தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவிடம் நீங்கள் எல்லாம் பணக்காரவங்க நினைச்சது நெனச்ச நேரத்துல உங்களுக்கு கிடைக்கும் எதுக்காகவும் நீங்க ஏங்கி இருக்க மாட்டீங்க ஆனா நாங்க அப்படி கிடையாது மழை பேஞ்சா பாய் தலையணைய தூக்கிக்கிட்டு எங்க தூங்குறதுன்னு தெரியாம தவிச்சுக்கிட்டு இருக்கோம் எவ்வளவோ நாள் கோவில் திண்ணையில் தூங்கி இருப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்க அருணாச்சலம் இதை கவனிக்கிறார்.
ஒருவேளை நீங்க இந்த வீட்டை கட்டி இருந்தா உங்களுக்கு அந்த கஷ்டம் தெரிந்திருக்கும் எங்கள் ஊரில் எல்லாம் கஷ்டத்தினால பூர்வீக இடத்தை விக்கும் போது வாங்குறவங்க விக்கிறவங்களுக்கு மோதிரம் போடுவாங்க ஏன்னா அவங்க கஷ்டத்தோட வைக்கக்கூடாது என்பதற்காக தான் உங்களுக்கு வேணா இந்த வலி தெரியாமல் இருந்திருக்கலாம் ஆனா அருணாச்சலம் ஐயாவுக்கும் சுந்தரவல்லி அம்மாவுக்கும் இது மிகப்பெரிய மனக்கஷ்டத்தை கொடுக்கும். மூணு பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி இருக்காங்க அப்ப இந்த வீட அவங்களுக்கு எவ்வளவு முக்கியமா இருக்கும் எனக்கென்னமோ நீங்க இந்த வீட்டை விற்கிறது சரியா தோணலை என்று சொல்லுகிறார்.
இத சொல்றதுக்கு கூட எனக்கு உரிமை இல்ல தான் ஆனா சொல்லணும்னு தோணுச்சு என்று சொல்ல சூர்யா எதுவும் பேசாமல் வர அருணாச்சலம் சூர்யாவை கூப்பிட்டும் எதுவும் சொல்லாமல் சென்று விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.
