முகத்தை பொளிவாக வைத்துக் கொள்ள முருங்கை உதவுகிறது.
நாம் அன்றாட உண்ணும் உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் காய்களில் ஒன்று முருங்கைக்காய். முருங்கைக்காய் மட்டும் இல்லாமல் இலை பூ விதை போன்றவற்றிலும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஏனெனில் இதில் இரும்பு தாமிரம் மெக்னீசியம் பாஸ்பரஸ் சுத்தமாகும் போன்ற பல ஆரோக்கியம் நிறைந்த சத்துக்கள் இருக்கிறது.
கொலஸ்ட்ராலை குறைப்பதில் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட முருங்கை முகப்பொலிவிற்கும் உதவும் என்பதை அறிவீர்களா?
நாம் முகத்திற்கு ரசாயனம் கலந்த கலவையை சேர்ப்பதற்கு பதிலாக இயற்கையாக இருக்கும் முருங்கையில் நம் முகத்தை பொலிவாக்க உதவும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.
இதில் இருக்கும் வைட்டமின் சி சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை மேம்படுத்துகிறது
முருங்கை இலைகளை அரைத்து பேஸ்ட் ஆக பயன்படுத்தி வந்தால் அதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு முகப்பருக்களை நீக்கும்.
மேலும் முருங்கைப் பொடியை பன்னீரில் சேர்த்து தடவி வருவதும் முகப்பொலிவிற்கு உதவும்.