் என்று எனக்கு தெரியும் நீங்க ரெண்டு பேரும் ஏன் என்கிட்ட இருந்து உண்மையை மறைச்சீங்க என்று சுரேகா மற்றும் மாதவியை பார்த்து கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி சூர்யாவிடம் மாலினி நந்தினி ஏதோ கூப்பிடுவியே அவ தான் இந்த வீட்டை விட்டு போயிட்டாலாமே என்று பேசுகிறார்.

சுந்தரவல்லி வீட்டிற்கு வந்த சிங்காரம் ஆத்தா நந்தினி எங்கம்மா போன என்று கதறி அழுகிறார். உடனே போலீஸ் வந்து இங்க நந்தினிங்கிறது யாரு என்று விசாரிக்க அருணாச்சலம் என்னோட மருமக தான் சார் என்று சொல்ல சுந்தரவல்லி இதெல்லாம் நீங்க யாரு கேக்குறதுக்கு என்று கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 27-11-24
Moondru Mudichu Serial Promo Update 27-11-24