தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் டாக்டர் வந்து சூர்யா கிரகடிகல் கண்டிஷன தாண்டிட்டாரு, இனி பயப்பட எதுவும் இல்லை என்று சொல்ல குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர்.
சூர்யாவிற்காக கோவிலில் நந்தினி வேண்டுதல் செய்ய விஜியிடம் சூர்யா சார் சரியாகணும் அவர் உயிர் பொழச்சி வரணும் என்று சொல்லுகிறார். உனக்கு இப்படி ஆன உடனே அம்மாவால தாங்கிக்க முடியலடா என்று சுந்தரவல்லி சூர்யாவை பார்த்து அழ நந்தினி மயங்கி விழுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.