Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜிவி பிரகாஷ் முதல் முறையாக பிரபல நடிகர் படத்திற்கு இசையமைக்கிறார்.. வைரலாகும் சூப்பர் தகவல் இதோ

Music Director GV Prakash Update

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், பிரபல நடிகருக்கு முதல் முறையாக இசையமைக்கிறார்.

‘மாஸ் மகாராஜா’ ரவிதேஜா முதன் முறையாக பான்- இந்தியா படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இதனை முன்னணி இயக்குனர் வம்சி இயக்குகிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராக இருக்கும் இந்த திரைப்படத்தை ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படத்தை தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். இதில் நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது.
’டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தின் பிரமாண்டமான வெளியீட்டு விழா மாதப்பூர், எச்ஐசிசியில் உள்ள நோவடெல்லில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்து கொண்டார். இப்படத்தின் ப்ரீ லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபல நடிகர் ரவிதேஜாவின் படத்திற்கு முதல் முறையாக ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்திற்கு ஆர் மதி ஐஎஸ்சி ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுத, அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

Music Director GV Prakash Update
Music Director GV Prakash Update