Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து விலகிய ஜோடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

mr-and-mrs-chinnathirai-4-first-elimination update

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று தான் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. 3 சீசன் முடிவடைந்த நிலையில் நான்காவது சீசன் தொடங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் போட்டியாளர்களில் ஒருவராக சமீபத்தில் திருமணமான அஜய் கிருஷ்ணா, ஜெஸ்ஸி தம்பதியினர் கலந்து கொண்டனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் டைட்டிலை வெல்ல வேண்டும் என பலரும் சொல்லி வரும் ஜோடியாக இவர்கள் இருந்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் கடந்த வாரம் நடந்த எலிமினேஷன் ரவுண்டில் தனிப்பட்ட காரணங்களால் இவர்கள் கலந்து கொள்ளாமல் போன நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 mr-and-mrs-chinnathirai-4-first-elimination update

mr-and-mrs-chinnathirai-4-first-elimination update