Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தமன் போட்ட பதிவு

music-composer-thaman-shared-a-photo-with ms dhoni

தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் கடைசியாக தமிழில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களும் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதையடுத்து பல படங்களில் இசையமைத்து வரும் இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை சந்தித்து அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்திருக்கிறார். தீவிரமான கிரிக்கெட் ரசிகரான தமன் அப்புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், தோனி என் கிரிக்கெட் கடவுள், அவரை சந்தித்தபோது எனது கனவு நனவாகியது. என் இதயம் இப்போது மகிழ்ச்சியில் துள்ளி குறிக்கிறது. நன்றி தோனி, உங்களின் பில்லியன் கணக்கான உண்மையான ரசிகர்களில் ஒருவரை மகிழ்ச்சியடைய செய்தீர்கள். இந்த அற்புதமான சந்திப்பு முதலமைச்சர் ஸ்டாலினாலும், அமைச்சர் உதயநிதியாலும் மட்டுமே சாத்தியமானது. என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கிறார்.