Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நந்தினி எடுத்த முடிவு, கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட், மூன்று முடிச்சு ப்ரோமோ அப்டேட்

Moondru Mudichu Serial Promo Update 30-08-24

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி
முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்துக் கலைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

சூர்யாவை நினைத்து கோபத்தில் சுந்தரவள்ளி இருக்க, மாதவி ஆறுதல் சொல்கிறார். அவன் வாழ்க்கையில ஒரு நல்லது நடக்காதா என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்ல, சூர்யாவின் அப்பா கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டான் என்று சொல்கிறார். ஆனால் சுந்தரவள்ளி எப்படி சம்மதிக்க வைக்கணும்னு எனக்கு தெரியும் என்று பேசுகிறார்.

மறுபக்கம் நந்தினி சடங்குக்காக மாமாவை கூப்பிட கிளம்ப,அம்மாச்சி அங்க போன அசிங்கப்பட்டு தான் வருவீங்க வேணா என தடுத்தும் நந்தினி கேட்காமல் போகிறார்.

நந்தினியின் மாமா சோகமாக பாட்டு பாடிக்கொண்டு வண்டியை துடைத்துக் கொண்டிருக்க நந்தினி மாமா என்று கூப்பிட்டவுடன் சந்தோஷப்படுகிறார். அத்தை மாமா எங்க போயிருக்காங்க என்று கேட்க மீன் வாங்க போயிருக்காங்க வந்துருவாங்க என்று சொல்லுகிறார்.

இருவரும் வண்டியில் வந்து இறங்க நந்தினியின் அத்தை நல்லபடியாக நலம் விசாரிக்கிறார் ஆனால் அவரது மாமா கோபமாக பேசுகிறார். இருந்தும் நந்தினி நீங்கள் நகை பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் எங்க அம்மாவின் உறவாக எங்களோட தாய் மாமனாக வந்து நின்றால் உங்களுக்கு கௌரவம் எங்களுக்கும் கௌரவம் என்று பொறுமையாக எடுத்து சொல்லியும் அவர் கோபப்படுகிறார். பிறகு வெத்தலை பாக்கு தட்டு நந்தினி கொடுக்க அதை தட்டிவிடுகிறார். நந்தினி அப்பா கோபமாக பேசிவிட்டு கிளம்ப அம்மாச்சி சொன்ன மாதிரியே நடந்து போச்சு என்று பேசிக்கொண்டு வருகின்றனர்.

அந்த நேரம் பார்த்து அம்மாச்சி போன் பண்ண அங்க என்ன நடந்திருக்கும் என்று எனக்கு தெரியும் என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து நந்தினியின் அத்தையும், மாமா மகனும் வந்து நாங்க நடத்திக் கொடுக்கிறோம் என்று சொல்கின்றனர்.

பிறகு சுரேகா காலேஜுக்கு போகாமல் டிவி பார்த்துக் கொண்டிருக்க சுந்தரவள்ளி ஏன் காலேஜ் போகவில்லை என்று கேட்கிறார். அதற்கு ஒரு பையன் என்னை லவ் டார்ச்சர் பண்றான் என்றும், சுந்தரவள்ளி பொண்ணுன்னு தெரிஞ்சு இத பண்றான் என்று சொல்ல உடனே சுந்தரவள்ளி நான் ஏசிக்கு போன் போட்டு சொல்றேன் நீ தைரியமா காலேஜ் போ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சூர்யா சுரேகாவை கூட்டிக்கொண்டு காலேஜுக்கு வருகிறார். சுரேகாவிடம் யாரென்று கேட்க இந்த பையன் தான் என்ற சொல்கிறார் பார்க்க நல்லா தானே இருக்கான் என்று சொல்ல சுரேகா ஷாக் ஆகிறார். பிறகு அந்தப் பையனிடம் உனக்கு ஒரு வாரம் டைம் தரேன் அதுக்குள்ள இவள இம்ப்ரஸ் பண்ணு அப்படி இல்லன்னா ஏழாவது நாள் உனக்கு அவ்வளவு தான் என்று மிரட்டி விட்டு செல்கிறார்.

மறுபக்கம் சடங்கு வீட்டிற்கு அனைவரும் வந்து கொண்டே இருக்கின்றனர். நல்ல நேரம் முடியப்போகிறது ரஞ்சிதாவே உட்கார வைத்து விடலாம் என்று பேச இல்லை மாமா வந்துருவாரு எனக்கு நம்பிக்கை இருக்கு என்று வாசலை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். பிறகு அம்மாச்சியும் மாமன் வரமாட்டான் நல்ல நேரம் போறதுக்குள்ள நம்ம செஞ்சிடலாம் என்று சொல்ல நந்தினி வருத்தம் அடைகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் நகை கடைகாரன் ஏமாற்றியதை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று நந்தினி யோசிக்கிறார். எப்படி கண்டுபிடிக்க போகிறார்? என்ன நடக்கப் போகிறது? என்று இன்றைய எபிசோடு பார்க்க தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 30-08-24
Moondru Mudichu Serial Promo Update 30-08-24