Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சவால் விட்ட சூர்யா,சுந்தரவல்லி சொன்ன வார்த்தை,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சுரேகாவிற்கு ரேணுகா நகம் வெட்டிக் கொண்டிருக்க அருணாச்சலம் பரபரப்பாக வந்து உங்க அம்மா எங்க என்று கேட்ட எல்லாரும் உள்ளதாக இருக்கிறார்கள் என்று சொல்ல சரி வா என்று சொல்லி அருணாச்சலம் மேலே வருகிறார். அனைவரையும் கூப்பிட்டு நிற்க வைக்க மாதவி எதுவும் புரியாமல் யோசிக்கிறார். அனைவரும் வந்த பிறகு நந்தினியை பக்கத்தில் கூப்பிட சுந்தரவல்லி கோபமாக போக அவரை நிற்க வைத்து உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று சொல்லுகிறார்.

சூர்யாவுக்கு உடம்புக்கு முடியாமல் போனதிலிருந்து ஒரு பெரிய பிரச்சனை நடந்தது சூர்யாவிற்கு நந்தினி தான் மருந்து கலந்து கொடுத்தா என்று சண்டை போட்டீங்க. அதுவும் மாதவி நான் உன் மேல பழி போட்டேன்னு வீட்டை விட்டு போன அதுக்காக நந்தினி உன்கிட்ட மன்னிப்பு கேட்டா என்று சொல்ல அப்போ இவ்வளவு நடந்து இருக்கா டாடி என்கிட்ட யாருமே எதுவுமே சொல்லல என்று சொல்ல அதை எப்படி சொல்லுவா எல்லாரும் தான் ரவுண்டு கட்டி அடிக்கிறாங்களே எப்படி சொல்லுவா என்று சொல்லுகிறார். ஆனா டாக்டர் ஹாஸ்பிடலில் புட்பாய்சன் என்று சொன்னாங்க நீங்களும் அப்படித்தான் சொன்னீங்க என்று சொல்ல ஆனால் இவங்க யாரும் அத நம்பலையே என்று சொல்ல இப்ப என்ன சொல்ல வரீங்க என்று கேட்க உண்மையை சொல்ல போறேன் என்று சொல்லுகிறார். உடனே ரேணுகா மறைமுகமாக நின்று இவர்கள் பேசுவதை கவனித்து கொள்கிறார்.

இது என்ன தெரியுமா சூர்யாவோட பிளட் சாம்பிள் ரிப்போர்ட் அவரை என்ன சொன்னார் தெரியுமா சுந்தரவல்லி மாதவி இரண்டு பேரும் நல்லா கேட்டுக்கோங்க சூர்யாவோட பிளட் ல தப்பான மருந்து கலந்திருக்கிறது பொய்யில்ல உண்மை ஆனால் அந்த தப்பான மருந்து நாட்டு மருந்து கிடையாது அது மட்டும் இல்லாம அந்த மருந்தை டாக்டர் சீட்டு இல்லாமல் வாங்க முடியாது சொன்னாரு யாரோ சூர்யாவிற்கு கலந்து கொடுத்து இருக்காங்க அந்த யாரோ நீங்க யாரு என்று கேட்க குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். சூர்யாவோட உடம்புல அந்த மருந்து அளவு அதிகமாக ஆனதுனால தான் அட்மிட் பண்ற அளவுக்கு ஆயிருக்கு என்று சொல்ல, மறுபக்கம் ரேணுகா பயத்தில் நடுங்குகிறார். இதுக்கு நந்தினிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த ஆபத்தான மருந்த சூர்யாவுக்கு கொடுத்தது யாரு என்று கேட்க, சுந்தரவல்லி இந்த அளவுக்கு நம்ம வீட்டுல யார் பண்ணி இருப்பாங்க என்று கேட்க, உடனே அருணாச்சலம் அது யாரு என்பதை சீக்கிரமாக கண்டுபிடித்து ஆகணும் என்று சொல்லுகிறார்.

சூர்யா அருணாச்சலத்திடம் இவ்வளவு நாள் இல்லாம என்ன யாரு கொள்ள பாக்குறாங்க என்று சொல்ல எனக்கு அதுதான் புரியல அதுவும் இல்லாம அந்த பழிய தூக்கி நந்தினி மேல போட பார்த்து இருக்காங்க என்று சொல்லுகிறார். உடனே மாதவி நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க நீ அமைதியா இரு என்று சொல்லி விடுகிறார். இதை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசிப்போம் ஆனால் இதை காரணமாக வெச்சி இனிமேல் நந்தினியை திட்டாதீங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் சூர்யா ரூமில் நந்தினி கூப்பிட்டு ஒரு பக்கம் உன்னை கொலை பண்ண ட்ரை பண்ணி இருக்காங்க மறுபக்கம் என்னை கொல்ல ட்ரை பண்ணி இருக்காங்க இதெல்லாம் யார் பண்ணி இருப்பாங்க என்று சொல்ல எனக்கும் புரியல சார் என்று சொல்லுகிறார். இத கண்டிப்பா வீட்டுக்கு வெளியே இருந்து பண்ணி இருக்க மாட்டாங்க வீட்டுக்குள்ள இருக்குறவங்க தான் பண்ணி இருப்பாங்க அப்படிதானே என்று சொல்ல எனக்கு தெரியல சார் என்று நந்தினி போக, மீண்டும் சூர்யா நந்தினியை நிறுத்தி நம்ப ரெண்டு பேரையும் கொள்ள நினைக்கிறது ஒருத்தரா தான் இருக்கும் என்று சொல்லுகிறார். ஏற்கனவே இது சம்பந்தமா மாதவி அம்மா பிரச்சனை பண்ணிட்டாங்க என்று சொல்ல சரி இதுக்கு மேலயாவது உஷாரா இரு என்று சூர்யா சொல்லுகிறார். உடனே இதுல என்ன இருக்கு ஒரே பேட் ஸ்மல் இருக்கு என்று சொல்ல வேப்ப எண்ணெய் என்று சொல்லி சூர்யாவின் முகத்தின் முன்னே காட்ட இது குளோஸ் பண்ணு நாத்தம் அதிகமா இருக்கு என்று சொல்லுகிறார். இந்த நாத்தத்தை எப்படி பக்கத்துல வச்சிருக்க என்று சொல்ல, நீங்க குடிக்கிற சரக்குல மட்டும் சென்ட் ஸ்மெல்லா வருது என்று சொல்ல அதெல்லாம் தெய்வீக நறுமணம் குடிக்கிறவங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்று சொல்லுகிறார்.

உடனே ரேணுகா அர்ச்சனாவுக்கு போன் போட்டு இங்க என்னென்னமோ நடக்குது எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று சொல்ல என்னாச்சு என்று கேட்கிறார். பிறகு நடந்த விஷயங்களை அர்ச்சனாவிடம் சொல்லுகிறார். அப்படியா அதுக்கப்புறம் என்ன ஆச்சு என்று கேட்க, அருணாச்சலம் ஐயா எல்லாரையும் கூப்பிட்டு இத செஞ்சவங்க யாருன்னு கண்டுபிடிச்சே தீர்வேன் என்று சொல்லி இருக்கிறார் என்று சொல்லி பயப்பட அப்படி எல்லாம் ஒன்றும் ஆகாது. என்ன மருந்துன்னு தான் ரிப்போர்ட்ல தெரியும் யாரு கலந்திருக்காங்கன்னு தெரியாது என்று சொல்லுகிறார். அதுக்கப்புறம் ஒரு விஷயம் நடந்தது நீங்க கொடுத்த மருந்த கிச்சன்ல மறைச்சு வச்சிருந்த அதெல்லாம் நந்தினி இப்போ வேப்ப எண்ணெய் ஊத்தி வச்சிருக்கான் என்று சொல்ல, அது நந்தினி கையில தானே இருக்கு அதுவும் நல்லதுக்கு தான் என்று சொல்லிவிட்டு நீ பயப்படாத தைரியமா இரு என்று சொல்லுகிறார்.

நந்தினி வீடு பெருக்கி கொண்டிருக்க மாதவி சூர்யா சீக்கிரமே பத்தாவது மாசத்துல குழந்தை பிறக்கும் என்று சொன்னதை நினைத்து விட்டு நந்தினி இடம் வந்து நீ எதுக்கு இத பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்கின்றனர். இந்த மாதிரி நேரத்துல நீ இதெல்லாம் பண்ணக்கூடாது என்று சொல்லுகிறார். நீ இப்போ புது நந்தினி என்று சொல்ல, நீங்க பேசுறதை பார்த்தால் என் மேல ஏதோ தப்பு இருக்கிற மாதிரி தெரியுது என்று சொல்ல, நீங்களே இப்பதான் ரெசார்டுக்கு போய் சந்தோஷப்பட்டு வரீங்க இந்த நேரத்துல எந்த வேலையும் செய்யாத அப்பதானே குழந்தை உருவாகும் என்று சொல்ல அப்படி எல்லாம் எதுவும் கிடையாது என்று சொல்ல நீங்க சொல்ற மாதிரி எதுவும் நடக்கல என்று சொல்லிவிடுகிறார். எப்பவுமே பாசிட்டிவா நினைக்கணும் நெகட்டிவா நினைக்கக்கூடாது அப்பதான் எல்லாமே நல்லதா நடக்கும் என்று சொல்லிவிட்டு ரேணுகா மற்றும் கல்யாணத்தை கூப்பிடுகின்றனர். கொஞ்ச நாளைக்கு நந்தினி இந்த வீட்ல எந்த வேலையும் செய்யக்கூடாது. எல்லா வேலையும் நீங்க ரெண்டு பேரு தான் செய்யணும் நந்தினி அக்காவுக்கு என்ன ஆச்சு என்று கேட்க, நந்தினி மாசமா இருக்கா என்று சொல்லிவிட்டு, நந்தினி இடம் பத்திரமா இருக்கணும் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

நந்தினி ட்ரம் ஒன்றை தூக்கிக் கொண்டு கிச்சனுக்கு வர கல்யாணம் ஓடி வந்து நீ எதுக்குமா வெயிட் தூக்கிக்கிட்டு என்று அவரிடம் இருந்து வாங்கி கிராமத்தில் இருந்து வந்த புள்ள இது கூட உனக்கு தெரியாதா என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினி இடம் எனக்கு இப்போ குழந்தை வேணும் அதுவும் இம்மீடியேட்டா இப்பவே வேணும் என்று சொல்ல நந்தினி எனக்கு வேணாம் என்று சொல்கிறார். மறுபக்கம் ரேணுகா அர்ச்சனாவை நேரில் சந்திக்க மாதவி,சுரேகா , அசோகன், அருணாச்சலம் இந்த நாலு பில்லரையும் அடிச்சு காலி பண்ணிட்டா என்று விஷயத்தை சொல்லுகிறார்.

மறுபக்கம் சூர்யா இந்த டெண்டர் நான் எடுத்து ஜெயிச்சு காட்றேன் என சபதம் எடுக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 13-03-25