Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மினிஸ்டர் போட்ட பிளான், சூர்யாவை திட்டிய அருணாச்சலம்,மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்

Moondru Mudichu Serial Promo Update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி ஆட்டோவில் வந்து கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் ஆட்டோ பழுதாகி நிற்கிறது. இதனால அந்த ஆட்டோக்காரர் எனக்கு பக்கத்து தெருவுல தெரிஞ்சவங்க இருக்காங்க நான் போய் பொருள் வாங்கிட்டு வந்துடறேன் நீ இங்கேயே இருமா என்று சொல்லிவிட்டு செல்கிறார். நந்தினியும் உட்கார்ந்து கொண்டிருக்க திருடர்கள் தூரத்தில் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கிறார் நந்தினி. உடனே டேய் திருட்டு பசங்களா என்று கத்திக்கொண்டே ஓடி வர அர்ச்சனா காரில் நந்தினியை மோதி விடுகிறார். இதனால் நந்தினி மயக்கம் அடைந்து விட அந்த இருவரை கூப்பிட்டு காரில் ஏற்ற சொல்லி பின்னால் வர சொல்லுகிறார்.

மறுபக்கம் மாதவியும் சுரேகாவும் நந்தினி எங்க போயிருப்பா என்று யோசித்துக் கொண்டிருக்க மாதவி அவர் திரும்பவும் ஊருக்கு போயிட்டா அம்மா வரவிட மாட்டாங்க பேசிக் கொண்டிருக்கிறார். உடனே மாதவியின் கணவருக்கு போன் போட்டு என்ன ஆச்சு என்று கேட்க தேடிகிட்டு தான் இருக்கும் எங்க இருக்கான்னு தெரியல என்று சொல்லுகிறார். போனை வைத்த உடன் உடனே சுந்தரவல்லி வர தூங்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க உங்க அப்பா எங்க என்று கேட்க ஆண்பாவம் படம் பார்த்துட்டுருந்தோம் என்று சொல்லி சமாளிக்கிறார். போய் தூங்குங்க என்று அனுப்பி வைக்க இவர்கள் இருவரும் மேலே சென்று உட்காருகின்றனர். பிறகு அருணாச்சலத்திற்கு மாதவி போன் போட்ட என்னப்பா ஆச்சு என்று கேட்கிறார். தேடிகிட்டுதமா இருக்கும் என்று சொல்ல அம்மா வந்து கேட்டுட்டாங்க ஏதோ சொல்லி சமாளித்து விட்டோம் இன்னொரு வாட்டி சமாளிக்கிறதுக்குள்ள வந்துருங்க கண்டுபிடிச்சிடுவாங்க என்று சொல்ல சரி பார்த்துக்கலாம் நான் வரேன் என்று சொல்லுகிறார். பிறகு மேலே இருவரும் உட்கார்ந்து கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சூர்யா மல்லிப்பூவுடன் வீட்டுக்கு வருகிறார். சூர்யாவிடம் நந்தினி வீட்ல இல்லை என்று சொல்ல அவருக்கு எதுவும் புரியாமல் சிரிக்கிறார் இதனால் இவர்கள் இருவரும் இவன்கிட்ட பேசுறது வேஸ்ட் குடிகார பையன் உள்ள போ என்று சொல்லி அனுப்பி வைக்கின்றனர்.

அர்ச்சனா நந்தினி உடன் வந்து இறங்க மினிஸ்டர் கெஸ்ட் ஹவுஸில் காத்துக் கொண்டிருக்கிறார். இவளை எங்க இருந்தும்மா புடிச்ச என்று கேட்க தனியா போயிட்டு இருந்தா சிக்கிடா என்று சொல்ல, மினிஸ்டர் இடம் இவ மேல இருக்கிற கோவத்துல காரை ஏத்தி கொன்னுடலாம்னு தான் பா இருந்தேன் என்று சொல்ல அவசரப்படாதம்மா என்று சொல்லுகிறார். பிறகு நந்தினியை வைத்து சுந்தரவல்லி குடும்பத்தை பழிவாங்க இருவரும் திட்டம் போடுகின்றனர்.

சுந்தரவல்லிக்கு நந்தினியை பிடிக்காது என்பதால் அவளை கொன்னுவிட்டு சுந்தரவல்லி மீது பழியை போட்டால் சுந்தரவல்லி மீது சூர்யாவிற்கு இருக்கும் கோபம் இன்னும் அதிகமாகி சூர்யாவின் வீடு கொந்தளித்து விடும் அதில் நம்ம குளிர் காயலாம் என்று திட்டம் போட்டு மினிஸ்டர் அர்ச்சனாவிடம் ஒரு ஐடியாவை கொடுக்கிறார். சூப்பர் பா இப்படியே பண்ணிடலாம் என்று சொல்லுகிறார். உடனே அந்த இருவரை கூப்பிட்டு இவள ரூம்ல அடை இங்கிருந்து உயிர் மட்டும்தான் வெளியே போகணும் என்று சொல்லி அடைத்து வைக்கின்றனர்.

மறுநாள் காலையில் மாதவி சுரேகா அசோகன் மூவரும் இவ எங்க போயிருப்பாய் என்று யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றனர். அருணாச்சலம் வர என்னப்பா பண்றது என்று மாதவி கேட்கிறார் நானும் எல்லா இடத்திலும் தேடிப் பார்த்துட்டேன் எங்கேயுமே இல்ல என்று சொல்ல மாதவி ஊருக்கு போயிட்டு இருப்பா இல்லபா போன் பண்ணி கேட்டு பாருங்க என்று சொல்லுகிறார் எப்படி கேட்க சொல்ற நந்தினி அங்க வந்துட்டாளான்னு கேட்க சொல்றியா அதுவும் இல்லாம இந்நேரம் நந்தினி அங்க போயிருந்தா எனக்கு போன் வந்திருக்கும் சிங்காரம் போன் பண்ணி இருப்பாரு என்று சொல்லுகிறார். நந்தினி இன்னும் ஊருக்கும் போகல என்று சொல்ல சூர்யா எங்கே என்று கேட்கிறார் அவர் நைட் ஃபுல்லா குடிச்சிட்டு சொல்றது கூட புரியாத அளவுக்கு குடிச்சிட்டு வந்திருந்தான்பா என்று சொல்ல அருணாச்சலம் கோபமாக மேலே சென்று சூர்யாவை தட்டி எழுப்பி நைட்டு புல்லா இது என்ன நடக்குதுன்னு தெரியாம இப்படி புல்லா குடிச்சுகிட்டு இருக்கேன்னு திருந்தவே மாட்டியா என்று கேட்கிறார் சூர்யா என்னாச்சு டாடி என்ன பிரச்சனை என்று கேட்க நந்தினி எங்க என்று கேட்கிறார் . இங்கே இல்லனா கிச்சன்ல இருப்பா என்று சொல்ல நைட்ல இருந்து அவளை காணோம்னு தேடிக்கிட்டு இருக்கோம் என்று சொல்லி விட்டு கோபமாக கிளம்ப சரி நான் தேடுறேன். நான் பார்த்து கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லுகிறார் சூர்யா இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

Moondru Mudichu Serial Promo Update