Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

முதல் நீ முடிவும் நீ திரை விமர்சனம்

muthalum nee mudivum nee movie review

பள்ளி, கல்லூரி காலத்தின் வாழ்க்கையை எப்போது படமாக்கினாலும் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது. இந்த படமும் நம் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. 90களின் இறுதியில் பள்ளி இறுதியாண்டில் இருக்கும் நண்பர்கள் கூட்டம் இனம்புரியாத ஈர்ப்பு, அன்பு, மாணவர்களுக்கேயுரிய மோதல் என்று எல்லாமுமாகச் சேர்ந்து பள்ளி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். சிலருக்குள் காதல் மலர்ந்தும், சிலர் காதல் நிராகரிப்பட்டும் கலவையான உணர்ச்சிகளோடு பள்ளிப் படிப்பை நிறைவு செய்கிறார்கள்.

இடைவேளை வரைக்குமான இந்த வாழ்க்கைப் பதிவுகள் ரசிக்கும்படியாக படமாக்கப்பட்டிருக்கிறது.

வகுப்பறை கலாட்டாக்கள், கேசட் கடை கேலிகள், பிரிவு உபசார விழா நேரத்தில் நடக்கும் காட்சிகள் என்று நம்மைப் பள்ளிக் காலத்திற்கே அழைத்துச் செல்கிறார் இயக்குநர் தர்புகா சிவா.

இடைவேளைப்பிறகு எதிர்ப்பாராக வாழ்க்கைப் பின்னணியோடு சந்திக்கும் நண்பர்கள் காதல் கைகூடாத, தவறுகளைத் திருத்தி கொண்டிருக்கலாமே என்று நினைக்கிற பக்குவமான மனநிலையுடன் சந்திக்கிறார்கள். உணர்ச்சிப் பூர்வமான அந்த காட்சிகள் கலங்க வைக்கிறது. அதுவும் எப்போதும் கேலியும், கிண்டலுமாக இருக்கும் சைனீஷ் என்கிற ஹரீஷ் நடிப்பும் வாழ்க்கைப் பின்னணியும் கேத்தரின் என்கிற பூர்வா ரகுநாத் வாழ்க்கையும் உருக்கம்.

நாயகனாக வரும் வினோத் என்கிற கிஷான் தாஸ், அவருக்கு இணையாக ரேகா என்கிற மேத்தா ரகுநாத் ஆகியோர் நல்ல தேர்வு. மற்றபடி அம்ரிதா மண்டரின், சரண்குமார் ராகுல் கண்ணன், மஞ்சுநாத, வருண் ராஜன், சச்சின் நாச்சியப்பன், கௌதம் ராஜ், நரேன், ஹரிணி ஆகியோர் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இசையமைப்பாளராக இருக்கும் தர்புகா சிவா இயக்குநராக மாறி அழகான வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார். சுஜித் சரங் ஒளிப்பதிவு, ஸ்ரீஜித் சரங் எடிட்டிங் காட்சிகளை அழகூட்டுகின்றன. தர்புகா சிவா இசையில் முதல் நீ முடிவும் நீ பாடல் க்ளாஸ் பாடல்

மொத்தத்தில் ‘முதல் நீ முடிவும் நீ’ ஆட்டோகிராப்.