தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை நிறைவு செய்துள்ளது.
மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் மலேசியா வாழ் தமிழரான முகேன் ராவ். பாடகரான முகேன் ராவ் பல ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார்.
மலேசிய வட்டாரங்களில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக உலகம் முழுவதும் அறிந்த நபராக மாறினார்.
தற்போது இவர் தமிழில் ஹீரோவாக நடிக்க ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். படத்தை நானி, நித்யா மேனன் ஆகியோர் இணைந்து நடித்த வெப்பம் திரைப்படத்தை இயக்கிய அஞ்சனா அலிகான் இயக்கவுள்ளார்.
மேலும் இப்படத்தில் முகேன் ராவ்க்கு ஜோடியாக நடிக்க ஷிவானி நாராயணன் மற்றும் திவ்யபாரதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஷிவானி நாராயணன் சீரியல் நடிகை என்பது அனைவரும் அறிவர். மேலும் திவ்யபாரதி என்பவர் ஜிவி பிரகாஷ் ஜோடியாக பேச்சிலர் என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
இறுதியில் இவர்கள் இருவரில் முகேன் ராவ் ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.