Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பணத்துடன் வந்து நிற்கும் சூர்யா, ரவுடிகள் சொன்ன விஷயம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

moondru mudichu serial today promo update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும்,அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியை நினைத்து யோசித்து கண் கலங்கி கருப்பசாமி போட்டோ முன் நின்று விளக்கேற்றி ஊதுபத்தி காட்டி விட்டு இதுவரைக்கும் நான் உன்கிட்ட எதுவும் கேட்டது கிடையாது நந்தினி தான உன்னை கூட இருந்து டெய்லியும் உன்ன கும்பிடுவா உன் கிட்ட டெய்லியும் பேசுவா அப்படி இருந்த அவளுக்கு எதுக்கு ஏதாவது பிரச்சனை ஏன் வந்துகிட்டே இருக்கு.இப்போ அவ எங்க இருக்கான்னு எனக்கு தெரியல அவை என்ன நூறு வாட்டி சூர்யா சார் என்று கூப்பிடுவா,அவ ஒரு அப்பாவியான பொண்ணு அவளுக்கு எதுக்கு இப்படி எல்லாம் நடக்கணும் இதுவரை நான் எந்த சாமி கிட்டயும் ரிக்வெஸ்ட் பண்ணி கேட்கல என்று கையெடுத்து கும்பிட்டு என் நந்தினியை என்கிட்ட எடுத்துட்டு வந்து சேர்த்துடு என்று கண்கலங்கி அழுகிறார்.

மூச்சுக்கு 300 வாட்டி உன்ன பத்தி மட்டும்தான் பேசுவா, நீ எல்லாமே செய்வ அப்படின்னு அவ சொன்னா அப்படி என்றால் நந்தினியை கண்டுபிடித்து கொடு நானும் நம்புறேன் நீ தான் கண்டுபிடித்து தரணும் என்று அழுகிறார். சூர்யா பெட்டில் உட்கார்ந்து படுக்க தூக்கம் வராமல் இருக்கிறது உடனே சரக்கு பாட்டில் எடுத்து குடிக்க போக அதுவும் குடிக்க முடியாமல் அமைதியாக படுத்து விடுகிறார். மறுநாள் காலையில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க அசோகன் சாம்பார்ல உப்பு கொட்டி வச்சிருக்க என்ன ஆச்சு என்று கேட்க சுரேகா கூட்டாளி இல்லாத சோகம் தான் என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி வீட்டில் யாரும் இல்லைனா உனக்கு என்ன வேலையோ ஒழுங்கா பாரு என்று திட்ட, இன்ஸ்பெக்டர் அருணாச்சலத்திற்கு போன் போட்டு ஸ்டிரிடா தேடிக்கிட்டு இருக்கோம் தைரியமா இருங்க கண்டுபிடிச்சிடலாம் என்று சொல்லி ஃபோனை வைக்க அருணாச்சலம் டைனிங் டேபிளில் வந்து உட்காருகிறார். கல்யாணம் சாப்பிடச் சொல்ல மோர் மட்டும் போதும் என சொல்லுகிறார் மோர் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க நேத்துல இருந்து சாப்பிடாம இருக்கீங்க வேற ஏதாவது செஞ்சு கொடுக்கவா என கல்யாணம் கேட்கிறார்.

அருணாச்சலம் வேண்டாம் என சொல்ல சரி நீ சாப்டியா என்று கேட்க பசிக்கல ஐயா கூடவே இருந்த புள்ள மூச்சுக்கு 300 வாட்டி அண்ணான்னு கூப்பிடும் சாப்பிட்டீங்களா அண்ணா அப்படின்னு கேட்கும். எனக்கு கூட பொறந்தவங்க யாரும் என்ன சாப்பிட்டியானு கேட்க மாட்டாங்க அந்த புள்ள கேட்கும் போது என் கூட பிறந்த தங்கச்சியாதான் பாக்குறேன்.அந்தப் பிள்ளையை கடத்துட்டாங்கன்னு நீங்க பேசுவதை கேட்கும் போது மனசு பதறுது ஐயா என்று சொல்லி கண்கலங்கி அழுகிறார்.சிலருக்கு எதுவுமே இல்ல டெய்லியும் சமைச்சு போட்டு துணியை துவைத்து போட்டுட்டு இருக்குற ஒரு பொண்ணு இல்லையென்ற வருத்தமோ கவலையோ யார் முகத்துலயாவது இருக்கா என்று கேட்கிறார். உடனே சுந்தரவல்லி அவ வீட்டு விட்டு போன நாங்க எதுக்கு சாப்பிடாம இருக்கணும் அவ உங்ககிட்டையோ இல்ல உங்க பையன் கிட்டயும் ஏதாவது சொல்லிட்டு போனாளா என்று கேட்கிறார். அவ இந்த வீட்டோட வேலைக்காரி ஒரு வேலைக்காரி போயிட்டா இன்னொரு வேலைக்காரி வந்துருவா அவ்வளவு தானே என்று சொல்ல உடனே சூர்யா வந்து நிற்கிறார். உங்களுக்கு வெக்கமாவே இல்லையான்னு கேட்க மாட்டேன் அதெல்லாம் உங்களுக்கு இல்லை.

ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் கேட்டுக்குறேன் அவ கையால விதவிதமா ருசியா திண்ணிங்களே அதுக்காவது அந்த பொண்ண பத்தி நெனச்சு பாக்கறீங்களா என்று கேட்கிறார். இந்த மாதிரி சுயநலமா நான் யாரையும் பார்த்ததில்லை கூடவே இருந்த ஒரு பொண்ணு இப்போ இல்லன்னா உங்களுக்கு எப்படி சாப்பாடு இறங்குது என்று கேட்க, வீட்டு வேலைக்காரி காணாம போனா நாங்க எப்படி சாப்பிடாம இருக்க முடியும் எங்களுக்கும் பசிக்கும் என்று சொல்ல அவ தானா போனாலா இல்ல யாராவது கடத்தி வச்சிருக்காங்களான்னு இன்னைக்கு கண்டுபிடிச்சிடுவேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். உடனே நந்தினியை கடத்தி வைத்திருக்கும் வட்டிக்கார பெண்மணி வந்து உட்கார அவரிடம் என்னை விட்டுடுங்க என்று சொல்ல கொஞ்ச நேரம் அமைதியா இரு சத்தம் போட்டு உசுர விட்டுடாத என்று அந்த பெண்மணி சொல்லுகிறார்.

உடனே ரவுடி இடம் இவ புருஷனுக்கு போன் போடு என்று சொல்ல,போன் போட்டு உன் பொண்டாட்டி இங்க தான் இருக்கா என்று சொல்ல யாருடா நீ என்று சூர்யா கேட்க நந்தினி சூர்யா சார் சூர்யா சார் என கத்துகிறார். நந்தினியின் குரலை சூர்யா கவனிக்க உன் பொண்டாட்டி இங்க தான் இருக்கா அதுக்கு முன்னாடி நான் சொல்றதை கேட்கணும் என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவின் ரவுடிகள் பணத்தை கேட்க சூர்யாவும் விக்ரமும் பணத்துடன் அவர்கள் சொன்ன இடத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர் உடனே ரவுடி போன் போட்டு பணம் ரெடியா என்று கேட்க ரெடி தான் என்று சொல்லுகிறார் நந்தினி எங்கே என்று கேட்க எங்க கூட தான் இருக்காங்க என்று சொல்லுகிறார்.அது மட்டும் இல்லாம போலீஸ்ல எங்கேயாவது சொன்னேனா உன் பொண்டாட்டி கழுத்தை திருப்பி போட்டுட்டு போய்கிட்டே இருப்போம் என்று மிரட்டுகிறார்.

நான் எதுவும் போலீஸ் கிட்ட எல்லாம் சொல்லல என்று சொல்ல சரி நான் இதுக்கு அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு போன் பண்றேன்னு சொல்லி போனை வைத்து விடுகிறார் உடனே சூர்யா டென்ஷன் ஆகிவிடுகிறார் என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update