தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் சந்தோஷ் நாராயணன். தனது இசையால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் ரசிகர் ஒருவரின் விவகாரமான கேள்விக்கு சுவாரசியமாக பதில் அளித்து அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். அப்பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது ரசிகர் ஒருவர் சந்தோஷ்நாராயணனின் twitter பக்கத்தில், ‘மகான் திரைப்படத்தின் அரியாசானம் பாடலின் கிளிப்பிங்கைப் பகிர்ந்து, இந்த பாடலுக்கு இசையமைக்கும் முன்னர் எந்த ட்ரக் எடுத்துக் கொண்டீர்கள்’ என்ற கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு சந்தோஷ் நாராயணன் அவர்கள் சிரித்தபடி ‘எந்த ட்ரக்கும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த காட்சியைதான் லூப் மோடில் பார்த்துக் கொண்டிருந்தேன்’ எனக் கூறி அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் சண்டை காட்சியை குறிப்பிட்டு இருக்கிறார். அது தற்போது அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Ha Ha no drugs . Literally had this scene playing in loop 🧨🧨 pic.twitter.com/bgI8dv7hbq
— Santhosh Narayanan (@Music_Santhosh) February 26, 2023