தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் பழக்கவழக்கங்களை சொல்ல அதற்கு சுந்தரவல்லி உங்க கிட்ட கேட்டதே தப்பு கிளம்புங்க, உடனே மாதவி, சுரேகாவிடம் அப்பா சொன்ன மாதிரி முடிச்சுட்டு வந்துருங்க என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து நந்தினி அரசாணி கால் கொம்புடன் வர பரவாயில்லையே அம்மா சொன்ன மாதிரி எடுத்துட்டு வந்துட்ட என அருணாச்சலம் சொல்லுகிறார். மாதவி மற்றும் சுரேகா இருவரும் நந்தினியை அர்ச்சனா வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்ல இவளை எதுக்காக கூட்டிட்டு போகணும் என்று சுந்தரவல்லி கேட்கிறார், எங்களுக்கு கூட வேலைக்கு வேணும் என்று சொல்ல எப்படியோ போங்க என்று சுந்தரவல்லி கிளம்புகிறார்.
பிறகு அருணாச்சலம் சிங்காரத்திடம் நீ கல்யாணத்துக்கு வற வேனா ரெஸ்ட் எடு என்று சொல்ல,சிங்காரம் ஐய்யா எனக்கு ஒன்னு இல்ல நான் கல்யாணத்தை பாக்க தான் அவ்ளோ தூரத்துல இருந்து வந்திருக்கேன் நா வருவேன் என்று சொல்ல,உன்னோட சார்பா நந்தினி இருக்கா நீ ரெஸ்ட் எடு என்று பேசி கொண்டிருக்க, சுந்தர வல்லி இவங்க கல்யாணத்துக்கு வரது தான் ரொம்ப முக்கியம் வாங்க என்று கூப்பிடுகிறார்.
பிறகு சுந்தரவல்லி மாதவியின் கணவரிடம் நீங்க என்ன பண்ண போறீங்க என்று கேட்க,நீங்க என்ன சொன்னாலும் செய்றன் அத்தை என்று சொல்ல, சூரியாவ ரெடி பண்ணி கூட்டிட்டு வாங்க எதாவது சொதபணிங்க அவ்ளோதான் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். சூர்யாவின் ரூம் வாசலில் மாதவியின் கணவர் காத்துக் கொண்டிருக்கிறார்.
மாதவி ,சுரேகா மற்றும் நந்தினி என அனைவரும் அர்ச்சனாவின் வீட்டிற்கு வர மினிஸ்டர் மனைவி இவளை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தீங்க என்று கேட்க,புடவை விஷயத்துல அர்ச்சனா இவ மேல கோவமா இருக்கா என்று சொல்ல சரி வாங்க என்று உள்ளே அழைத்து செல்கிறார். மாதவி தோழியிடம் இந்த புடவையை கொடுத்து இதை மாத்திக்கிட்டு வாங்க கிளம்பலாம் என்று சொல்ல மினிஸ்டர் மனைவி நீங்க போய் அர்ச்சனா ரெடி பண்ணி கூட்டிட்டு வாங்க என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் அர்ச்சனாவின் தோழி ஒருவர் நந்தினி கூப்பிடுகிறார்.
நந்தினி உள்ளே வந்தவுடன் தோழிகளை வெளியே அனுப்பிய அர்ச்சனா நந்தினியை கீழே உட்கார சொல்லி, அவர் சாரில் உட்கார்ந்து நந்தினி தோள் மீது காலை போடுகிறார். நான் எவ்ளோ கனவுகளோடு அந்த வீட்டுக்குள்ள வந்தா உன்னை யாரு புடவை எடுத்துக் கொடுக்க சொன்னது நீ எடுத்து கொடுத்த புடவை சூர்யா எடுத்துக்கோ சொல்லிட்டா இப்போ அந்த புடவையை பார்க்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தான் வரும் என்று காலால் அவரை இடித்துக் கொண்டே பேசுகிறார்.
உங்களை யார் இந்த கல்யாணத்துக்கு வர சொன்னது என்று சொல்ல அருணாச்சலம் ஐயா தான் கல்யாண வேலையை பார்க்கிறதுக்கு வர சொல்லி இருந்தாரு அம்மா என்று சொல்ல, நீயும் உங்க அப்பாவும் தாலி கட்டி முடிஞ்சது சாப்பிட்டு கிளம்பிடனும் என்று சொல்ல நந்தினி சம்மதிக்கிறார். உன்னை இங்கே யார் கூட்டிட்டு வந்தது என்று கேட்க மாதவியும் சுரேகாவும் என்று சொல்ல அதற்கு அர்ச்சனா அவங்களுக்கு இருக்கு என்று சொல்லுகின்றார். பிறகு இங்கு நடந்த விஷயங்களை அவங்க ரெண்டு பேர் கிட்டயும் என்று அர்ச்சனா ஆரம்பிக்க சொல்ல மாட்டேன் என்று நந்தினி சொல்லுகிறார். இல்ல உங்க என்ன நடந்ததோ அது அவங்க கிட்ட சொல்லு என்று அர்ச்சனா சொல்லி அனுப்புகிறார். நந்தினி கீழே இறங்கி வந்தவுடன் மாதவி மற்றும் சுரேகா இருவரும் நந்தினியை கூப்பிட்டு உட்கார வைத்த என்ன சொன்னால் என்று கேட்க அமைதியாக இருக்கும் நந்தினி எங்க கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னாளா என்று கேட்கின்றனர். பிறகு அங்கு நடந்த விஷயங்களை நந்தினி மாதவி மற்றும் சுரேகாவிடம் சொல்லுகிறார். புடவை விஷயத்தை வைத்து நந்தினியை இவ்வளவு அசிங்கப்படுத்தி இருக்கா பாருக்கா இவன் நம்ம வீட்டுக்கு வந்தா அவ்வளவுதான் என்று சுரேகா சொல்ல இன்னும் 18 மணி நேரம் இருக்கு என்ன வேணா நடக்கலாம் பாத்துக்கலாம் என்று சொல்லுகிறார்.
உடனே அர்ச்சனா ரெடி ஆகி வர மாதவி அர்ச்சனாவின் கழுத்தில் மாலையை போடுகிறார் அர்ச்சனா அவர் அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு அனைவரும் மண்டபத்திற்கு கிளம்புகின்றனர். நந்தினி காரில் ஏற அர்ச்சனா பின்னாடி வண்டியில ஏறு என்று சொல்ல, அதுக்கு அடுத்து வந்த காரில் மினிஸ்டர் மனைவி மற்றும் அர்ச்சனாவின் தோழிகள் ஏற நந்தினி ஏறப் போகும்போது நந்தினியின் தோழி பின்னாடி வரப்போற வண்டியிலவா என்று சொல்லுகின்றனர். பின்னால் காய்கறி ஏற்றிக்கொண்டு போகும் வேன் வர நந்தினி அதுல ஏறிக்கிட்டுமா என்று கேட்க பின்னாடி ஏறிக்குமா என்று சொல்லுகிறார். அந்த வண்டியில் ஏறி நந்தினி கிளம்ப இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் அர்ச்சனாவின் வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து கொண்டிருக்க மாதவி சுரேகா மற்றும் மாதவியின் கணவர் இருவரும் இந்த கல்யாணம் எப்படின்னா நிக்கணும் என்று பிளான் போடுகின்றனர். காய்கறி வண்டியில் நந்தினி வந்து கொண்டிருக்கிறார்.
என் பையன் தாலி கட்டுற வரைக்கும் இந்த மண்டபத்தை விட்டு வெளியே போகக்கூடாது என்று அங்கு நான்கு, ஐந்து செக்யூரிட்டியிடம் சொல்லுகிறார். அதில் நந்தினியின் மாமாவும் இருக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.