Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா எடுத்த முடிவு ,சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

moondru mudichu serial today promo update 29-11-24

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் இன்ஸ்பெக்டர் நந்தினியின் அப்பாவிடம் ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுங்க என்று கேட்கிறார் ஆனால் அவர் எங்களோட குலசாமி எங்கய்யா அவர் மேல என்னால கம்ப்ளைன்ட் கொடுக்க முடியாது என்று சொல்லி உறுதியாக சொல்லிவிட அப்போ உங்க பொண்ண கண்டு பிடிக்கணும்னா எப்படி என்று கேட்கிறார். அங்கு வந்த சூர்யா கம்பளைண்ட் நான் கொடுக்கிறேன் என்று சொல்லுகிறார். அவர் அப்பா நான் புருஷன் என் பொண்டாட்டி காணும்னா நான் கம்ப்ளைன்ட் தரேன் அது யாருன்னு எனக்கு தெரியும் என்று சொல்லுகிறார். உடனே யார் என்று இன்ஸ்பெக்டர் கேட்க தி கிரேட் சுந்தரவல்லி தான் என்று சொல்லி கம்ப்ளைன்ட் கொடுக்கிறார்.

போலீசை கொஞ்ச நேரம் வெளியே இருக்க சொன்ன அருணாச்சலம் சூர்யாவிடம் உங்க அம்மா அந்த தப்பு பண்ணி இருக்க மாட்டார் நீ கேஸ் கொடுக்காத என்று சொல்ல சூர்யா எனக்கு கன்ஃபார்மா தெரியும் இவங்க தான் பண்ணி இருப்பாங்க எனக்கு வேற யார் மேலயும் சந்தேகம் இல்லை நந்தினி இல்ல சொல்லி ஸ்வீட் கொடுக்கும்போது அந்த பேச்சு நடவடிக்கை எப்படி இருந்தது என்று பார்த்தீர்களா என்று கேட்கிறார் பிறகு என்னோட வாழ்க்கையில இந்த அந்தஸ்து கௌரவத்துக்காக எவ்வளவு பெரிய தப்பு பண்ண அவன் உங்களுக்கு தெரியாதா டாடி என்று சொல்லுகிறார் இவ்வளவு நாளா நான் உனக்காக தான் சூர்யா பேசின ஆனால் இந்த விஷயத்துல சுந்தரவல்லி தப்பு பண்ணி இருக்க மாட்டா சொல்றத கேளு அவ அப்படிப்பட்ட ஆள் கிடையாது என்று மறுபடியும் சொல்ல சூர்யா முடிவில் உறுதியாக இருக்கிறார் சுந்தரவல்லி எனக்காக எதுவும் பேச வேண்டாம் அவன் என்ன முடிவு பண்றானோ பண்ணிக்கட்டும் என்று சொல்லிவிடுகிறார்.

மறுபக்கம் போலீஸ் மினிஸ்டருக்கு ஃபோன் போட்டு இங்கு நடந்த விஷயங்களை சொல்லுகிறார்.உடனே அர்ச்சனா சுந்தரவல்லி தூக்கி உள்ள போடுங்க என்று சொல்லுகிறார். அந்தப் பொண்ணோட அப்பா கேஸ் குடுக்கல சூர்யா தான் கொடுத்திருக்கிறார் என்று சொல்ல இன்னும் சந்தோஷப்படுகின்றனர்.இப்போ அந்த பொண்ணு எங்க இருக்கு என்று இன்ஸ்பெக்டர் கேட்க அந்த வீட்டு வெளியே தான இருக்கீங்க அங்க இருக்கிற ஒரு கார் டிக்கில தான் அவ இருக்கா என்று சொல்ல எந்த கார் என்று கேட்க அவர் என்ன கொண்டு இருந்து அதே காரில் தான் என்று சொல்லுகின்றனர். உடனே போலீஸ் அதிர்ச்சியாகி இப்ப என்ன செய்ய வேண்டும் என்று கேட்க சுந்தரவல்லி அரெஸ்ட் பண்ணுங்க ரெண்டு நாள் கழிச்சு உங்க டீமோட மோப்ப நாயை கொண்டு வந்தீங்கன்னா அவங்க டெட்பாடியா இருக்கிறது கண்டுபிடிங்க அப்புறம் கம்ப்ளைன்ட்ட கேசா மாத்தி ஒரேடியா உள்ள தள்ளுங்க என்று சொல்லி விட போலீசும் சரியென சம்மதிக்கிறது.

வீட்டுக்குள் வந்த போலீஸ் என்னாச்சு என்று கேட்க சூர்யா உறுதியாக இருப்பதால் வேறு வழி இல்லாமல் போலீஸ் சுந்தரவல்லி இடம் நீங்களே வந்தா உங்களுடன் கௌரவத்துக்கு நல்லது என்று சொல்லி அழைத்து சென்று விடுகின்றனர். அருணாச்சலம் ஏதாவது பண்ணி வெளியே வந்துவிடலாம் என்று சொல்ல எதுவும் பண்ண வேண்டாம் என் பையனே என் மேல கம்ப்ளைன்ட் கொடுத்தா எல்லோரும் என்ன நினைப்பாங்க என்று பேசிக்கொண்டு வருகின்றனர். மறுபக்கம் அசோகன் நீதான பண்ண என்று மாதவியை சந்தேகப்படுகிறார் நான் அப்படி பண்ணல என்று மாதவி சொல்லுகிறார் அப்போ உங்க அம்மா தான் பண்ணாங்களா என்று கேட்க எங்க அம்மா இவ்வளவு சீப்பா எல்லாம் பண்ண மாட்டாங்க என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் சிங்காரம் சூர்யாவிடம் இதுக்கும் அம்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று தான் எனக்கு தோணுது என்று சொல்ல ஆனால் எனக்கு சந்தேகம் இருக்கு என்று சொல்லுகிறார். நீங்க கெஞ்சுறதுனால இங்கே ஏதாவது மாறப்போகுதா அவன் என்ன வேணா பண்ணட்டும் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார்.

மறுபக்கம் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பவர்கள் இந்த காரில் யாரோ இருக்காங்க என்று திறந்து பார்க்க சொல்லுகின்றனர் பார்த்தால் அதில் நந்தினி இருப்பதை அனைவரும் தெரிந்து கொள்கின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று இன்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 29-11-24

moondru mudichu serial today promo update 29-11-24