தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் யோகி பாபு தற்போது பிரபல கிரிக்கெட் அணி வீரர் எம்.எஸ்.தோனி அவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் முதல் படமாக உருவாகும் ‘லெட்ஸ் கெட் மேரீட்’ என்னும் திரைப்படத்திலும் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சமீபத்தில் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த நிலையில் தீவிரமான கிரிக்கெட் பிரியரான யோகி பாபுவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அந்த பேட்டிற்கு முத்தம் கொடுத்து கேப்டன் டோனிக்கு நன்றி தெரிவித்து யோகி பாபு வெளியிட்டு இருக்கும் வீடியோ ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்து வைரலாகி வருகிறது.
Thank you @msdhoni sir pic.twitter.com/MVMePW8vAB
— Yogi Babu (@iYogiBabu) May 30, 2023