Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்துக்கு இசையமைக்கப்போவது யார் தெரியுமா?

Music Director Thaman joins RC15

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ள இயக்குனர் ஷங்கர், தற்போது அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்திற்கு தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தமன் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுவரை ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய ஷங்கர், தற்போது முதன்முறையாக தமன் உடன் கூட்டணி அமைத்துள்ளார்.

முன்னதாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தில் இசையமைப்பாளர் தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்கு பின் அவர் நடிப்பை விட்டுவிட்டு முழு நேர இசையமைப்பாளராக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Music Director Thaman joins RC15
Music Director Thaman joins RC15