நேற்றைய தினம் சந்திராயன் 3 “விக்ரம்” லேண்டர் எனப்படும் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதனால் தென் துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு என்ற மிகப்பெரிய சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதன் வெற்றியை இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜிம்மில் இருந்த தொலைக்காட்சி மூலம் விண்கலம் நிலவில் தரை இறங்குவதை ஆர்வத்துடன் கண்டு களித்த CSK அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் இந்தியா வெற்றி பெற்றதை அங்குள்ள அனைவருடனும் இணைந்து உற்சாகத்துடன் கைதட்டி கொண்டாடியுள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.