உடல் எடையை குறைக்க முருங்கை பொடி பயன்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமனால் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றன. உடல் பருமனால் நம் உடலில் பல்வேறு நோய்கள் வரக்கூடும். அதனை தவிர்க்க பல்வேறு டயட்களும் உடற்பயிற்சிகளும் செய்வார்கள். அப்படி உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க முருங்கை பொடி பயன்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா அது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க.
முருங்கை பொடியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால் இது பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கி உள்ளது. உடல் எடையை குறைக்க வெதுவெதுப்பான நீரில் முருங்கை பொடியை சேர்த்து குடித்து வர வேண்டும்.
இது மட்டும் இல்லாமல் நீரிழிவு நோய் பிரச்சினையில் இருந்து விடுபடவும் பலவீனம் மற்றும் ரத்தசோகையில் இருந்து பாதுகாக்கவும் முருங்கை பொடி மிகவும் பயன்படுகிறது.
எனவே பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கைப் பொடியை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.