Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் மூன்று முடிச்சு சீரியல், ப்ரோமோ வீடியோ வைரல்

moondru mudichu serial promo video

சன் டிவியில் புதியதாக மூன்று முடிச்சு என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக சன் டிவி சீரியல்கள் பெரும்பாலும் அனைவரையும் கவரும் வண்ணமாக இருக்கும். அந்த வகையில் சன் டிவியில் மூன்று முடிச்சு என்ற புதிய சீரியல் விரைவில் வெளியாக உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஈரமான ரோஜாவே சீரியல் பிரபலம் சுவாதி கோண்டே ஹீரோயின் ஆகவும் நியாஸ்.ஜெ ஹீரோவாகவும் நடித்து உள்ளனர். இது மட்டும் இல்லாமல் ப்ரீத்தி சஞ்சீவ் அம்மாவாகவும், நடிகர் பிரபாகரன் அப்பாவாகவும் நடித்துள்ளனர். கதாநாயகியின் தந்தையாக நடித்துள்ள தேனி முருகன் பாரதிராஜாவின் தம்பி ஆவார். இவர் சீரியலில் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

ஹீரோவின் அக்காவாக கிருத்திகாவும், ஹீரோயின் சுவாதியின் தங்கையாக நடிகை காவியா பெல்லு நடித்துள்ளார்.

தலைநகரம், உடன்பிறப்பே போன்ற படங்களில் இணை இயக்குனராகவும், வசனகர்த்தாகவும் பணியாற்றியவர் பட்டுக்கோட்டை ஆர்.குமரன், AVM நிறுவனத்தின் 175வது படமான “முதல் இடம்”படத்தின் இயக்குனரும் ஆவார். இவர் மூன்று முடிச்சு தொடரின் கதாசிரியராகவும் திரைக்கதை வசனத்தை இணைந்தும் எழுதுகிறார். மற்றும் ராட்சசி, தம்பி, சுல்தான் போன்ற படங்களுக்கு மட்டுமில்லாமல் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி போன்ற சீரியலுக்கும் வசனம் எழுதிய பாரதி தம்பி இணைந்து எழுதியுள்ளனர்.

விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா படத்தின் கதை ஆசிரியரும், ‘தென்னவன்’ படத்தை இயக்கிய இயக்குனருமான நந்தன் சி முத்தையா இந்த சீரியலை இயக்குகிறார்.அ.அன்பு ராஜா அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. இந்த சீரியலின் ஒளிப்பதிவு இயக்குனர் கே ஜி வெங்கடேஷ்.

இந்நிலையில் இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

moondru mudichu serial promo video
moondru mudichu serial promo video