Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி – சமூக வலைத்தளத்தில் பதிவு

Mrunal Thakur tests positive for COVID 19

இந்தி திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் முர்னல் தாகூர். மராட்டியத்தை சேர்ந்த இவர் இந்தி, மராத்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்த டூபன் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகை முர்னலுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவலை அவருடைய சமூக வலைதளபக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லேசான அறிகுறியுடன் தொற்று உறுதியாகியுள்ளது. நான் நலமுடன் உள்ளேன். மேலும், நான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். டாக்டர்கள் தெரிவித்த அறிவுறுத்தல்களை நான் கடைபிடித்து வருகின்றேன். என்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் விரைவில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அனைவரும் கவனமாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.