moondru mudichu serial today promo update 22-12-2024
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி, முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது எதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யாவின் நண்பன் வீட்டுக்கு வந்த அருணாச்சலம் உள்ளுக்குள்ள ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கு சூர்யாவும்,நந்தினியும் பிரிஞ்சிடுவாங்களோ என்று யோசிக்கிறேன். சூர்யாவிற்கும் நந்தினிக்கும் கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணனும் என்று சொல்லுகிறார். உடனே அவர்கள் இருவரும் நல்ல ஐடியா சார் சட்டப்படி அவங்க புருஷன் பொண்டாட்டியா ஆயிடுவாங்க என்று சொல்லுகிறார். இத சூர்யா கிட்ட சொன்னா கையெழுத்து போட்டுருவான் ஆனா நந்தினிக்கு தெரியக்கூடாது என்று சொல்கிறார் அருணாச்சலம். நந்தினி சம்பந்தப்பட்ட ப்ரூப் மட்டும் நீங்க ரெண்டு பேரும் எப்படியாவது எனக்கு வாங்கி அனுப்புங்க என்று சொல்ல விஜி சரிங்க ஐயா நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார்.
அந்த நேரம் பார்த்து நந்தினி வாசலில் வந்து நிற்க விஜி அவரை வரவேற்கிறார். நந்தினி இடம் என்னம்மா இங்கே என்று கேட்க சும்மா விஜி அக்காவை பார்த்து பேசலாம்னு வந்தா அய்யா என்று சொல்லுகிறார். சரி நீங்க பேசுங்க நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு அருணாச்சலம் கிளம்பி விடுகிறார். உடனே விஜி என்ன நந்தினி சொல்லாம கொள்ளாம வந்திருக்க என்று சொல்ல, உங்களுக்கு கால் பண்ண நீங்கதான் எடுக்கல என்று சொல்லுகிறார்.
பிறகு விஜி கணவரை கடைக்கு அனுப்பி விட்டு என்னக்கா இவ்வளவு காய்கறி இருக்கு என்று கேட்க எப்பையாவது கேட்கிறவங்களுக்கு கொஞ்சம் சமைச்சு கொடுப்பேன் என்று சொல்லுகிறார். உடனே மனசில் நந்தினி நம்மளுக்கும் இது மாதிரி வேலை கிடைக்குமான்னு எப்படி கேட்கிறது அவங்க செய்ற வேலையில் நம்ம எப்படி பங்கு கேட்க முடியும் என்று யோசித்து விட்டு பிறகு வாங்க ஹெல்ப் பண்றேன் என்று சொல்லி கிச்சனுக்கு செல்கின்றனர்.
பிறகு அருணாச்சலம் வக்கீலுக்கு போன் போட்டு ரிஜிஸ்டர் பண்ண வேண்டும் என்ற விஷயத்தை சொல்ல அவர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக சொல்லுகிறார். கிச்சனில் நந்தினியும்,விஜியும் வேலை பார்த்துக் கொண்டிருக்க அருணாச்சலம் விஜிக்கு போன் போடுகிறார். ரெஜிஸ்டர் பண்றதுக்கு மண்டபத்துல இருந்து ரசீது வாங்கிட்டோமா, ஆனா நந்தினி ஓட ஆதார் கார்டு மற்றும் ஓட்டு ஐடி வேண்டும் அது மட்டும் இல்லாமல் அவர்கள் குடும்பத்தில் இருக்கிற பேர் எல்லாம் வேணுமா கொஞ்சம் கேட்டு சொல்லு என்று சொல்லுகிறார். நான் கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன் சார் என்று போனை வைக்கிறார் விஜி. சரி பேச்சு கொடுத்துகிட்டே வாங்கிடலாம் என்று இருவரும் நந்தினியிடம் வருகின்றனர். பேச்சு கொடுத்துக் கொண்டே அனைத்தையும் விசாரித்துவிட்டு அருணாச்சலத்திற்கு அனுப்பி விடுகின்றனர். பிறகு அருணாச்சலம் சரிமா இதுக்கு அப்புறம் நான் பாத்துக்குறேன் என்று சொல்லி போனை வைத்துவிட்டு இந்த விஷயம் மட்டும் சுந்தரவல்லிக்கு தெரியாம பார்த்துக்கணும் நந்தினிக்கு கடைசி வரைக்கும் தெரியக்கூடாது என்பதை யோசித்துக் கொண்டு நல்லபடியா நடக்கணும் என்று நினைக்கிறார்.
விஜி மற்றும் நந்தினி சமைக்க விஜியின் கணவர் கருவேப்பிலை உருவி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இன்னுமா கருவேப்பிலை உருவுரீங்க என்று கேட்க அம்பது ரூபாய்க்கு வாங்கிட்டேன் என்று சொல்ல சும்மா கொடுப்பாங்களே அண்ணா என்று நந்தினி சொல்ல, நீயே பார் நந்தினி என்று சொல்ல சரி விடுங்க தெரியாம பண்ணிட்டாரு என்று சொல்லுகின்றனர். பிறகு மூவரும் பேக் பண்ணுகின்றனர். இன்னும் நிறைய ஆர்டர் வருது ஆனா செய்ய முடியல என்று சொல்ல, ஆள் வச்சுக்கோங்க என்று நந்தினி சொல்லுகிறார். விஜி அதெல்லாம் சரிப்பட்டு வராது நந்தினி சொல்லாமல் கொள்ளாமல் நின்னுடுறாங்க என்று சொல்ல நந்தினி நான் வேணா சமைக்க வரேன் என்று சொல்ல விஜி அதிர்ச்சி அடைகிறார். நீங்க எவ்ளோ ஆர்டர் வேண்டுமென்றாலும் எடுங்க பாத்துக்கலாமா ஹெல்ப் பண்ற என்று சொல்லுகிறார்.
உடனே விஜியின் கணவர் உன் புருஷன் நினைச்சா பத்து ஹோட்டல் கூட வெலைக்கு வாங்கலாம் ஆனா நீ சமைக்க போறியா என்று கேட்க புரிஞ்சுக்கோங்கன்ன எனக்கு அந்த வீட்ல இருக்கவே இஷ்டம் இல்ல. நான் என் குடும்பம் என்னோட தங்கச்சிங்கள பாக்கணும் என்று சொல்ல, அப்ப கூட உன்னை எப்படி நந்தினி வேலைக்கு கூப்பிட முடியும். நீ சூர்யா அண்ணனோட வைஃப். அந்த வீட்டோட மருமக அப்படி இருக்கும்போது உன்னை எப்படி வேலைக்கு சேர்க்க முடியும் என்று சொல்லுகிறார். தர்ம சங்கடப்படுத்தறேன்னு நினைக்காதீங்க என்னோட தங்கச்சி காலேஜ் படிக்க காசு தேவைப்படுது அதனால தான்கா என்று சொல்லுகிறார். ஆனா உங்கள கஷ்டப்படுத்துற மாதிரி இருந்தா பண்ண வேண்டாம் என்று சொல்ல, சரி அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல இதுக்கு அப்புறம் வர ஆர்டர் எதுவா இருந்தாலும் நான் சொல்றேன் நீ வந்து சமைச்சு கொடு என்று சொல்ல நந்தினி சந்தோஷப்படுகிறார். ஆட்டோ வர மூவரும் வேக வேகமாக சாப்பாட்டை கட்டி அனுப்பி விடுகின்றனர்.பிறகு நந்தினி முகம் கழுவிட்டு நான் கிளம்புகிறேன் என்று ஒரு பாத்ரூமுக்குள் செல்ல, விஜி கணவரிடம் என்னங்க நந்தினி இப்படி சொல்றா என்று சொல்ல சரி பாவமா அந்த பொண்ணு தங்கச்சிங்களோட படிப்பு செலவுன்னு சொல்லும்போது என்ன பண்ண முடியும் விடு பாத்துக்கலாம் என்று சொல்ல இப்பதான் அருணாச்சலம் ஐயா வந்து ரிஜிஸ்டர் பண்றது நந்தினிக்கு தெரிய வேணாம்னு சொன்னாங்க என்று சொல்லிக் கொண்டிருக்க நந்தினி வந்து நிற்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் இந்த வீடு என் கையில இருந்தது ஆனா அதை உடைச்சுட்டா, அந்த நந்தினி.நான் சொல்றதுக்கு எல்லாம் சரின்னு சொல்றவரு என்னை எதிர்த்து பேசுறாரு என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் அருணாச்சலம் பத்திரிகையை பூஜை ரூமில் வைத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க சுந்தரவல்லி என்ன பத்திரிக்கை என்று கேட்கிறார். இதெல்லாம் மாறனும்னா அந்த நந்தினி இங்கிருந்து வெளியே போகணும் அதுக்கான வழியை நானே உருவாக்கிறேன் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா…
நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
கருப்பு நிற உடையில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும்,அ.அன்பு ராஜா,…
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர்…