தமிழகத்தில் கொரோனாவின் வேகம் பலமடங்கு அதிகரித்துள்ளதால் தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் இன்று முதல் அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. மறு உத்தரவு வரும் வரை தியேட்டர்களை திறக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரிலீசுக்கு தயாராக உள்ள புதிய படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக புதிய படங்கள் ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சினிமா தயாரிப்பாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காக ஓடிடியிலேயே புதுப்படங்களை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நயன்தாரா நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘துக்ளக் தர்பார்’, திரிஷா நடித்துள்ள ‘ராங்கி’ படங்களையும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.