கொரோனா நோய் தொற்று காரணமாக பல மாதங்களாக திரைப்படங்கள் எதுவும் திரையரங்கில் வெளியாகவில்லை, அதனை தொடர்ந்து கடந்த பொங்கல் அன்று விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்பு ஈஸ்வரன் வெளியானது.
வெறும் 50 % இருக்கைகளுடன் வெளியான இந்த இரண்டு திரைப்படங்களையும் காண ரசிகர்கள் அலை மோதினர் என்று தான் கூறவேண்டும்.
இந்நிலையில் ரசிகர்கள் தந்த ஆதரவால் தற்போது ஏப்ரல் மாதம் முக்கிய நடிகர்களின் திரைப்படங்களை வெளியிட முடிவெடுத்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.
ஆம், வரும் ஏப்ரல் மாதத்தில் சுல்தான், கர்ணன், டாக்டர், துக்ளக் தர்பார் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இப்படங்களை ஒவ்வொரு வார இடைவெளியில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.