Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இசையமைப்பாளர் டி. இமானின் முன்னாள் மனைவி இப்படியொரு நிகழ்ச்சியில் வருகிறாரா?

Music composer D Imman's ex-wife coming to a show like this

தமிழன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான்.

அதன்பிறகு அவர் ஏகப்பட்ட படங்கள் இசையமைத்தாலும் எளிதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. தற்போது அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய இடம் கிடைத்துள்ளது.

2008ம் ஆண்டு டி.இமான், மோனிகா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு வெரோனிகா, பிளஸ்ஸிகா என இரு மகள்கள் உள்ளார்கள். 13 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு சில பிரச்சனைகளால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

பின் சில மாதங்களில் இமான் அமீலி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அவருக்கு முதல் கணவருடன் பிறந்த ஒரு மகள் இருக்கிறார்.

தற்போது என்ன தகவல் என்றால் விரைவில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் 6வது சீசனில் டி.இமானின் முதல் மனைவி மோனிகா பங்கேற்க இருக்கிறார் என தகவல்கள் வருகின்றன. ஆனால் மோனிகா தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை.