இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அவர்கள் புதிதாக தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்தில் முதல் படமாக தமிழில் “லெட்ஸ் கெட் மேரிட் (LGM)” என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் கதாநாயகனாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்க அவருக்கு ஜோடியாக லவ் டுடே திரைப்படத்தின் கதாநாயகி இவானா நடிக்கிறார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த போஸ்டரை தல தோனி படத்தின் இயக்குனர் தமிழ்மணியுடன் சேர்ந்து வெளியிட்டுள்ளார். அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகிறது.
Our Thala @msdhoni with the first look poster of #LGM, along with our Director @ramesharchi.
Thank you for all the love and the wonderful response to #LGM’s first look. pic.twitter.com/yu71enCdrn— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) April 11, 2023