தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் விஜி சூர்யாவிடம் உங்க அம்மா எல்லாம் நினைக்கிற மாதிரி உங்க ரேஞ்சுக்கு ஈக்குவல் இல்லன்னு நினைக்கிறீங்களா என்று கேட்க என்ன விஜி என்று சூர்யா கேட்க நீங்க அப்படி நினைக்க மாட்டீங்க ஆனா மத்தவங்க முன்னாடி நந்தினி உங்க பொண்டாட்டின்னு சொல்றதுக்கு உங்களுக்கு அசிங்கமா இருக்கா, மத்தவங்கள விடுங்க முதல்ல உங்க மனசுல இவை என்னவா இருக்கா, அவளுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் முதலாளா சரி பண்றீங்க ஆனா இவளுக்கு என்ன ஸ்பெஷல், உங்களுக்காக எல்லாமே அவ பார்த்து பார்த்து பண்றா ஆனா அவளுக்கு பொண்டாட்டி என்ற அங்கீகாரம் கொடுத்திருக்கீங்களா என்ற கேள்வி கேட்டுக் கொண்டிருக்க நந்தினி பேச வர நீ அமைதியா நில்லு என்று சொல்லுகிறார். அவ எப்பெல்லாம் ஊருக்கு போகணும்னு சொல்றானோ, அப்பதான் சூர்யா அண்ணா உன்னோட புருஷன்னு சொல்லி அவகிட்ட பேசி இருக்கேன் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும்னு நான் ஆசைப்படறேன், இவ கழுத்துல இருக்குறது நீங்க கட்டின தாலி, இவ கழுத்துல இருக்கிற வரைக்கும் நீங்க தான் இவளோட புருஷன் இவ தான் உங்களோட பொண்டாட்டி இப்ப வரைக்கும் நந்தினி உங்க வீட்ல தங்கற ஒரு கெஸ்ட்டா தான் பாத்துட்டு இருக்கீங்க.
அவளுக்கு என்ன வேணும்னு தெரிஞ்சு நீங்க வாங்கி கொடுக்குறதுல தான் அன்பு இருக்கும். நந்தினி ஓட ஒரு நாள் வாழ்க்கையை உங்களால வாழ முடியுமா? நீங்க யாரையோ பழிவாங்கறதுக்காக கழுத்துல தாலி கட்டுனீங்க, அந்த குற்ற உணர்ச்சி உங்களுக்கு இருந்துச்சா அதுக்காக அவகிட்ட சாரி கேட்டு இருக்கீங்களா ஒருவேளை சாரி கேக்குற அளவுக்கு இவ பெரிய ஆளு இல்லன்னு நினைக்கிறீங்களா உங்க அம்மாவை பழிவாங்க இவளை எதுக்கு யூஸ் பண்றீங்க அதுக்கு உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு அதுக்கப்புறம்மாவது இவள பொண்டாட்டியா ஏத்து ஏன் வாழல ஒரு பக்கம் உங்க அம்மா ஒரு பக்கம் உங்க அப்பா தங்கச்சி என்று வாட்டி வதைத்து கிட்டு இருக்காங்க அதுக்கு அவளை அவங்க அப்பா வீட்டிலேயே எடுத்துட்டு போய் விட்டு இருக்கலாமே அங்கேயாவது நிம்மதியா இருப்பா என்று பேசிக்கொண்டே இருக்க சூர்யா அமைதியாக இருந்து சென்று விட நந்தினியும் சூர்யாவுடன் போக இருவரும் காரில் வர சூர்யா விஜி பேசியதை நினைத்துப் பார்க்கிறார்.
மறுபக்கம் சுந்தரவல்லி அருணாச்சலம் இருவரும் பிசினஸ் விஷயமாக பேசிக்கொண்டிருக்க, டெல்லி ஃபோன் போட்டு பேசுகிறார். ஏற்கனவே சுந்தரவல்லிக்கு டெல்லி ஒரு விஷயத்தை உதவி செய்திருக்கும் விஷயத்தை சொல்லிவிட்டு பிறகு உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் ஸ்பீக்கர்ல போடுங்க சொல்லி, நந்தினி பணம் வாங்கிய விஷயத்தையும் சூரியா அடிச்சுட்டு நந்தினி கூட்டிட்டு போன விஷயத்தை சொல்லுகிறார். உங்க புள்ள நான் புடிச்சு வச்சிருந்த எல்லாரையும் அனுப்பி விட்டுட்டாரு என் தொழிலையே பாதிச்சிருக்கு. தொழில் பண்ற இடத்துல வந்து தம்பி இப்படி பண்ணா நாங்க எப்படி பொழைக்கிறது இன்னொரு தடவை தம்பி இப்படி பண்ணா அவர காலி பண்றது தவிர வேற வழி இல்லை என்று சொல்ல சுந்தரவல்லி சரி என போனை வைக்கிறார். உடனே அருணாச்சலத்திடம் அந்த டெல்லி எவ்வளவு பெரிய ரவுடி தெரியுமா? என் புள்ள சூர்யாவுக்கு என்ன புடிக்காது தான் ஆனா என் புள்ளையா அவன் என் எதிர்ல உலாத்திக்கிட்டு இருக்கா அதுவே போதும் ஆனா அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா இவ பொறுப்பை ஏற்றுப்பாளா என்று கோபப்பட ரெண்டு பேரும் வந்த உடனே பேசிக்கலாம் என்று அருணாச்சலம் சொல்ல சுந்தரவல்லி கோபப்படுகிறார். முதல்ல இந்த வீட்ல அவ இருக்கனுமா நான் இருக்கணுமான்னு முடிவு பண்றேன்னு சொல்லுகிறார்.
சூர்யா, நந்தினியை வீட்டு வாசலில் இறக்கிவிட்டு நீ போ எனக்கு வேலை இருக்கு நான் அப்புறம் வரேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். இதனை மாதவி அசோகன் கவனித்து விட்டு வந்து சுந்தரவல்லி இடம் சொல்லுகின்றனர்.சுந்தரவல்லி நந்தினி இடம் எவனோ ஒரு ரவுடி கிட்ட என் பேரு என் பையன் பேரு சொல்லி பணம் கேட்டு இருக்க என்று கோபப்படுகிறார். அதற்கு நந்தினி நிஜமாவே நான் உங்க யார் பேரையும் சொல்லல விஜி அக்கா சொல்லி தான் போனேன் அவங்க என்ன வேலை செய்றீங்கன்னு கேட்டுட்டு தான் பணத்தை கொடுத்தாங்க நீங்க வேணா விஜி அக்கா கிட்ட போன் பண்ணி கேளுங்க என்ற சொல்ல, ஏதோ ஜமீன்தார் பரம்பரை மாதிரி 2 லட்சத்த எடுத்துட்டு வந்து கொடுத்தா ஏதோ ஒரு ரவுடி கிட்ட போய் கடன் வாங்குறா அவன் என் பையன கைய கால உடைப்பேன்னு சொல்றான் அவன் எவ்வளவு பெரிய ரவுடி தெரியுமா? அந்த கடனை அடைக்கிறதுக்கு இட்லி செய்றாங்க ஆப்பம் செய்யணும்னு சொன்ன நீ தொட்ட காரியம் எது விளங்கி இருக்கு என்று நந்தினி மீது சுந்தரவல்லி கோபப்படுகிறார். நீ ஒரு இடத்துல கடன் வாங்கினால் நீதான் அந்த கடனை அடைக்கனும் அவனை எதுக்கு சண்டை போட விடற, அவ உசுருக்கே ஆபத்த வர வச்சிருக்கே என்று திட்டுகிறார்.
நீ எப்ப இந்த வீட்டுக்கு வந்தியோ நிம்மதி சந்தோஷம் எல்லாமே போயிடுச்சு ஏன் ஒரே பையன் அவன் என்னோட உசுரு அவனுக்கு எவ்ளோ பெரிய பிரச்சனை வந்திருக்கு தெரியுமா அந்த ரவுடி என்ன தெரிஞ்சதுனால அமைதியா விட்டு இருக்கா இல்லனா சூர்யாவை இந்நேரம் கொன்னு இருப்பா அதுக்கு இவ பொறுப்பேத்துப்பாளா என்று கண்கலங்குகிறார். உன் உடம்புல நல்ல ரத்தம் ஓடுதுன்னா உன்ன நல்லா வளர்த்திருக்காங்கன்னா என் புள்ள சூர்யா இங்கு வரத்துக்குள்ள நீ இந்த வீட்டை விட்டு போயிடு கொஞ்சமாவது மானம் ரோஷம் உனக்கு ஏதாவது இருந்ததுனா நீ இந்த வீட்ல இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். அருணாச்சலம் இப்ப எதுவும் பேச வேண்டாம் நீ உள்ள போமா என்று சொல்லி அனுப்பி விட மறுபக்கம் சூர்யா குடித்துக்கொண்டே விஜி பேசியதை நினைத்துப் பார்க்கிறார். மறுபக்கம் நந்தினி, சுந்தரவல்லி பேசியதை நினைத்து கண்கலங்குகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவின் மனசாட்சி சூர்யாவிடம் உங்க அம்மாவை வெறுப்பேத்தறதுக்கு அவதான் உன் பொண்டாட்டின்னு ஊர் முன்னாடி சீன் போட தெரியுது யாருன்னு கேட்டா மட்டும் வாய் வரலையா உனக்கு என்று கேட்கிறது. மறுபக்கம் சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் நம்ம கிட்ட பேசுறது கம்மியா ஆயிட்டே வந்தது இப்போ ஒரே வார்த்தையில் பதில் கொடுக்கிறான்.
ரூமுக்கு வந்த உடன் நந்தினி இடம் நான் நிறைய பேசணும் நான் நிறைய கேட்கணும்,நான் எடுத்த முடிவு சரியா இல்லை என்று நீ சொல்லணும் என்று சூர்யா சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
